அம்பாறை பெண் வைத்தியர் மரணம் ....!

  

அம்பாறை பெண் வைத்தியர் மரணம்  ....!




அம்பாறை பெண் வைத்தியர் மரணம்  ....!




அம்பாறை பெண் வைத்தியர் மரணம்  ....!

 


இலங்கையை உலுக்கியுள்ள பெண் இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பான விசாரணையில், 


சினிமா படங்களையே மிஞ்சும் அளவிற்கான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


* என்ன நடந்தது?


அம்பாறை மருத்துவமனையில் பணியாற்றிய தர்ஷனி என்ற இளம் பெண், கனடா செல்லும் கனவில் தனது காதலனை நம்பி 1.5 கோடி ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.


காதலனின் பேச்சை நம்பி தனது அரசாங்க வேலையையும் இராஜினமா செய்துள்ளார்.


ஆனால், அந்த போலி மென்பொருள் பொறியாளர் செய்த துரோகம் யாராலும் நம்ப முடியாதது. 


* அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்! 


நுவரெலியாவில் வைத்து தர்ஷனியை படுகொலை செய்த சந்தேக நபர், ஆதாரங்களை மறைக்க அந்த பெண்ணின் உடலை காரில் ஏற்றிக்கொண்டு பல்லேகெலே வரை சென்றுள்ளார்.


அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், காரில் சடலம் இருக்கும் போதே, எவ்வித பதற்றமும் இன்றி பாடல் பாடிக்கொண்டே காரைச் செலுத்தியுள்ளார் அந்த சந்தேக நபர். 


* தோற்றுப் போன திட்டமும் தப்பி ஓட்டமும்


உடலை எரிக்க எடுத்த முயற்சி தோல்வியடையவே, காரை தெல்தெனிய மருத்துவமனை அருகே விட்டு விட்டு தப்பியோடியுள்ளார்.


தனது மற்றொரு காதலி மற்றும் குழந்தைகளுடன் முகமூடி மற்றும் புர்கா அணிந்து கொண்டு,


யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் பேருந்துகளில் அலைந்து திரிந்து பொலி ஸாரை ஏமாற்ற முயன்றுள்ளார்.


* சிக்கியது எப்படி?


யாழ்ப்பாணத்தில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்ட இந்த நபருக்கு, ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் குப்பை லாரி ஓட்டுநர் ஆகியோர் உதவியுள்ளமை அம்பலமாகியுள்ளது.


பணத்திற்காக ஒரு உயிரை பறித்ததோடு மட்டுமல்லாமல், பலரது வாழ்க்கையையும் இந்த நபர் சீரழித்துள்ளார்.


காதல் என்ற பெயரில் ஏமாற்றும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!



2 உயிர்களைக் காத்த டெலிவரி பாய்..! 


நேற்று அதிகாலை, இருள் மெல்ல பிரிந்து கொண்டிருந்த அந்த நேரத்தில், இரிட்டி பாலத்தில் ஒரு நிமிடம் இதயமே நின்றுவிட்டது போன்ற ஒரு பரபரப்பு அரங்கேறியுள்ளது!


தற்கொலை முயற்சி! 


மரணப் போராட்டம்!


பாலத்தின் மேலிருந்து இளம் பெண் ஒருவர் திடீரென கீழே ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றில் குதித்தார்.


இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஒரு வெளிமாநில தொழிலாளி, ஒரு நொடியும் யோசிக்காமல் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற ஆற்றில் குதித்துள்ளார்.


ஆனால், மரண பயத்தில் இருந்த அந்தப் பெண், தன்னை காப்பாற்ற வந்தவரையே பதற்றத்தில் தண்ணீருக்குள் அமிழ்த்த முயன்றார்.


இதனால் காப்பாற்றச் சென்ற நபரும் நீரில் மூழ்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட, இருவருமே ஆற்றில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். 


பாலத்தின் மேல் வாகனங்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டு, ஏதோ விபத்து என்று நினைத்து வண்டியை நிறுத்தினார் அந்த டெலிவரி ஊழியர். 


இவர் “மன்சூன் மஷ்ரூம்” (Monsoon Mushroom) நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.


கீழே ஆற்றில் இரண்டு பேர் மரணத்தின் விளிம்பில் தத்தளிப்பதைக் கண்ட அமேக், அடுத்த நொடி தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் 'டைவ்' அடித்தார். 


அமேக் நீந்திச் சென்றபோது, அந்த இருவரும் தண்ணீரை குடித்துவிட்டு மயங்கும் நிலைக்குச் சென்றிருந்தனர்.


ஆனால், அமேக்கின் அசாத்திய துணிச்சலும், மின்னல் வேக சாதுரியமும் அந்த இரண்டு உயிர்களையும் பத்திரமாகக் கரை சேர்த்தது.


தற்போது இருவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் நலமாக உள்ளனர்.


ஆர்டர் டெலிவரி செய்யப் போன இடத்தில், கடவுள் போல வந்து இரண்டு பேருக்கு மறுவாழ்வை டெலிவரி செய்திருக்கிறார் இந்த அமேக். 


தன் உயிரை துச்சமாக மதித்து, மனிதநேயத்தின் உச்சமாய் விளங்கிய அமேக்கிற்கும்,


முதலில் குதித்த அந்த வெளிமாநில தொழிலாளிக்கும் ஒட்டுமொத்த இணையதளமே எழுந்து நின்று சல்யூட் அடித்து வருகிறது.





யூடியூப் பார்த்து   ----   வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்ற பெண் உயிரிழப்பு..!




தமிழ் நாட்டின் திருப்பூர், ஊத்துக்குளி அருகே, யூடியூப் காணொளிகளைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்க்க முயன்றதால், 32 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்திருந்த நிலையில், இரண்டாவது குழந்தையை வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவிக்க முயற்சித்துள்ளார்.


அதன்படி பிரசவத்திற்குப் பிறகு சிக்கலுக்குள்ளாகி  அந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.


பிறந்த குழந்தை நலமாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





ரூபாய் பெறுமதி 8 சதவீதம் வீழ்ச்சி..!




2026 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. 


மத்திய வங்கியின் தரவுகளின்படி, வெள்ளிக்கிழமை (26) வர்த்தக முடிவில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.22 ரூபாயாகவும், விற்பனை விலை 341.87 ரூபாயாகவும் காணப்பட்டது. 


இலங்கை ரூபாயின் தற்போதைய பெறுமதி வீழ்ச்சியானது, 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கடந்த மாதம் தெரிவித்திருந்தார். 


ஏனெனில், இம்முறை வீழ்ச்சியானது உள்நாட்டு தவறான நிர்வாகத்தினால் அல்லாமல், உலகளாவிய சூழ்நிலைகளால் உந்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 


2022 மார்ச்-ஏப்ரல் காலப்பகுதியில், ஏனைய பிராந்திய நாணயங்கள் ஸ்திரமாக இருந்தபோது, உள்நாட்டு காரணிகளினால் மட்டுமே ரூபாயின் மதிப்பு 370 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். 


இருப்பினும், தற்போதைய நிலையில் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் அமெரிக்க டொலர் வலுவடைந்து வருவதால், 
பிராந்திய நாடுகளிலும் நாணய பெறுமதி வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது.





கோல் அடித்து மெஸ்ஸி புதிய சாதனை..! 




உலகக் கிண்ண வரலாற்றில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை அர்ஜென்டினா அணியின் லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார். 


 (27/06/2026) டல்லாஸ் (Dallas) நகரில் ஜோர்டான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினாவுக்காக கோல் அடித்ததன் மூலம், அவர் ஜஸ்ட் ஃபோன்டைன் (Just Fontaine) மற்றும் ஜெய்ர்சின்ஹோ (Jairzinho) ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார்.


போட்டியின் 80ஆவது நிமிடத்தில் மாற்று வீரராகக் களமிறங்கிய மெஸ்ஸி, 25 மீற்றர் தூரத்திலிருந்து ‘ஃப்ரீ கிக்’ மூலம் பந்தை வலைக்குள் செலுத்தி அணியின் கோல் எண்ணிக்கையை 3-1 என உயர்த்தினார்.


மெஸ்ஸியின் இந்தத் தொடர் கோல் சாதனை, கட்டாரில் நடைபெற்ற 2022 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அர்ஜென்டினாவின் 2-1 என்ற வெற்றியின் போது தொடங்கியது. 


அதனைத் தொடர்ந்து நெதர்லாந்து மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு எதிராகவும் அவர் கோல் அடித்தார். 


பின்னர் பிரான்ஸுடன் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிப் போட்டியில் இரண்டு கோல்களை அடித்து, இறுதியில் உலகக் கிண்ணத்தையும் கைப்பற்றினார்.


அவர் தனது இந்த கோல் வேட்டையை 2026 உலகக் கிண்ணத் தொடரிலும் தொடர்ந்துள்ளார். இத்தொடரில் அல்ஜீரியாவுக்கு எதிராக ஹெட்-ட்ரிக் (Hat-trick) கோல்களையும், அர்ஜென்டினாவின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரியாவுக்கு எதிராக இரண்டு கோல்களையும் அவர் அடித்திருந்தார். 


தற்போது ஜோர்டான் அணிக்கு எதிராக அடித்த கோலுடன் சேர்த்து, 
உலகக் கிண்ணப் போட்டிகளில் அவர் அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்து புதிய சாதனையாகப் பதிவாகியுள்ளது.


இதற்கு முன்னர், பிரான்ஸ் வீரரான ஜஸ்ட் ஃபோன்டைன் 1958 ஆம் ஆண்டிலும், பிரேசில் வீரரான ஜெய்ர்சின்ஹோ 1970 ஆம் ஆண்டிலும் தொடர்ச்சியாக 6 உலகக் கிண்ணப் போட்டிகளில் கோல் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



அம்பாறை பெண் வைத்தியர் மரணம்  ....!

 

 

 


No comments

Theme images by fpm. Powered by Blogger.