ஆன்லைனில் உங்கள் TIN எண்ணை எளிதாகப் பெற்றுக்கொள்வது எப்படி?
ஆன்லைனில் உங்கள் TIN எண்ணை எளிதாகப் பெற்றுக்கொள்வது எப்படி?

ஆன்லைனில் உங்கள் TIN எண்ணை எளிதாகப் பெற்றுக்கொள்வது எப்படி?
இலங்கை
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் (IRD) வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பெறுவதற்கு இனி அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை.
பதிவுசெய்யப்பட்ட
கைபேசி எண்ணைப் பயன்படுத்தி, வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் TIN எண்ணைப் பெற்றுக்கொள்ளலாம்.
பின்பற்ற
வேண்டிய வழிமுறைகள்:
🔹 படி 1: IRD e-Services இணையத்தளத்திற்குச் செல்லவும்.
🔹 படி 2: Entity ID வகையாக உங்கள் தேசிய அடையாள அட்டை (NIC) அல்லது பொருத்தமான அடையாளத்தைத் தேர்வு செய்து, அதன் எண்ணை உள்ளிடவும்.
🔹 படி 3: பதிவுசெய்யப்பட்ட கைபேசி எண்ணை உள்ளிட்டு "Send
OTP" என்பதைத் தெரிவுசெய்யவும்.
🔹 படி 4: உங்கள் கைபேசிக்கு வரும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லை (OTP) உள்ளிடவும்.
🔹 படி 5: விவரங்களைச் சமர்ப்பித்தவுடன், உங்கள் TIN எண்h திரையில் காண்பிக்கப்படும்.
AI போலி பெண் Facebook கணக்குகள் மூலம் மோசடி_..!
நாட்டில்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலிப் பெண் கணக்குகள் பேஸ்புக் தளத்தில் எவ்வாறு இயங்குகின்றன என்பது குறித்த முதலாவது முறையான ஆய்வு அறிக்கையை,
சிரேஷ்ட
ஆய்வாளர் கலாநிதி சஞ்சன ஹத்தொட்டுவ வெளியிட்டுள்ளார்.
இந்த
ஆய்வின் மூலம், பயனர்களை ஏமாற்றி சூதாட்டம், முதியோருக்கான செட் , கிரிப்டோகரன்சி மற்றும் ஏனைய நிதி மோசடித் தளங்களை நோக்கி ஈர்ப்பதற்காக மிக நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வலையமைப்பு செயல்பட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆய்வறிக்கையின்
அதிர்ச்சியூட்டும் முக்கிய விபரங்கள்:
போலி
அடையாளங்கள்: இந்த ஆய்விற்காக 10 குறிப்பிட்ட பேஸ்புக் கணக்குகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன.
அவற்றில்
ஒன்று கூட உண்மையான பெண்களுக்குச் சொந்தமானவை அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிமை,
விதவைக்கோலம், விவாகரத்து அல்லது கடுமையான பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளது போன்ற உணர்ச்சிபூர்வமான பதிவுகளை பதிவிட்டு,
அதன்
மூலம் உண்மையான பயனர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கே இந்த ஏஐ அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த
போலி வலையமைப்பினால் பதிவிடப்பட்ட 1,706 பதிவுகள் மூலம் 8,90,000 க்கும் அதிகமான ஈர்ப்புகள் பெறப்பட்டுள்ளன.
சில
நிமிட இடைவெளியில் ஒரே மாதிரியான தலைப்புகள் மற்றும் போஸ்ட்கள் பல கணக்குகளில் பகிரப்பட்டதன்
மூலம் இது ஒரு திட்டமிட்ட கூட்டுச் செயல்பாடு என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கணக்குகளின்
சுயவிபரம், சுருக்கப்பட்ட லிங்குகள் மற்றும் முதலாவது கமெண்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி,
பேஸ்புக்கிற்கு
வெளியேயுள்ள சந்தேகத்திற்குரிய இணையதளங்களுக்குப் பயனர்களை இந்த கணக்குகள் வழிகாட்டியுள்ளன.
தற்போதைய
நிலையில் இந்த வலையமைப்பு அரசியல் செல்வாக்கைச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.
எனினும்,
இந்த போலி கணக்குகள் ஏற்கனவே பொதுமக்களின் நம்பிக்கையையும் பெரும் வாசகர் வட்டத்தையும் பெற்றுள்ளதால்,
எதிர்காலத்தில்
இதே உட்கட்டமைப்பை அரசியல் அல்லது பிற தவறான பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்துவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக கலாநிதி சஞ்சன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகைய
போலி வலையமைப்புகள் ஸ்பானிஷ், இத்தாலியன் மற்றும் மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் கண்டறியப்பட்டுள்ளதால், இலங்கையில் இயங்கும் இந்தச் செயல்பாடு ஒரு சர்வதேச மோசடி மாதிரியின் ஒரு அங்கமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
சாதாரண
பேஸ்புக் பயனர்களால் இந்த ஏஐ கணக்குகளையும் உண்மையான
கணக்குகளையும் வேறுபடுத்திப் பார்ப்பது தற்போதைய சூழலில் மிகவும் கடினமான ஒன்றாக மாறியுள்ளதாக இந்த ஆய்வின் முடிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு_..!
கொழும்பு
பல்கலைக்கழகத்தில் 71
மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக,
அதன்
துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
அவர்களில்
5 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதிவாகியுள்ள
டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கலைப்பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால்,
அவர்களின்
கல்விச் செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தி, ஒரு வார காலத்திற்கு பல பீடங்களின் விரிவுரைகளை
மாத்திரம் இணையவழி மற்றும் கலப்பு முறையில் முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக துணைவேந்தர் மேலும் குறிப்பிட்டார்.
டெங்கு
பரவலுக்கு மத்தியில், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பல்கலைக்கழகத்தினால் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் உடல்நிலை குறித்து தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகவும் பேராசிரியர் இந்திக்க கருணாதிலக்க தெரிவித்தார்.
டெங்கு
நோய் தொற்றின் போது ஓய்வு என்பது அத்தியாவசியமான ஒன்று என்பதால்,
இவ்வாறு
விரிவுரைகளை இணையவழி ஊடாக நடத்துவதற்குத் தீர்மானித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது
பல்கலைக்கழகத்திற்குள்
நிலவும் சூழல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட துணைவேந்தர், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏதேனும் காணப்பட்டால்,
தயவுசெய்து
அதற்குரிய மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு மாணவர்களிடம் கோரியுள்ளார்.
இந்தச்
சூழ்நிலையில் எந்தவொரு வகையிலும் பல்கலைக்கழகம் மூடப்படவில்லை என்பதை வலியுறுத்திய துணைவேந்தர்,
அவ்வாறு
பல்கலைக்கழகத்தை மூடும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்ட 8 PHI அதிகாரிகளுக்கு டெங்கு பாதிப்பு..!
டெங்கு
ஒழிப்புப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் கடினமாக உழைத்து வரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த,
8 பொதுச்
சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளது.
சுகாதார
ஊழியர்கள் சிலருக்கும் டெங்கு நோய் தொற்றியுள்ளதாகவும்,
கொழும்பு
மாவட்டம் முழுவதும் தற்போது டெங்கு தொற்று வேகமாக பரவி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த
ஜூன் மாதம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்புச் சோதனைகளின் போது,
தங்களது
கடமைகளையும் பொறுப்புகளையும் சரிவர நிறைவேற்றாத 1,186 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,
இதன்
மூலம் ஒரு கோடியே 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் (10,225,000) அபராதப் பணம் வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக அமித் குமார தெரிவித்துள்ளார்.
ஜூன்
மாதத்தில் மாத்திரம் 494 வீடுகள், 134 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், 4 பாடசாலைகள் மற்றும் 2 வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
எதிர்வரும்
காலங்களிலும் எவ்வித தராதரமும் பாராது சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இச் சங்கத்தின் தலைவர் கூறினார்.
நீர்கொழும்பு சிறை வன்முறைச் சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் உயிரிழப்பு
நீர்கொழும்பு
சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் இந்திய பிரஜை ஒருவரும் உயிரிழந்துள்ளதாக 'த ஹிந்து' (The Hindu) செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த
சிறைச்சாலையில் கைதியாக இருந்த எஸ். உன்னிகிருஷ்ணன் என்ற 73 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச்
சம்பவம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதிகாரப்பூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை என்றாலும், இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்திய தரப்பால் இது தொடர்பாக குறிப்பு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதை கொழும்பிலுள்ள தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக 'த ஹிந்து' மேலும்
சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த
மோதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 28 ஆக அதிகரித்துள்ளது.
நீர்கொழும்பு
சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த வன்முறைகளைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் பாதுகாப்புக் கருதி நாட்டின் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறிப்பாக,
அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியக் கைதிகளும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிவேக வீதியை கன்னொருவை வரை நீடிக்கத் திட்டம்!
மத்திய
அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகளை கலகெதர பகுதியில் நிறைவு செய்வது, எதிர்காலத்தில் அந்த அதிவேக வீதியை கன்னொருவை வரை நீடிக்கும் திட்டத்துடன்தான் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று
(09) பாராளுமன்றத்தில்
பாராளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர்,
கண்டி நகரில் மேலும் பல வீதி அபிவிருத்திப்
பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன்,
சேதமடைந்த கொழும்பு – கண்டி மலையக பிரதான ரயில் பாதையின் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2027 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஆன்லைனில் உங்கள் TIN எண்ணை எளிதாகப் பெற்றுக்கொள்வது எப்படி?
No comments