பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை...
பொலிஸார் விடுத்துள்ள அவசர
எச்சரிக்கை...

பொலிஸார் விடுத்துள்ள அவசர
எச்சரிக்கை...
பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் அனுப்பப்பட்டது போன்ற தோரணையில் 'அபராதப் பணத்தைச் செலுத்துமாறு' கையடக்க தொலைபேசிக்கு ஏதேனும் குறுஞ்செய்தி வந்தால், அது குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
நீங்கள் செய்த சில போக்குவரத்து விதிமீறல்களுக்காக, ஒரு வாரத்திற்குள் உடனடியாக வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்பு ஊடாகச் சென்று உரிய அபராதப் பணத்தைச் செலுத்துமாறு, பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் அனுப்பப்பட்டது போன்று உங்களது தொலைபேசிக்கு வாட்ஸ்அப் அல்லது வேறு ஏதேனும் வழிகளில் போலி குறுஞ்செய்திகள் வந்திருக்கலாம்.
ஆனால், போக்குவரத்து பிரிவினால் அத்தகைய குறுஞ்செய்திகள் எதுவும் அனுப்பப்படவில்லை. இவை முற்றிலும் போலியான செய்திகளாகும். இவ்வாறான இணையதள இணைப்புகளுக்குள் சென்று உங்களது தனிப்பட்ட விபரங்கள் அல்லது வங்கி விபரங்களை வழங்க வேண்டாம்.
அந்த இணைப்புகளைத் திறக்கவும் வேண்டாம். இவ்வாறான போலி குறுஞ்செய்திகள் கிடைத்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸாருக்குத் தெரியப்படுத்துங்கள். பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் இதுபோன்ற எந்தவொரு குறுஞ்செய்தியும் அனுப்பப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு
குறித்து எச்சரிக்கை!
மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபம் முதல் புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளுக்கான பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான நிலை குறித்த எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபம் முதல் புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், இக்கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இது தொடர்பாக வெளியிடப்படும் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கடற்றொழில் மற்றும் கடல்சார் சமூகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீராடச் சென்ற பாடசாலை மாணவன் மாயம்! - தொடரும் தேடுதல் நடவடிக்கை
நுவரெலியா-
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோல்ட்றீம் தோட்ட ஆற்றுப் பகுதியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்களில் ஒருவர் ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
குறித்த
சம்பவம் நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாயமான
மாணவன் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10-ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில்
தெரியவந்துள்ளது.
தற்போது
பாடசாலைகளில் நடைபெற்று வரும் இரண்டாம் தவணைப் பரீட்சைக்குத் தோற்றியிருந்த குறித்த மாணவன், இன்று பரீட்சை நிறைவடைந்ததைத் தொடர்ந்து தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து வோல்ட்றீம் தோட்டத்திலுள்ள ஆற்றுப் பகுதிக்குச் சென்று விளையாடியதாகவும், பின்னர் நீராடச் சென்றபோது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம்
இடம்பெற்ற நேரத்தில் மாணவருடன் மொத்தம் பத்து மாணவர்கள் ஆற்றுப் பகுதிக்கு சென்றிருந்ததாகவும், அவர்களில் குறித்த மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம்
தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் லிந்துலை பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
தொடர்ந்து
சுழியோடிகளின் உதவியுடன் ஆற்றில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழப்பு...
நீர்கொழும்பு
சிறைச்சாலை மோதலில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று
(13) மற்றும் இன்று (14) அதிகாலை வேளையில் குறித்த இரு சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு
உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி,
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த
ஜூலை மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 21 சிறைக்கைதிகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய,
பதிவாகியுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
குறித்த
மோதலில் காயமடைந்த மேலும் சில சிறைக்கைதிகளும் அதிகாரிகளும்,
கொழும்பு
தேசிய வைத்தியசாலையிலும் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் - இந்தியர் ஒருவர் உயிரிழப்பு...
ஹோர்முஸ்
நீரிணையில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் சேதமடைந்துள்ளன.
இந்தத்
தாக்குதலில் இந்தியக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
'மொம்பாசா'
(Mombasa) மற்றும் 'அல் பாஹியா' (Al Bahiyah) ஆகிய இரு கப்பல்களே இந்தத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன.
ஒமான்
கடல் எல்லைக்குள், ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பாதையில் இந்தக் கப்பல்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத்
தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு, இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
காயமடைந்தவர்கள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துமாறு வரும் போலி குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கை...
பொலிஸ்
போக்குவரத்து பிரிவினால் அனுப்பப்பட்டது போன்ற தோரணையில் 'அபராதப் பணத்தைச் செலுத்துமாறு' உங்களது கையடக்க தொலைபேசிக்கு ஏதேனும் குறுஞ்செய்தி (SMS) வந்தால்,
அது
குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸாரால்
ஒருபோதும் இவ்வாறான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதில்லை என,
போக்குவரத்து
கட்டுப்பாட்டு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் W.P.J.சேனாதீர
தெரிவித்துள்ளார்.
நீங்கள்
செய்த சில போக்குவரத்து விதிமீறல்களுக்காக,
ஒரு
வாரத்திற்குள் உடனடியாக வழங்கப்பட்டுள்ள இணையதள இணைப்பு (web link) ஊடாகச் சென்று உரிய அபராதப் பணத்தைச் செலுத்துமாறு,
பொலிஸ்
போக்குவரத்து பிரிவினால் அனுப்பப்பட்டது போன்று உங்களது மொபைல் தொலைபேசிக்கு வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது வேறு ஏதேனும் வழிகளில் போலி குறுஞ்செய்திகள் வந்திருக்கலாம்.
ஆனால்,
போக்குவரத்து பிரிவினால் அத்தகைய குறுஞ்செய்திகள் எதுவும் அனுப்பப்படவில்லை.
இவை
முற்றிலும் போலியான செய்திகளாகும்.
இவ்வாறான
இணையதள இணைப்புகளுக்குள் (web
links) சென்று உங்களது தனிப்பட்ட விபரங்கள் அல்லது வங்கி விபரங்களை வழங்க வேண்டாம். அந்த இணைப்புகளைத் திறக்கவும் (Open) வேண்டாம்.
இவ்வாறான
போலி குறுஞ்செய்திகள் கிடைத்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸாருக்குத் தெரியப்படுத்துங்கள்.
பொலிஸ்
போக்குவரத்து பிரிவினால் இதுபோன்ற எந்தவொரு குறுஞ்செய்தியும் அனுப்பப்படுவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸார் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை...
No comments