சமூக ஊடக வலைத்தளங்கள் திடீர் முடக்கம்...

சமூக ஊடக வலைத்தளங்கள் திடீர் முடக்கம்...



சமூக ஊடக வலைத்தளங்கள் திடீர் முடக்கம்...




சமூக ஊடக வலைத்தளங்கள் திடீர் முடக்கம்...


உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களான பேஸ்புக் (Facebook), மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் இன்று திடீர் தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், பல பயனர்கள் தங்களது கணக்குகளை அணுக முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

 

குறிப்பாக, மெட்டா (Meta) நிறுவனத்தின் பேஸ்புக் தளத்தின் டெஸ்க்டொப் (Desktop) பதிப்பே இந்தச் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

பயனர்கள் உள்நுழைய முயன்றபோது, "தளச் சிக்கல் காரணமாக உங்கள் கணக்கு தற்போது கிடைக்கவில்லை. இது விரைவில் சரிசெய்யப்படும் என எதிர்பார்க்கிறோம். தயவுசெய்து சில நிமிடங்களில் மீண்டும் முயற்சிக்கவும்" என்ற அறிவிப்பு காண்பிக்கப்பட்டுள்ளது.

 

இதனிடையே, இன்று முற்பகல் 9.00 மணியளவில் "Facebook Down" தொடர்பான முறைப்பாடுகள் திடீரென அதிகரித்துள்ளதாக சேவை முடக்கங்களைக் கண்காணிக்கும் DownDetector இணையத்தளம் தெரிவித்துள்ளது.

 

இந்த தொழில்நுட்ப பிரச்சினைக்கான காரணம் குறித்து மெட்டா நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வ விளக்கமொன்றை வெளியிடவில்லை.

 

 

 


 

மீண்டும் எகிறிய எண்ணெய் விலை!

 

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மேலும் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

 

இதன்படி, ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.10 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

 

அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.49 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

 

இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலை 2.91 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை

 

 

 

 

 

டீசல் மூலமான மின் உற்பத்தியைக் குறைக்க நடவடிக்கை

 

2027ஆம் ஆண்டு முடிவடைவதற்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய அமைப்புகள் (தனியார்) நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

அதன் தலைவர் கலாநிதி பிரதீப் பிரியதர்ஷன கருத்துத் தெரிவிக்கையில், 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 750 மெகாவோட் மின்சாரத் திறனை மின்கலங்கள் மூலம் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால், இதன் மூலம் டீசல் பயன்பாட்டைக் குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, தற்போது மின்கலங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக அவற்றை மின் கட்டமைப்போடு இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே 160 மெகாவோட் மின்கலங்கள் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதற்கு மேலதிகமாக, மேலும் 250 மெகாவோட் மின்சாரத்திற்காக தனியார் துறையின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏலங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், அதுவும் எதிர்வரும் ஆண்டின் மார்ச் - ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின் கட்டமைப்பில் இணைக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

 

மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் 100 மெகாவோட் மின்சாரத்தை மின் விநியோக நிறுவனம் மூலம் வழங்குவதற்காக ஏலங்கள் கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதனைத் தவிர தரையில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு மின்கலங்களைப் பொருத்துவதற்காக 150 மெகாவோட்டிற்கான ஏலங்களைக் கோர எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

 

இந்த அனைத்து நடவடிக்கைகள் மூலமும், எதிர்வரும் 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் தேசிய மின் கட்டமைப்பில் மின்கலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் 750 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்படும் என்பதால், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வழிவகை ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

 

மேலும், 2028-2029 ஆம் ஆண்டுகளில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தொடர்ந்தும் செயல்படுத்தப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், இதனுடன் இணையாக மின்கல கட்டமைப்பையும் இணைப்பதன் மூலம் எரிபொருள் மூலமான மின் உற்பத்தியையும் குறைத்துக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

 

இதன் மூலம் 30 முதல் 35 பில்லியன் ரூபாய் வரையான தொகையைச் சேமிக்க முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இதன் பலனைப் பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் மின்சாரக் கட்டணத்தையும் குறைக்க முடியும் என மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

 

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,000 ஐத் தாண்டியது

 

இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,321 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

அதன்படி,  (18.07.2026) மாத்திரம் 843 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

ஜூலை மாதத்தின் கடந்த 18 நாட்களில் மாத்திரம் 19,943 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

 

இவர்களில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 39,667 ஆகும்.

 

இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தில் 11,610 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 6,325 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 6,305 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

 

ஜூலை மாதத்தில் கம்பஹா மாவட்டத்தில் 15,762 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 15,000 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5,280 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

 

டெங்கு தொற்று காரணமாக இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது

 

 

 

 

இரத்மலானை குடியிருப்பு வளாகத்தில் தீப்பரவல்


இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு சேவை திணைக்களம் இரண்டு தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்துக்கு அனுப்பியுள்ளது.

 

தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

 

 

 

புற்றுநோயாளி மீது தாக்குதல்: கம்பளை மருத்துவரை கைதுசெய்ய காத்திருக்கும் காவல்துறை!

 

கம்பளை போதனா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரினால், சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குறித்த மருத்துவரை (19.07.2026) கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக குருந்துவத்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

குருந்துவத்த நகரில் பால் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வரும் பெண்ணொருவர், கம்பளை மருத்துவமனை மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் தாக்கப்பட்ட நிலையில் குருந்துவத்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாதிக்கப்பட்ட பெண் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினாலும் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

 

இந்தத் தாக்குதல் சம்பவத்தில், சந்தேகத்துக்குரிய மருத்துவரின் மனைவி, மாமியார் மற்றும் மகள் ஆகியோரும் ஈடுபட்டுள்ளமை காணொளி ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

சந்தேகத்திற்குரிய மருத்துவர் இதற்கு முன்னர் குருந்துவத்த மருத்துவமனையில் பதில் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். அந்த காலகட்டத்தில் அங்கிருந்த நிரந்தர பொறுப்பதிகாரி மருத்துவருடன் ஏற்பட்ட தொழில்முறை முரண்பாடு காரணமாகவே அவர் கம்பளைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.

 

அதன் பின்னரும், பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் தனியார் மருத்துவ சேவைகள் தொடர்பில் அவ்விரு மருத்துவர்களுக்கும் இடையில் நீண்டகாலமாகப் பகைமை இருந்து வந்துள்ளது.

 

 (18.07.2026) காலை, குருந்துவத்த மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவரும் அவரது மனைவியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கடைக்கு தேநீர் அருந்தச் சென்றபோது, அதற்கு அருகில் சந்தேகநபரான மருத்துவரின் வீட்டில் இருந்தவர்கள் அவர்களை நோக்கி கூச்சலிட்டு அவமதித்துள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து, கம்பளையிலிருந்து வாகனத்தில் விரைந்து வந்த சந்தேகநபரான மருத்துவர், தனது குடும்பத்தினருடன் இணைந்து கடையிலிருந்த பெண்ணுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தின் போதே குறித்த பெண் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

சம்பவம் குறித்து குருந்துவத்த காவல்துறை விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

 

சந்தேகநபரான மருத்துவர் (19.07.2026) கம்பளை மருத்துவமனையில் கடமையில் இருப்பதாகத் தெரிவித்துள்ள குருந்துவத்த காவல்துறை பொறுப்பதிகாரி நந்தன பண்டார, அவரது பணி நிறைவடைந்ததும் அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 

 

 

 

ட்ரம்ப்பின் பதிவுகளுக்கு இனி 100,000 அமெரிக்க டொலர் கட்டணம்!

 

டொனால்ட் ட்ரம்ப்பின் 'ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளம், முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் வர்த்தகர்களுக்கு ஒரு புதிய கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

 

ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட மிக முக்கியமான 10 கணக்குகளின் பதிவுகளை, மற்றவர்களை விட மிக வேகமாகப் பெறுவதற்காக, மாதத்திற்கு 100,000 அமெரிக்க டொலர் வரை கட்டணம் வசூலிக்க அந்த நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

 

'Truth API' எனப்படும் இந்த தரவுத் தொகுப்பு மூலம், வர்த்தக நிறுவனங்கள் மில்லி செக்கன்ட் இடைவெளியில் பதிவுகளைப் பெற்று, சந்தை மாற்றங்களை சாதகமாக்கிக்கொள்ள முடியும்.

 

3 வருட ஒப்பந்தத்திற்கு மாதாந்தம் 60,000 டொலர் என்ற தள்ளுபடி விலையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

எனினும் ஜனநாயகக் கட்சியினர் இந்த திட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

 

ஜனாதிபதி பதவியைப் பயன்படுத்தி ட்ரம்ப் இலாபம் ஈட்டுவதாகவும், வோல் ஸ்ட்ரீட் வர்த்தகர்களை செழுமைப்படுத்துவதாகவும் செனட்டர் எலிசபெத் வோரன் குற்றம் சாட்டியுள்ளார்.

 

ட்ரம்பின் பதிவுகளை வேகமாக பெறப் பணம் செலுத்துவது "மிகவும் நெறிமுறையற்ற செயல்"என கண்காணிப்பு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன

 

இருப்பினும், சட்ட ரீதியாக இது எந்தளவுக்குப் பொருந்தும் என்பதில் தெளிவின்மை நிலவுகின்றது.

 

இந்தநிலையில் 2026 ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இந்த சேவை நடைமுறைக்கு வரவுள்ளது.



சமூக ஊடக வலைத்தளங்கள் திடீர் முடக்கம்...



No comments

Theme images by fpm. Powered by Blogger.