வட்ஸ்அப்பில் வரப்போகும் புதிய ....!

   

வட்ஸ்அப்பில் வரப்போகும் புதிய ....!




வட்ஸ்அப்பில் வரப்போகும் புதிய ....!




வட்ஸ்அப்பில் வரப்போகும் புதிய ....!

 


தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டாமல், பயனர் பெயரை (Username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் வசதியை, வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. 


உலகம் முழுவதும் உள்ள 3 பில்லியன் பயனர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்குள் இந்த வசதி வழங்கப்படவுள்ளது. இது கட்டாயமானதொன்றல்ல என்பதுடன், விருப்பமுள்ளவர்கள் மட்டும் தங்களுக்குத் தேவையான பயனர் பெயரை (Username) ஒதுக்கிப் பெற்றுக்கொள்ள முடியும். 


இதேவேளை, தாங்கள் தேர்ந்தெடுத்த பயனர் பெயரை எந்த நேரத்திலும் நீக்குவதற்கோ அல்லது மாற்றுவதற்கோ பயனர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஒரு பயனர் பெயருக்காக அதிகபட்சமாக 35 எழுத்துக்கள் அல்லது குறியீடுகளை மட்டுமே பயன்படுத்த முடியும். 


பிரபல அரசியல்வாதிகள் அல்லது பிரபலங்களின் பெயர்களை மற்றவர்கள் போலி கணக்குகளுக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 


வட்ஸ்அப் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு இன்னமும் தொலைபேசி இலக்கம் கட்டாயமாகும் என்ற போதிலும், இந்த பயனர் பெயர் (Username) அம்சம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு மற்றவர்களால் உங்களது தொலைபேசி இலக்கத்தைப் பார்க்க முடியாது. 


இதன் மூலம், குறிப்பாக குழு அரட்டைகளில் (Group Chats) உள்ள அறிமுகமில்லாத நபர்களுடன் தங்களது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்களுக்கு அதிகளவிலான தனியுரிமைப் பாதுகாப்பு (Privacy) கிடைக்கும் என, வட்ஸ்அப் நிறுவனத்தின் தயாரிப்புத் தலைவர் அலிஸ் நியூட்டன்-ரெக்ஸ் (Alice Newton-Rex) தெரிவித்துள்ளார்.




இலங்கையில் அரங்கேறிய மற்றுமொரு கொடூரம்..!



இலங்கையின் கண்டி மற்றும் மாத்தளைப் பகுதிகளில் சமூக வலைத்தளங்களையே உலுக்கியுள்ள ஒரு மிகக் கொடூரமான குற்றச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


தனது காதலனை நம்பிச் சென்ற இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த இந்தத் துயரம், ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


கண்டி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், தன் காதலனைச் சந்திப்பதற்காக மாத்தளை - வில்முவா பகுதிக்குச் சென்றுள்ளார்.


மூன்று மாடி பங்களா - காதலனின் நண்பருக்குச் சொந்தமான மூன்று மாடி வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண், அங்கு காதலனால் முதலில் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.


அதோடு நிறுத்தாமல், அந்தப் பாவி தனது நண்பர்கள் மூவரையும் தொலைபேசி மூலம் அங்கு வரவழைத்துள்ளான்.


மதுபோதையில் இருந்த காதலன் மற்றும் அவனது நண்பர்கள் மூவரும் சேர்ந்து, அந்தப் பெண்ணை இரவு முழுவதும் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளனர்.


இதிலொரு கொடூரம் என்னவென்றால், அடுத்த நாள் அந்தப் பெண் கடத்தப்பட்ட மற்றொரு வீட்டின் 55 வயது பராமரிப்பாளரும் இதில் அடங்குவர். 


மறுநாள் அந்த நரகத்தில் இருந்து எப்படியோ தப்பித்த அந்தப் பெண், பேருந்து மூலம் கண்டிக்குச் சென்றுள்ளார்.


எனினும், அதிக இரத்தப்போக்கு மற்றும் உடல்நிலை மோசமடைந்ததால் உடதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


பின்னர் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அவசரமாக மாற்றப்பட்டார்.


அங்கு பரிசோதித்த மருத்துவர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியிடம் (JMO) தனக்கு நேர்ந்த கொடூரத்தை அந்தப் பெண் தைரியமாக வாக்குமூலமாக அளித்துள்ளார். 


பெண்ணின் வாக்குமூலத்தை அடுத்து உடதும்பர பொலிஸார் விசாரணையைத் தொடங்கி, வழக்கை வில்முவா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.


வில்முவா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் யு. சுமேத பண்டார மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஜே. பி. அனோமா குமாரி தலைமையிலான அதிரடிப் படையினர், குற்றவாளிகள் நான்கு பேரையும் உடனடியாகக் கைது செய்துள்ளனர். 


கைது செய்யப்பட்ட 4 மிருகங்களும் தற்போது நாவுல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.



மொத்த அரச வருமானம் வீழ்ச்சியடையும்..! 




2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த அரச வருமானம் வீழ்ச்சியடையக்கூடும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


2027ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட நிதி மூலோபாய அறிக்கையின்படி, மானியங்கள் உள்ளிட்ட மொத்த அரச வருமானம் 2025இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16.7 சதவீதமாகக் காணப்பட்டது. எனினும், அது 2026ஆம் ஆண்டில் 15.8 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என கணிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக அரசாங்கத்திற்கு ஒருமுறை மாத்திரம் கிடைக்கக்கூடிய வரி வருமானம் கணிசமாக அதிகரித்திருந்தது. 


தற்போது அந்த வருமானச் சேகரிப்பு வழமைக்குத் திரும்பியுள்ளமையே இந்த வீழ்ச்சிக்கான முதன்மைக் காரணம் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


கடந்த 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலப்பகுதியில், நாட்டின் அரச வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.4 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்திருந்தது. இது உலகிலேயே மிகக் குறைந்த மட்டங்களில் ஒன்றாகும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இதன் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய வரிக் கொள்கைகள் மற்றும் வருமான நிர்வாகச் சீர்திருத்தங்கள் காரணமாக வரி வலையமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், வரி ஏய்ப்புகள் மற்றும் இழப்புக்களைக் குறைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


உள்நாட்டுச் சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட போதிலும், மத்திய கிழக்கில் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி சந்தையில் ஏற்படக்கூடிய தடங்கல்கள் காரணமாக, எதிர்காலத்தில் அரச வருமான இலக்குகளைத் தக்க வைத்துக் கொள்வது பெரும் சவாலாக அமையலாம் என நிதி அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது.





நாம் இறந்த பிறகு நமது கைரேகையை வைத்து,




க்ரைம் த்ரில்லர் திரைப்படங்களைப் பார்க்கும் போது நம்மில் பலருக்கும் இந்த சந்தேகம் வந்திருக்கும்.இதற்கான நேரடியான பதில் - இல்லை!


இன்றைய நவீன ஸ்மார்ட்போன்களில் இறந்தவரின் கைரேகையைப் பயன்படுத்தி போனை Unlock செய்வது என்பது முற்றிலும் சாத்தியமற்றது.


அதற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப காரணங்கள் இதோ  மின் கடத்துத்திறன் (Electrical Conductivity)இன்றைய போன்களில் பெரும்பாலும் 'Capacitive Fingerprint Sensors' பயன்படுத்தப்படுகின்றன.


இவை வெறும் கைரேகையின் கோடுகளை மட்டும் ஸ்கேன் செய்வதில்லை,உயிருள்ள மனித தோலில் இயற்கையாகவே இருக்கும் மிகச்சிறிய மின்சாரத்தை (micro-currents) அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன.


இறந்த பிறகு உடலில் இந்த மின்திறன் முழுமையாக நின்றுவிடும் என்பதால், சென்சார் அந்த விரலை ஒரு மனித விரலாகவே ஏற்றுக்கொள்ளாது. 


 Liveness Detection (உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் தொழில்நுட்பம்) நவீன போன்களின் பாதுகாப்பு தொழில்நுட்பம் மிகவும் அட்வான்ஸ்டு.


இவை நாடித்துடிப்பு (Pulse), தோலுக்கு அடியில் உள்ள ரத்த ஓட்டம் மற்றும் உடல் வெப்பநிலையை ஆராய்ந்து, உள்ளிடுவது "உயிருள்ள ஒருவரின் விரல் தானா?" என்பதை உறுதி செய்த பிறகே போனை Unlock செய்யும்.


 தோலின் தன்மை (Changes in Skin Tissue)உயிர் பிரிந்த சில மணிநேரங்களிலேயே, தோலின் ஈரப்பதம் முழுமையாகக் குறைந்து, தோல் சுருங்கிவிடும்.


இதனால் கைரேகையின் மேடு பள்ளங்கள் (ridges and valleys) அதன் அசல் வடிவத்தை இழந்துவிடும்.எனவே அதிநவீன சென்சார்கள் கூட அந்த ரேகையை நிராகரித்துவிடும்.


சுருக்கமாக சொல்லப்போனால் வெறும் கைரேகையை ஒரு புகைப்படம் போல ஸ்கேன் செய்யும் மிகப்பழைய 'Optical Scanners' உள்ள போன்களில் வேண்டுமானால் இறந்த உடனேயே முயற்சி செய்தால் வாய்ப்பிருக்கலாம்.


ஆனால், இன்று நாம் பயன்படுத்தும் நவீன ஸ்மார்ட்போன்களில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களை ஏமாற்றுவது என்பது நடக்காத காரியம். 




வீட்டிற்கே தீ வைத்த கணவன்..! 




மொரட்டுவ, எகொடஉயன பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கோபமடைந்த கணவர் ஒருவர்,தாம் வசித்து வந்த இருமாடி வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மொரட்டுவ, எகொடஉயன, சாகர மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மேல் மாடியில் தீ பரவியதையடுத்து,புகை மற்றும் தீப்பிழம்புகள் எழுவதாக கிடைத்த அவசர தகவலின் பேரில் தீயணைப்புப் பிரிவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.


மூன்று தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.


இந்த தீ விபத்தில் வீட்டின் மேல் மாடியில் இருந்த ஒரு அறையும், அங்கிருந்த பொருட்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்த எகொடஉயன பொலிஸார், வீட்டிற்கு தீ வைத்ததாகக் கூறப்படும் கணவரை கைது செய்துள்ளனர்.


இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொடஉயன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.கோபத்தின் உச்சம் ஒரு வீட்டையே தீக்கரை ஆக்கியது. 





மகனைத் தேடிச் சென்ற தாய் கிணற்றில் விழுந்து பலி 




கலேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னகொம்புர, துபார வாவிக்கு அருகில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் விழுந்து தாயொருவர் உயிரிழந்துள்ளதுடன்,அவரது 10 வயது மகள் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உயிரிழந்த தாய் மற்றும் காணாமல்போன மகள் ஆகிய இருவரும் தலகிரியாகம பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) இரவு குறித்த தாயின் மகன், மீன்பிடிப்பதற்காக துபார வாவிக்குச் சென்றுள்ளார்.


எனினும், நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த தாய் தனது 10 வயது மகளையும் அழைத்துக்கொண்டு மகனைத் தேடி நள்ளிரவில் வெளியே சென்றுள்ளார்.


இதன்போது, இருள் சூழ்ந்த பகுதியில் தேடலில் ஈடுபட்ட அவர்கள், எதிர்பாராத விதமாக,துபார வாவிக்கு அருகில் தோண்டப்பட்டிருந்த ஆழமான விவசாயக் கிணறு ஒன்றுக்குள் தவறி விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் மற்றும் பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது, 45 வயதுடைய தாயின் சடலம் கிணற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அதேவேளை கிணற்றுக்குள் மூழ்கி காணாமல் போயுள்ள 10 வயது சிறுமியை மீட்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கலேவெல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.





வட்ஸ்அப்பில் வரப்போகும் புதிய ....!

 

 

 


No comments

Theme images by fpm. Powered by Blogger.