பதின்ம வயதினருக்கு சமூக ஊடகத் தடை ...

பதின்ம வயதினருக்கு சமூக ஊடகத் தடை ...

 



பதின்ம வயதினருக்கு சமூக ஊடகத் தடை ...




பதின்ம வயதினருக்கு சமூக ஊடகத் தடை ...


ஐக்கிய இராச்சியம், 16 மற்றும் 17 வயதுடைய இளைஞர்களுக்கான இரவு நேர சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டமொன்றைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது.

 

இந்த புதிய திட்டத்தின் கீழ், இரவு நேரத்திலிருந்து அதிகாலை 6 மணி வரை இந்த வயதுப் பிரிவினரின் சமூக ஊடகப் பயன்பாடு கட்டுப்படுத்தப்படவுள்ளது.

 

இது குறித்த மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.

 

முன்னதாக, கடந்த மாதம் ஐக்கிய இராச்சியம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்காக Snapchat, TikTok, YouTube, Instagram மற்றும் Facebook போன்ற சமூக ஊடகத் தளங்களின் பயன்பாட்டைத் தடை செய்ய முடிவெடுத்திருந்தது.

 

அந்த சட்டங்கள் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளன.

 

சிறுவர்களின் மனநலனைப் பாதுகாத்தல், இணைய அடிமைத்தனத்தைக் குறைத்தல் மற்றும் சமூக ஊடகங்களின் பாதகமான தாக்கங்களைக் கட்டுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 

 

 

 

பலத்த காற்று வீசும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!


 வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இந்த எச்சரிக்கையானது நாளை (16) காலை 11.00 மணி வரை அமுலில் இருக்கும்.

 

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காற்றின் தீவிரத்தன்மை காரணமாக, குறித்த பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

 

இந்த காலப்பகுதியில் 12 மாவட்டங்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கையும், 11 மாவட்டங்களுக்கு 'அம்பர்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

மிக்ஸர் சாப்பிடும்போது 6 தொண்டையில் வேர்க்கடலை சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழப்பு


 இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள குன்னும்புறம் பகுதியில், 'மிக்ஸர்' தின்பண்டம் சாப்பிடும்போது தொண்டையில் வேர்க்கடலை சிக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 வயது சிறுவன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

குன்னும்புறம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினரின் 3 வயது ஆண் சிறுவன் வீட்டில் வைத்து 'மிக்ஸர்' தின்பண்டத்தைச் சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளது.

 

அப்போது, அந்த மிக்ஸரில் இருந்த வேர்க்கடலை எதிர்பாராத விதமாக சிறுவனின் தொண்டையில் சிக்கிக்கொண்டது.

 

இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

 

தொண்டையில் சிக்கிய வேர்க்கடலையை எடுக்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை

 

இதனால் சிறுவன் மூச்சுவிட முடியாமல் திணறியதைக் கண்ட பெற்றோர், சிறுவனை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

 

இருப்பினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

இலங்கையில் நேற்று அதிகரித்த தங்கத்தின் விலை இன்று சீராக உள்ளதா? : இன்றைய சந்தை நிலவரம்!


 நேற்று (14) 24 கரட் தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாயால் அதிகரித்த நிலையில், இன்று (15) இதுவரை தங்க விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

 

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

 

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 346,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

 

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

 

 



பொலித்தீன் பைகள் மீதான கட்டணத்தை முறையாக நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை

 

இலங்கையில் பொலித்தீன் பைகள் மீதான கட்டணத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யுமாறு, மத்திய சுற்றாடல் அதிகாரசபையை இலங்கை சூழலியல் நடவடிக்கை வலையமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 

பல்பொருள் அங்காடிகள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் சிறு வணிகங்கள் மத்தியில் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் முரண்பாடுகள், குறித்த கொள்கையின் நோக்கத்தையே பாதிப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

பொலித்தீன் பயன்பாட்டைக் குறைப்பதற்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட பொலித்தீன் பை கட்டண முறையை வரவேற்கும் அதேவேளை, பல வணிக நிறுவனங்கள் இதுவரை இலவசமாகவே பொலித்தீன் பைகளை வழங்குவதாக அல்லது சீரற்ற முறையில் கட்டணத்தை அறவிடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

குறித்த கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்தாத வணிக நிறுவனங்கள் மீது, மத்திய சுற்றாடல் அதிகாரசபை தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

பொலித்தீன் பைகளுக்கான கட்டணத்தின் சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும், துணிப் பைகள் மற்றும் மக்கும் தன்மையுடைய பைகள் போன்ற சூழல் நட்பு மாற்றுகளைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

பொலித்தீன் மாசுபாடு இலங்கையின் ஆறுகள், கடற்கரைகள், வனவிலங்குகள் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குத் தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

 

 

 


இலங்கையில் 71,000 ஐக் கடந்தது டெங்கு பாதிப்பு: 49 பேர் உயிரிழப்பு

 

இலங்கையில் இந்த ஆண்டில் நேற்றுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71,000 ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, நேற்று வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 71,235 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு தொற்று காரணமாக 49 மரணங்களும் சம்பவித்துள்ளன.

 

நோய்த்தொற்றின் தொடர்ச்சியான பரவலை வெளிப்படுத்தும் வகையில், நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 1,284 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

மாகாண மட்ட தரவுகள் அடிப்படையில், மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

 

அங்கு இதுவரை 37,490 பேர் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

மேல் மாகாணத்திற்குள் மாவட்ட ரீதியாக நோக்குகையில், கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

கம்பஹாவில் 14,736 பாதிப்புகளும், அதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 14,229 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.

 

இதேவேளை, நடப்பு ஜூலை மாதத்தின் முதல் 14 நாட்களில் மட்டும் 15,856 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

 

எனினும், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் கடந்த ஜூன் மாதத்திலேயே அதிகப்படியான டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

 

ஜூன் மாதத்தில் மட்டும் 21,538 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.



பதின்ம வயதினருக்கு சமூக ஊடகத் தடை ...



No comments

Theme images by fpm. Powered by Blogger.