உடனடி உணவுச் சந்தையில் புதிய களம்...

உடனடி உணவுச் சந்தையில் புதிய

களம்...

 



உடனடி உணவுச் சந்தையில் புதிய களம்...




உடனடி உணவுச் சந்தையில் புதிய

களம்...


இலங்கையின் முன்னணி வணிகக் குழுமங்களில் ஒன்றான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (John Keells Holdings), சர்வதேச அளவில் புகழ்பெற்ற உணவக பிராண்டான வெண்டிஸ் (Wendy's) உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக அறிவித்துள்ளது.

 

இந்த நடவடிக்கையின் மூலம் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தனது நுகர்வோர் உணவுத் தயாரிப்புத் தொகுப்பை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கிறது.

 

இந்த புதிய திட்டத்தின் கீழ், இலங்கையின் முதலாவது வெண்டிஸ் உணவகம் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் திறக்கப்படவுள்ளது.

 

இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் உடனடி உணவுச் சந்தையில் (Fast food market) தனது நிலையை வலுப்படுத்துவதும், நுகர்வோருக்கு புதிய மற்றும் உயர்தர உணவு அனுபவத்தை வழங்குவதுமே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என்று ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.






எல் நினோ தாக்கத்தால் நான்கு மாகாணங்கள் வறட்சி ஏற்படும் அபாயத்தில்

 

எல் நினோ தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வரட்சியான காலநிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதன்படி, வட மாகாணம், வடமத்திய மாகாணம், ஊவா மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டம் ஆகியவை எல் நினோ தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலை மிகவும் தீவிரமான எல் நினோ நிலையாக வளர்ச்சி பெற்றால், அடுத்த மாதம் கடுமையான வறட்சி நிலவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், அடுத்த ஆண்டு வீழ்ச்சியடையும் மழைவீழ்ச்சி, நீர் உலர்வது மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு போன்ற பல சுற்றுச்சூழல் சிக்கல்கள் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

 

இதன் காரணமாக, பொதுமக்கள் நீர் மற்றும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், தங்களது சுகாதாரம் குறித்து அவதானமாக இருக்குமாறும், வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தாக்கங்களைக் குறைப்பதற்கு முன்கூட்டியே தயாராகுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

 

இதேவேளை, கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் உடல் வெப்பம் சற்று அதிகமாக உணரப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

 

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை


ஜப்பானின் கியூஷூ (Kyushu) தீவில் அமைந்துள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியை மையமாகக் கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

 

ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

பத்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவிடம் மனிதர்கள் கட்டுப்பாட்டை இழப்பர் ஈலோன் மஸ்க் எச்சரிக்கை

 

தொழிலதிபர் ஈலோன் மஸ்க், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து வெளியிட்டுள்ள கருத்துகள் உலகளவில் கவனம் பெற்றுள்ளன.

 

சமீபத்தில் அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில், அடுத்த 10 வருடங்களுக்குள் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மீது மனிதர்கள் கொண்டிருக்கும் கட்டுப்பாடு பெருமளவில் குறையக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், 2036ஆம் ஆண்டளவில் ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உலகின் பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகலாம் என்றும், அது மனிதகுலத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறுவதற்கான சாத்தியம் 10 - 20 சதவீதம் வரை இருக்கலாம் என்றும் அவர் மதிப்பிட்டுள்ளார்.

 

அடுத்த ஐந்து ஆண்டுகளில், மனிதர்களின் மொத்த அறிவுத் திறனை விட செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மேம்பட்ட திறனைப் பெறக்கூடும் என்றும், பல்வேறு பணிகளை மனிதர்களைவிட திறமையாக மேற்கொள்ளும் நிலை உருவாகும் என்றும் ஈலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

 

அதேவேளை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் உற்பத்தித்திறன் கணிசமாக உயரக்கூடும் என்பதால், அதன் சாதகமான அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

இருப்பினும், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பங்களின் அதிவேக வளர்ச்சியை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான தெளிவான வழிமுறைகள் தற்போது இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

 

 


 


பாணந்துறை கடற்கரையில் நீல வண்ண ஜெல்லிமீன்கள்- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 

பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன் (Physalia - blue bottle jellyfish) எனப்படும் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனையடுத்து, தேசிய நீர்வள திணைக்களம் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது.

 

கடற்கரைப் பகுதியில் ஜெல்லிமீன்களின் வரத்து அதிகரித்துள்ளதாகப் பாணந்துறை நகராட்சி மன்றத்திடமிருந்து வந்த தகவலை அடுத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

 

நிலைமையை நேரில் ஆய்வு செய்யவும், ஜெல்லிமீன் இனத்தை அடையாளம் காணவும், பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை மதிப்பிடவும் தேசிய நீர்வள திணைக்கள அதிகாரிகள் பாணந்துறை கடற்கரைக்குச் சென்று பார்வையிட்டனர்.

 

பாணந்துறை கடற்கரை முழுவதும் நீல வண்ண ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக, பாணந்துறை கடற்கரையில் நீச்சலில் ஈடுபட்ட பல சுற்றுலாப் பயணிகள் ஜெல்லிமீன் கொட்டுக்கு உள்ளாகினர் என்று முறையிடப்பட்டிருந்தது.

 

இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

 

நீல வண்ண ஜெல்லிமீன்களின் கொட்டு கடுமையான வலி தரக்கூடியது என்பதாகவும், சில சந்தர்ப்பங்களில் கடுமையான வலி, ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

ஈராக் மீது அமெரிக்க - சவூதி வான்வழித் தாக்குதல்கள்: 30-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்களுக்குப் பின்னர் அதிரடி


கடந்த 72 மணித்தியாலங்களில் அமெரிக்கப் படைகள் மற்றும் சவூதி எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு, ஈரான் புரட்சிகரக் காவல்படை நடத்திய 30 க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள,ஈரான் ஆதரவு இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை பிரிவு தெரிவித்துள்ளது.

 


உடனடி உணவுச் சந்தையில் புதிய

களம்...


No comments

Theme images by fpm. Powered by Blogger.