தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு...

 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

முடிவுகள் தொடர்பில் வெளியான

அறிவிப்பு...



தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு...



 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

முடிவுகள் தொடர்பில் வெளியான

அறிவிப்பு...


2026 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் ஆகஸ்ட் 20 ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 25 ஆம் திகதி நிறைவடையும் என பரீட்சைகள்  திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

நாடு முழுவதும் உள்ள பரீட்சை நிலையங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெற்றது.

 

விடைத்தாள் திருத்தம் மற்றும் அதற்கான மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஒரு மாதத்திற்குள் முடிவுகளை வெளியிடத் திணைக்களம் எதிர்பார்க்கிறது.

 




இலங்கையருக்கு வெளியான எச்சரிக்கை

 Facebook, Messenger, Instagram மற்றும் WhatsApp ஆகிய சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி பெருமளவில் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட கப்பம் கோரும் மோசடி தொடர்பில் தகவல்களைக் கண்டறிய இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் (SLCERT) நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இந்த மோசடி இந்தியாவிலிருந்தே இயங்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மோசடிக்காரர்கள் தங்களின் இலக்குகளை வீழ்த்துவதற்கு முன்னர், அவர்களின் சகோதர சகோதரிகள் உட்பட உறவினர்கள் மற்றும் நண்பர்களைத் தங்களது நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டுள்ளனர்.

 

இந்த மோசடியின் முதல் கட்டமாக, Instagram மூலம் அழகான பெண்ணின் புகைப்படத்தைக் கொண்ட கணக்கிலிருந்து 'Hi' எனச் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

 

அந்தச் செய்திக்கு பதிலளிப்பவர்களைக் அவதானித்து, சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அவர்களுடன் உரையாடலைத் தொடங்குகின்றனர்.

 

புகைப்படத்தில் உள்ள பெண்ணின் அழகைக் கண்டு அவர்கள் மீண்டும் அந்தச் செய்திக்குப் பதிலளிக்கின்றனர்.

 

அதன்பின்னர், அப்பெண்ணின் அரைகுறை ஆடை அல்லது நிர்வாணப் புகைப்படங்களை அனுப்பி, மறுமுனையிலும் நிர்வாணப் புகைப்படங்களை அனுப்புமாறு அல்லது WhatsApp வீடியோ அழைப்பு மூலம் காட்சிகளை வழங்குமாறு தூண்டுகின்றனர்.

 

பின்னர் அந்த வீடியோ காட்சிகளைப் பதிவுசெய்து, அவற்றை அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி விடுவதாக மிரட்டி பணம் மற்றும் கப்பம் பெறப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

 

எனவே, அடையாளம் தெரியாத கணக்குகள் அல்லது எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகள், நண்பர் கோரிக்கைகள் மற்றும் அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 



மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!

 

நாட்டின் சில கடற்பரப்புகளில் பலத்த காற்றும், கடுமையான கடல் கொந்தளிப்பும் நிலவக்கூடும் என்பதால் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுத்துள்ளது.

 

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டருக்கும் அதிகமாக வீசக்கூடும் என் தெரிவிக்கப்படுகிறது.

 

கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மறுஅறிவித்தல் வரும் வரை மீனவர்கள் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் இப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

 

மட்டக்களப்பு, திருகோணமலை, கங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் காலியிலிருந்து மாத்தறை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் இப்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், கடல் தற்காலிகமாகக் கொந்தளிப்பாக மாறக்கூடும். எனவே, வளிமண்டலவியல் திணைக்களம் அவ்வப்போது வெளியிடும் அடுத்தடுத்த முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

 

 

 

அதிக விலைக்கு அரிசி விற்பனை

 

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வெல்லவாய பகுதியிலுள்ள இரண்டு கடைகளுக்கு,

 

3 இலட்சம் ரூபா அபராதம் விதித்து வெல்லவாய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

உள்நாட்டு கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் கட்டுப்பாட்டு விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில்,

 

05 கிலோ எடையுள்ள பொதியொன்றை கிலோவொன்று 350 ரூபா வீதம் விற்பனை செய்தமை தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

 

இதற்கமைய, குறித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு 150,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.

 

அத்துடன், வெல்லவாயவின் யாலபோவ பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட பொன்னி சம்பா GR 11 அரிசி கிலோவொன்றின் கட்டுப்பாட்டு விலை 240 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில்,

 

கிலோவொன்றை 260 ரூபாவிற்கு அதிக விலைக்கு சில்லறையாக விற்பனை செய்தமை தொடர்பாகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

 

அங்கு குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கும் வெல்லவாய நீதவான் நீதிமன்றம் 150,000 ரூபா அபராதம் விதித்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 


2026 .பொ. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

 

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

 

இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர் அனைத்துப் பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வருகை தர வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

 

மேலும் கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது புளூடூத் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

 

பரீட்சை விதிமுறைகளுக்கு அமைய செயற்பட்டு பரீட்சை மோசடிகளை தவிர்குமாறும்,

 

கடந்த வருடங்களிலும் பரீட்சை மோசடிகள் காரணமாக பல மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

 

ஏதேனும் அவசர அனர்த்த நிலைமை ஏற்பட்டால் அதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க பரீட்சைத் திணைக்களம் ஆயத்தமாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

இலங்கையில் இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட முக்கிய

 

நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளுக்காக,

 

25,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் காத்திருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

அக்கூட்டமைப்பின் தலைவரான நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ சுட்டிக்காட்டுகையில் 

 

இந்தக் காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகளின் அறுவை சிகிச்சைகளை விரைவுபடுத்துவதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும்,

 

அந்தத் திட்டம் இதுவரை தீவிரமாகச் செயல்படுத்தப்படாதது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

 

ஏழை நோயாளிகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒதுக்கப்படும் தொகையை அதிகரித்து,

 

அரசு மருத்துவமனைகளின் காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகள் குறிப்பிட்ட கட்டணங்களுக்கு உட்பட்டு தனியார் துறையிலாவது அறுவை சிகிச்சைகளைச் செய்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

 

அவ்வாறு செய்யாவிட்டால், அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்கி,

 

நாளொன்றுக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

இதுதவிர, சம்பந்தப்பட்ட துறைகள் சார்ந்த நிபுணத்துவ மருத்துவர்களைப் பயிற்றுவிக்கும் திறனை அதிகரிப்பது,

 

மருத்துவமனை வசதிகளை மேம்படுத்துவது,

 

நவீன அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் பரிசோதனை சாதனங்களைக் கொள்முதல் செய்வதன் மூலம் எதிர்காலத்தில் இந்த நெரிசலைக் குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

தற்போதுள்ள இதய அறுவை சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் 2029 ஆம் ஆண்டு வரை நீடிப்பதோடு,

 

சிறுநீரகம் மற்றும் ஏனைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக தினமும் நோயாளிகள் சேர்க்கப்படுவதால்,

 

முழு சுகாதார அமைப்பும் தாங்க முடியாத அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ மேலும் வலியுறுத்தினார்.

 


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு...


No comments

Theme images by fpm. Powered by Blogger.