எச்சரிக்கை...
எச்சரிக்கை...

எச்சரிக்கை...
கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் அதிக வெப்பநிலை குறித்து அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் இன்று பகல் மனித உடலால் உணரக்கூடிய வெப்பத்தின் அளவானது 'எச்சரிக்கை நிலைக்கு' உயர்வடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அதிக வெப்பமான சூழலில் நீண்ட நேரம் வெயிலில் இருப்பது மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சோர்வை உண்டாக்கும்.
தொடர்ந்து அதிக வேலைகளில் ஈடுபடுபவர்களுக்குத் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே போதிய அளவு நீர் மற்றும் திரவ உணவுகளை உட்கொண்டு உடலை நீர்ச்சத்துடன் வைத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதீத உடல் உழைப்பு தேவைப்படும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பாக, மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் தங்கள் உடல்நலனில் அதிக கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க் ஸ்ரீலங்காவின் முப்பெரும் விழா - 2026
லக்ஸ்டோ
மீடியா நெட்வேர்க் ஸ்ரீலங்காவின் 30ஆவது வருட பேராளர் மாநாடு மற்றும் நேசம் பத்திரிகை வெளியீடு மற்றும் திறமைக்கான தேடல் விருது விழா எனும் முப்பெரும் விழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 03.00 மணிக்கு சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
லக்ஸ்டோ
மீடியா நெட்வேர்க், இலங்கை தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், மூதூர் ஜே.எம்.ஐ.,
உலகவலம், நேசம் டிவி ஆகியவற்றின் ஊடக அனுசரணையில், லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க், நேசம் டிவி & உலக வலம் ஆகியவற்றின் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினரும் சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளருமான கலாநிதி ஏ.எல்.அன்ஸார்
(JP) தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில், முன்னாள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.காதர் மஸ்தான்
பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இந்
நிகழ்வில், ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி பணிப்பாளரும் கல்முனை
ஸாஹிரா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபருமான தமிழ் மருதமாமணி கலாபூஷணம் ஏ.பீர் முகம்மது,
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைவரும் நேசம் டிவியின் பொறுப்பதிகாரியுமான ஹிபத்துல் கரீம் ஆகியோர் முன்னிலை அதிதிகளாகவும் சாய்ந்தமருது பிரதேச செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் ரஸ்மி மூஷா, கவிஞர் ஒலிபரப்பாளர், பேராசிரியர் ஏ.சி.றாஹில்
ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில்
முதற்பிரதியை கலைஞர் முனைமருதவன் எம்.எச்.எம் இப்ராஹிம் பெற்றுக் கொள்கிறார்.நேசம் சஞ்சிகை மூதூர் ஜே.எம்.ஐ.
இஹ்ஸான் திறன் நோக்கு அதிதியாக கலந்து கொள்கிறார்.
இலங்கை
தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் முபாறக் அப்துல்மஜீத், சம்மாந்துறை ஈஸ்டன் ஜூவலரியின் உரிமையாளர் தொழிலதிபர் கலாநிதி இஸட். ஏ. பஷீர்,
தொழிலதிபர் சஹில்,
தொழிலதிபர் ஜெமில், மொரிச் நிறுவனப்
பணிப்பாளர்
நளிம், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளரும் லக்ஸ்டோ மீடியா நெட்வேர்க்கின் பெண்கள்
பிரிவுத் தலைவி முஹம்மட் றாசிக் பாத்திமா றஸ்மியா, ரெட்செலி உரிமையாளர்
எம்.எம்.ஏ ஆஷாத் றஹிம்,
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் ஊடகவியலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், சிரேஷ்ட
ஊடகவியலாளர் அஸ்லம்.எஸ். மௌலானா ஆகியோர் நிகழ்வில் பிரதிபெறும் கௌரவ அதிதிகளாகக் கலந்து சிறப்பிக்கின்றனர்.
மேலும்
விஷேட பிரதியினை மனித நேயன்
இர்ஷாத்
ஏ.காதர் நற்பணி மன்றம் பெறவுள்ளது.
இந்நிகழ்வில்
தேசிய சமாதான நீதிபதிகள் சபையினுடைய சமாதான நீதிவான்கள் உட்பட எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கல்விமான்கள், ஊர்நலன்விரும்பிகள், அமைப்பின் அங்கத்தவர்கள், கவிஞர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
லக்ஸ்டோ
மீடியாவின் 30 ஆவது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் அன்றைய தினம் சமாதான நீதிபதிகள் மற்றும் லக்ஸ்டோ மீடியா உறுப்பினர்கள் எல்லோருக்குமான சட்டம், ஊடகம் மற்றும் தலைமைத்துவம் சம்பந்தமாக செயலமர்வு கலாசார மத்திய நிலையத்தில் காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இடம்பெறுவதோடு, அன்றைய தினம் மாலை 3.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை இடம்பெறும் கலை, கலாசார இம் மாபெரும் முப்பெரும் விழாவில் நாட்டின் பல பாகங்களிலும் தெரிவு
செய்யப்பட்ட 100 பேருக்கு 'திறமைக்கான தேடல் Talent awards' விருது
வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளதுடன் லக்ஸ்டோ மீடியா கடந்த ரமழானை முன்னிட்டு நடாத்திய இஸ்லாமிய கேள்வி - பதில் போட்டியில் பங்குபற்றியவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
கிழக்கு
மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் "வெப்பச் சுட்டெண்" காரணமாக மனித உடலினால் பகல் வேளையில் அதிகரித்த வெப்பநிலையை உணரக்கூடியதாக இருக்கும்.
சப்ரகமுவ,
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன்
கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
நாட்டின்
ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும்.
வடக்கு,
வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும்
மணித்தியாலத்திற்கு சுமார் 40 - 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
கடல்
பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு
30 - 40 km வேகத்தில்
தென் மேற்குத் திசையில் இருந்து
காற்று வீசும்.
காலி
தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான அத்துடன் சிலாபம் தொடக்கம் புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 - 60
km வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக்
காணப்படும்.
திருகோணமலை
தொடக்கம் காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km வேகத்தில்
இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
முன்னாள்
பொலிஸ்மா அதிபரின் தற்கொலை தொடர்பில் மேலும் பல தகவல்கள்
முன்னாள்
பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மாலபேயில் உள்ள அவரது வீட்டில் நேற்று (17) தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விக்ரமரத்ன
தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனிப்பட்ட
காரணம் நிமித்தம் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
மாலபே,
தலாஹேன பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் வீட்டில் நேற்று காலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
காலை
உடற்பயிற்சிக்காக செல்வதற்கு முன்னர் வீட்டிற்கு வெளியே வந்த விக்ரமரத்ன, அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்
பின்னர், தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை அழைத்து அவரது பிஸ்டல் ரக துப்பாக்கியை விக்ரமரத்ன
கேட்டுப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த
சந்தர்ப்பத்தில் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம், "துப்பாக்கியைக் கொண்டு வாருங்கள். அது புதியதா? அல்லது பழையதா? என்று பார்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
அதன்
பின்னர், தனக்கு ஒரு தண்ணீர் போத்தலை எடுத்து வருமாறு கூறி, விக்ரமரத்ன தனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியை வீட்டிற்குள் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்
சென்ற பின்னர், விக்ரமரத்ன அந்த துப்பாக்கியால் தனது மார்பில் சுட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
உடனடியாக
செயற்பட்ட வீட்டிலிருந்தவர்கள், அவரை விரைவாக கொழும்பு கிழக்கு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழக்கும்
போது அவருக்கு 63 வயதாகும்.
விக்ரமரத்னவின்
மகனின் மனைவி, வேறொருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளதாகக் கூறி பிரிந்து செல்வதற்காக விவாகரத்து வழக்குத் தாக்கல் செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில்,
அந்த மகனின் மனைவி தான் குடும்ப வன்முறைக்கு ஆளானதாகக் கூறி சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் புகார் அளித்திருந்தார்.
அங்கு
சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகள் குறித்து விக்ரமரத்ன மிகுந்த மனவேதனையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தான்
பொலிஸ் மா அதிபர் பதவியை
வகித்த பொலிஸ் திணைக்களத்தின் பணியகம், தனது மகனின் பிரச்சினையில் நடந்துகொண்ட விதம் குறித்து, உயிரிழந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தனது நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் மிகுந்த கவலையுடன் பேசியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
விக்ரமரத்னவின்
வீட்டிற்குச் சென்ற கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.
அதேபோல்,
பொலிஸ் மா அதிபர் பிரியந்த
வீரசூரியவும் விக்ரமரத்னவின் வீட்டிற்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.
மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு
அலவத்துகொட,
படுகொட பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் நேற்று (17) உயிரிழந்துள்ளார்.
வீடொன்றை
அமைப்பதற்காக வெட்டப்பட்டிருந்த நிலப்பகுதியில், அடித்தளத்திற்காக குழி தோண்டிக்கொண்டிருந்த போது இந்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அனர்த்தத்தின்
பின்னர் அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு அகுரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு
உயிரிழந்தவர் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.
சடலம்
கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில வைக்கப்பட்டுள்ளதுடன், அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறைச்சாலை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதியின் அவசர நடவடிக்கை
ஜனாதிபதி
அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
தற்போது
சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அண்மையில்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும்,
சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நலன்புரி விடயங்கள் குறித்தும் இதன்போது ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.
ஜனாதிபதி
ஒருவருடன் நேரடியாகத் தமது பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவெனச் சுட்டிக்காட்டிய சிறைச்சாலை அதிகாரிகள், அதற்காக ஜனாதிபதிக்குத் தமது நன்றியைத் தெரிவித்தனர்.
எச்சரிக்கை...
No comments