முகநூலில் தவறாக கருத்துப் பகிர்ந்த இலங்கையர் சவூதி அரேபியாவில் கைது ....!

 முகநூலில் தவறாக கருத்துப் பகிர்ந்த இலங்கையர் சவூதி அரேபியாவில் கைது ....!




முகநூலில் தவறாக கருத்துப் பகிர்ந்த இலங்கையர் சவூதி அரேபியாவில் கைது ....!




முகநூலில் தவறாக கருத்துப் பகிர்ந்த இலங்கையர் சவூதி அரேபியாவில் கைது ....!

 


பேஸ்புக்கில், இஸ்லாமியர்களின் இறைத்தூதர் கண்ணியமிக்க முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்து அவதூறான மற்றும் அவமதிக்கும் வகையிலான கருத்து ஒன்றை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில், சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கை தமிழர் ஒருவர் சவூதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கைது செய்யப்பட்ட நபர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள கல்முனைப் பகுதியைச் சேர்ந்தவர், அவர் சவூதி அரேபியாவில் கட்டுமானத் துறையில் பணிபுரிந்து வந்தவர்.


இந்த சர்ச்சையின் பின்னணி,

இலங்கையின் கல்முனையில் இடம்பெற்ற ஒரு விலங்கு வதை சம்பவத்துடன் தொடர்புடையதாகும். 


வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமப் பாதயாத்திரையில் பக்தர்களுடன் பயணித்த 'சுப்பிரமணியம்' என்ற நாய் மீது அதுபற்றி அறியாத நபர் ஒருவரால் கல்முனையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.


நாய் மீது தாக்குதல் குறித்த நடத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் பகிரங்க மன்னிப்புக் கோரியதைத் தொடர்ந்து பிணையில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அவரது விடுதலை குறித்த சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவரவில்லை, மாறாக சமூக வலைத்தளங்களில் கடுமையான, இருதரப்பு விவாதங்களை தோற்றுவித்தது.


இந்த இணையவழி விவாதங்களின் போதே, சவூதியில் பணிபுரியும் இந்தக் கட்டுமானத் தொழிலாளி முஸ்லிம் நபர்களை நோகடிப்பதற்காக முகநூல் பதிவொன்றில் நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்தைப் பதிவிட்டுள்ளார்.


தனது கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு மற்றும் கண்டனங்கள் தீவிரமடைந்ததை அடுத்து, அந்த நபர் தான் செய்த தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு ஒரு காணொளியை (Video) சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். அந்த விவாதத்தின் போது உணர்ச்சிவசப்பட்டு இத்தகைய கருத்தை வெளியிட்டுவிட்டதாக அவர் அதில் வருத்தம் தெரிவித்திருந்தார்.


எனினும், அந்த மன்னிப்புக் காணொளியால் எழுந்த எதிர்ப்பலையை கட்டுப்படுத்த முடியவில்லை.


குறித்த நபரின் தவறை பல்வேறுபட்ட பிரதேசங்களை சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் அமைப்புகள் அவர் தொடர்பில் அவர் வசிக்கும் நாட்டின் அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்தன. சுமார் நூற்றுக்கும் அதிகமான புகார்கள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


சவூதி அரேபியா மத விழுமியங்கள் மற்றும் இணையக் குற்றங்கள் (Cybercrime) தொடர்பாக மிகவும் கடுமையான சட்டங்களைக் கொண்ட ஒரு நாடாகும். இதன் காரணமாக, அந்த நபரின் மன்னிப்புக் காணொளியையும் தாண்டி, அவரது அவதூறுப் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்தது.


இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து சவூதி அதிகாரிகளிடமும், அந்த நபர் பணிபுரியும் நிறுவனத்திடமும் முறைப்பாடு அளித்ததைத் தொடர்ந்து, சவூதி பொலிஸார் விரைந்து செயல்பட்டு அந்த நபரை கைது செய்துள்ளதாக அவரோடு தொடர்புடையவர்கள் தெரிவிக்கின்றனர்.


தற்போது அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.


மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், அந்தந்த நாடுகளின் கலாச்சார மற்றும் மதச் சட்டங்களை மதிக்க வேண்டும் என்றும், குறிப்பாக கடுமையான தண்டனைகளை வழங்கக்கூடிய இணையக் குற்றச் சட்டங்கள் நடைமுறையில் இருப்பதால் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறும் தூதரக வட்டாரங்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.


எந்தவொரு மதத்தையும் நிந்தனை செய்வது கடுமையான கண்டனத்துக்குரியது என்பதை அறிந்து நடப்பது சாலச்சிறந்தது.



திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!




காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் மாத்தறை தொடக்கம் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.


அதன்படி, காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் மாத்தறை தொடக்கம் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம் என அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது


சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0-2.5 மீற்றர் வரை உயர்வதற்கா சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.


எனவே, இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக விடுக்கப்படும் அடுத்தடுத்த அறிவித்தல்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் அத்திணைக்களம் மீனவ மற்றும் கடற்படைச் சமூகத்தினரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.





பாதிப்பு 55,000 ஐக் கடந்தது - உயிரிழப்புகள் 32 ஆக உயர்வு



இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,000 ஐத் தாண்டியுள்ளது என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.


அதன்படி, இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 55,406 ஆக உயர்ந்துள்ளதுடன், மரணங்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.


கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 1,024 டெங்கு நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் தற்காலிக இயக்குநர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.


ஜூன் மாதத்தில் மட்டும் 21,565 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மாவட்ட ரீதியான பாதிப்புகள்:

கொழும்பு மாவட்டம்: 11,392 நோயாளர்கள்
கம்பஹா மாவட்டம்: 11,006 நோயாளர்கள்


பொதுமக்கள் இன்னமும் நுளம்புகள் முட்டையிடும் இடங்களை முழுமையாகச் சுத்தம் செய்யாமல் இருப்பதே இந்தத் தீவிரப் பரவலுக்கு முதன்மைக் காரணம் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார். இனிவரும் நாட்களில் நோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமாயின், நுளம்புகள் பெருகும் இடங்களை முற்றாக அழிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


தற்போது அரசு நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை சூழவே டெங்கு மிக வேகமாகப் பரவி வருகிறது. எனவே, இது குறித்து பொதுமக்கள் கூடுதல் அவதானத்துடனும் பொறுப்புடனும் செயல்படுமாறு வைத்தியர் கபில கன்னங்கர கேட்டுக்கொண்டுள்ளார்.




எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ளத் தயார் 




எல் நினோ காலநிலை தாக்கத்தால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.


ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற தேசிய பேரிடர் முகாமைத்துவ சபைக் கூட்டத்தில் இந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.


அதன்படி, எல் நினோ காலநிலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள், பேரிடர் முகாமைத்துவ அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய பேரிடர் முகாமைத்துவ ஒருங்கிணைந்த பொறிமுறை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


அத்துடன், விவசாயம், குடிநீர் விநியோகம் மற்றும் மின்சார உற்பத்தித் துறைகளின் தயார்நிலை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


அதற்கமைய, வனவிலங்கு சரணாலயங்களுக்குள் உள்ள குளங்களை விரைவாக புனரமைக்குமாறு சுற்றாடல் அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.


நீர்மின் உற்பத்தியை தொடர்ந்து பேணுவதற்காக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை முறையாக முகாமைத்துவம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.


சூரிய சக்தியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமிக்க தேவையான மின்கலங்களை விரைவாக இறக்குமதி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை, மண்சரிவு அபாயப் பகுதிகளில் வசிக்கும், குறிப்பாக நுவரெலியா மாவட்ட மக்களை நான்கு ஆண்டுகளுக்குள் மீள்குடியேற்றுவதற்கான திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


அத்துடன், மீட்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த முப்படைகளுக்கான தொழில்நுட்ப வசதிகள், உலங்கு வானூர்தி சேவைகள், மாவட்ட மட்டத்தில் 24 மணி நேர பேரிடர் செயல்பாட்டு மையங்கள் மற்றும் பேரிடர் உபகரணங்களின் பராமரிப்பை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.





தீவிரமடையும் கடும் வெப்ப அலை: 120 மில்லியன் மக்களுக்கு எச்சரிக்கை



அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்த வாரம் கடுமையான மற்றும் அபாயகரமான வெப்ப அலை தீவிரமடையக்கூடும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.


அமெரிக்காவில் ஜூலை 4ஆம் திகதி சுதந்திர தின வார இறுதி விடுமுறையை மக்கள் எதிர்நோக்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் சுமார் 120 மில்லியன் மக்கள் தீவிர வெப்ப எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.


இந்த தீவிர வெப்பநிலை, நாளை மத்திய மேற்கு மற்றும் மிசிசிப்பி பள்ளத்தாக்கு பகுதிகளில் உச்சமடைந்து, பின்னர் கிழக்கு நோக்கி நகரக்கூடும்.


35°C முதல் 40.6°C வரை பதிவாகக்கூடிய இந்த வெப்பநிலையானது, அதிக ஈரப்பதத்துடன் இணைந்து 38°C முதல் 46°C வரையிலான வெப்பத் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனால் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.


நிலைமையைக் கட்டுப்படுத்த நியூயோர்க் நகர முதல்வர் ஜோஹ்ரான் மாம்தானி அவசரகாலத் திட்டத்தைச் செயல்படுத்தி நூற்றுக்கணக்கான குளிரூட்டும் மையங்களைத் திறந்துள்ளார்.


டெட்ராய்ட் உள்ளிட்ட பல நகரங்களிலும் குளிரூட்டப்பட்ட மையங்கள் அமைக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


மறுபுறம், கனடாவின் ஒன்ராறியோ மற்றும் மொன்றியால் உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்ப அலை ஆரம்பமாகியுள்ளதுடன், அங்கு வெப்பநிலை 37°C வரை உயரக்கூடும் என்பதால் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.


இந்தக் கடுமையான வெப்ப அலை காரணமாக, கால்பந்து போட்டிகள் நடைபெறும் டொராண்டோ, அட்லாண்டா மற்றும் டெக்சாஸ் போன்ற நகரங்களில் உள்ள மைதானங்கள் மற்றும் ரசிகர்களுக்கான பகுதிகள் குளிரூட்டப்பட்ட கூடாரங்களாக மாற்றப்பட்டு வருவதுடன், பாதுகாப்பற்ற வெப்பநிலை காரணமாக சில போட்டிகளின் போக்கிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.






முகநூலில் தவறாக கருத்துப் பகிர்ந்த இலங்கையர் சவூதி அரேபியாவில் கைது ....!

 

 

 


No comments

Theme images by fpm. Powered by Blogger.