பரீட்சை முடிவு; மீள்திருத்த விண்ணப்பங்கள் இன்று முதல் ....!
பரீட்சை முடிவு; மீள்திருத்த விண்ணப்பங்கள் இன்று முதல் ....!

பரீட்சை முடிவு; மீள்திருத்த விண்ணப்பங்கள் இன்று முதல் ....!
2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள், 25/06/2026 முதல் ஜூலை 08 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் அந்த தகவலின்படி, பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் தங்கள் விண்ணப்பங்களை இணையவழியில் தனித்தனியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
வேறு ஏதேனும் முறைகளில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.doenets.lk-க்குச் சென்று, “Our Services” (எங்கள் சேவைகள்) என்பதன் கீழ் உள்ள “Exam Information Centre” ( பரீட்சை தகவல் மையம்) என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே பயனர் கணக்கு வைத்துள்ளவர்கள் தங்கள் பரீட்சை எண் மற்றும் தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
கணக்கு இல்லாத புதிய பயனர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை எண் மற்றும் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்திப் பதிவு செய்யலாம்.
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கு முன், தொழில்நுட்ப மற்றும் பொதுவான அறிவுறுத்தல்களைக் அவதானமாக படிக்குமாறும், வழிகாட்டுதல் காணொளியைப் பார்வையிடுமாறும் பரீட்சைகள் திணைக்களம் விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மீள் திருத்தக் கட்டணம் ஒரு பாடத்திற்கு ரூ. 200 ஆகும்; இக்கட்டணத்தை கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை அல்லது அஞ்சல் நிலையங்கள் மூலமாகச் செலுத்தலாம்.
கட்டணம் செலுத்திய பிறகு, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தைப் PDF வடிவில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்; அதேவேளையில், இது குறித்த குறுஞ்செய்தி (SMS) அறிவிப்பும் அனுப்பப்படும்.
விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தை ஒருமுறை மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
கட்டணம் செலுத்திய பிறகு அதைத் திரும்பப் பெற முடியாது.
மேலதிக தகவல்களுக்கு, விண்ணப்பதாரர்கள் ‘1911’ என்ற அவசர அழைப்பு எண் அல்லது ‘0112 785 231’ உள்ளிட்ட அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.
விபத்து: 40 பேர் வரை மருத்துவமனையில் அனுமதி!
மாத்தறை, தலால்ல வீதியின் வஜிரவங்ச மாவத்தை பகுதியில் இன்று (26/06/2026) காலை இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்தொன்று சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் உடனடியாக மாத்தறை மற்றும் பதீகம மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலிப் பகுதியில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த பேருந்தும், தங்கல்ல பகுதியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த பேருந்துமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த விதம் குறித்து மாத்தறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்காலிகமாக நிறுத்துமாறு கோரிக்கை
மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காக, நாளை (27) முதல் 29-ஆம் திகதி வரை,கூரைகளின் மீது பொருத்தப்பட்டுள்ள 300 கிலோவோட் அலகுகளுக்கு மேற்பட்ட சூரிய மின்சக்தி கட்டமைப்புகளைக் கொண்ட நுகர்வோர், அவற்றைச் செயலிழக்கச் செய்யுமாறு வலுசக்தி பிரதி அமைச்சர் முஹம்மது இல்யாஸ் முஹம்மது அர்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று (26) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், இந்த மின் கட்டமைப்புகளைச் நிறுத்தி வைப்பதன் மூலம், கடந்த வெசாக் பண்டிகை தினத்தில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையைத் தவிர்க்க முடியும் என குறிப்பிட்டார்.
(TIN) பெறுவதற்கான கால வரையறை - வெளியான அறிவிப்பு!
வரி செலுத்துநர் அடையாள இலக்கமானது (TIN) யூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என எவ்விதமான காலவரையறையும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்று யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
பின்வரும் விபரங்களை மக்களுக்கு அரசாங்க அதிபர் தெரியப்படுத்தியுள்ளார்.
01.வரி செலுத்துநர் அடையாள இலக்கமானது (TIN) யூன் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என எவ்விதமான காலவரையறையும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை.
02.வரி செலுத்துநர் அடையாள இலக்கத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. அவ்வாறு கட்டணம் செலுத்துவதோ அல்லது பெற்றுக் கொள்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும்.
03.ஏற்கனவே வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் உரியவர் தனது தேசிய அடையாள அட்டையினைக் காண்பித்து வரி செலுத்துநர் அடையாள இலக்கச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும்.
04.வரி செலுத்துநர் அடையாள இலக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்காவிடின் நிகழ்நிலை (Online) முறைமை மூலமாகவோ அதாவது www.ird.gov.lk அல்லது உள்நாட்டு இறைவரித் திணைகளத்தில் உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்பிப்பதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போது பதிவுகளை மேற்கொள்பவர்களுக்கான TIN சான்றிதழ் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். 05.மேலதிக விபரங்களுக்கு 0212217333 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிய முடியும்.
எனவே மேற்படி விபரங்களுக்கு அமைய, பொதுமக்கள் எதுவித பீதியும் அடையத் தேவையில்லை என அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முதலாம் தர மாணவர் சேர்க்கைக்கான சுற்றுநிருபம் வெளியீடு!
No comments