2025 GIT பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு_...!

2025 GIT பரீட்சை பெறுபேறுகள்

 வெளியீடு...!




2025 GIT பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு_...!




2025 GIT பரீட்சை பெறுபேறுகள்

 வெளியீடு_...!

 

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள்  (20.07.2026) வெளியிடப்பட்டுள்ளன.

 

இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 200,235 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்ததோடு,

 

அவர்களுள் பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 199,598 ஆகும்.

 

மேலும் 637 தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் இதில் உள்ளடங்குவர்.

 

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 1,669 பரீட்சை மத்திய நிலையங்களில், 325 இணைப்பு மத்திய நிலையங்களின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இப்பரீட்சைக்கு இம்முறை 147,407 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

 

விண்ணப்பதாரர்கள் தங்களது பரீட்சை சுட்டிலக்கத்தை சரியாக உள்ளிடுவதன் மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk ஆகியவற்றிற்குள் பிரவேசித்து பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி முதல் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக பெறுபேறு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

அனைத்து பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் https://onlineexams.gov.lk/eic இணையத்தளத்தின் 'Personal Account Login' ஊடாக தங்களது பரீட்சை சுட்டிலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு பெறுபேறு ஆவணத்தை (Results Schedule) பதிவிறக்கம் செய்ய முடியும்.

 

அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தி,

 

https://onlineexams.gov.lk/eic இன் 'School Account Login' பகுதிக்குள் பிரவேசித்து, அந்தந்த பாடசாலையின் முழுமையான பெறுபேறு ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து அச்சிடப்பட்ட பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 

அனைத்து மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் தத்தமது வலயத்திற்குரிய பெறுபேறு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்வதற்காக பயனர் பெயர்களும் கடவுச்சொற்களும் வழங்கப்பட்டுள்ளன.

 

இந்த பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் வினவல்களிருப்பின், பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

 

உடனடி அழைப்பு இலக்கம்: 1911

தொலைபேசி இலக்கங்கள்: 011284208 / 0112784537 / 0112785922

தொலைநகல் (Fax) இலக்கம்: 0112784422

 




விதை போன்ற உணவை சாப்பிட்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

 

கந்தளாய் பாடசாலை ஒன்றில் சிறுவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை பகிர்ந்து சாப்பிட்டதில், 22 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த சம்பவம் (20.07.2026) காலை இடம்பெற்றுள்ளது.

 

இலங்கையில் தீவிரமடையும் அதிகூடிய வெப்ப அலை! பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் தீவிரமடையும் அதிகூடிய வெப்ப அலை! பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை உணவு ஒவ்வாமை

 

கந்தளாய் பாடசாலை ஒன்றில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் வீட்டிலிருந்து கொண்டுசென்ற விதை போன்ற உணவை சக மாணவர்களுடன் பகிர்ந்து உண்டுள்ளார்.

 

அதன்பின்னர் அந்த உணவை உண்கொண்ட அனைவரும் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அவர்களில் 20 ஆண் பிள்ளைகளும், 2 பெண் பிள்ளைகளும் அடங்குகின்றனர். இதில் 5 மாணவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, குறித்த மாணவன் வழக்கமாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சூரியகாந்தி விதைகளை பாடசாலைக்கு கொண்டு வந்து நண்பர்களுடன் பகிர்ந்து உண்பது வழமையாக இருந்துள்ளது.

 

இன்றும் சூரியகாந்தி விதைகள் என நினைத்து, வீட்டில் இருந்த ஆமணக்கு (Castor) விதைகளையும் அவற்றுடன் சேர்த்து கொண்டு வந்து பகிர்ந்து உண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

 

இதன் காரணமாகவே மாணவர்களுக்கு உடல்நலப்பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

 

சம்பவம் தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

 

 

 

 

 

இரசாயனம் மூலம் பழங்களைப்

 பழுக்க வைப்பதைத் தடுக்கத்

 திட்டம்!

 

நச்சு இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

 

நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அமைச்சர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

 

வாழைப்பழம், மாம்பழம் மற்றும் பப்பாசிப்பழம் போன்றவற்றுக்கு இவ்வாறான நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்துவது சமூகத்தில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த கட்டமாக இவ்வாறான நச்சு இரசாயனங்களைப் பயன்படுத்தும் இடங்களைச் சோதனையிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

 

தகுந்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் வியாபாரிகள் இந்த முறையைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்றால், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

 

 

 

 

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று கையளிக்க திட்டம்

 

பாராளுமன்றம் இன்று (21) மீண்டும் கூடவுள்ளது.

 

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று முற்பகல் 09.30 மணிக்குபாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்றப் பொதுச்செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

இன்றைய தினம் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 119 மற்றும் 120 இன் கீழ் இரண்டு தீர்மானங்களை அங்கீகரிப்பதற்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை விசேட பிரேரணையாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் திட்டம் தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய (COPA) நடத்திய விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பது தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.

 

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) விசாரணைகளின் போது வெளிப்படுத்திய தகவல்கள் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைப்பது தொடர்பிலும் இன்று விவாதம் நடைபெறவுள்ளது.

 

அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை பொது மனுக்கள் பற்றிய குழுவின் செயற்பாடுகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

இதனிடையே, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்றைய தினம் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சிகளும் இணைந்து குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, எதிர்க்கட்சியின் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நடத்தும் விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

 

 

 

 

டெங்கு மரணங்கள் 56 ஆக உயர்வு:

 77,000 ஐ கடந்த பாதிப்பு

 

டெங்கு நோய் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், அதனுடன் மொத்த டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்வடைந்துள்ளது.

 

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 77,000 ஐ கடந்துள்ளது.

 

 

 

 

 

குவைத்திற்கான ஸ்ரீலங்கன்

ஏர்லைன்ஸ் விமான சேவைகள்

தற்காலிகமாக இடைநிறுத்தம்

 

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத் நாட்டிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

 

இதன்படி, நேற்று (20) முதல் ஜூலை 26 ஆம் திகதி வரை குவைத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

 

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 1979 என்ற அவசர தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது +94 11 777 1979 அல்லது +94 74 444 1979 ஆகிய வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியோ பெற்றுக்கொள்ள முடியும்.

 

அல்லது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

 

 

2025 GIT பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு_...!

 

No comments

Theme images by fpm. Powered by Blogger.