அபாயா மற்றும் பர்தா அணிந்து கடமையாற்ற அனுமதி…
அபாயா மற்றும் பர்தா அணிந்து
கடமையாற்ற அனுமதி…

அபாயா மற்றும் பர்தா அணிந்து
கடமையாற்ற அனுமதி…
புதிதாக நியமனம் பெற்ற உதவி சுகாதார உத்தியோகத்தர்கள் 9 பேர்,
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமைக்கு சென்ற போது,
கடமைக்கு அறிக்கை செய்ய விடாது தடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் நேற்று (10) இடம்பெற்றிருந்தது.
புதிய நியமனம் பெற்ற குறித்த பெண் உத்தியோகத்தர்களும் தங்களது கலாசார மற்றும் மத நடைமுறைக்கு அமைவாக பர்தா அணிந்த நிலையில்,
வைத்தியசாலைக்கு கடமையேற்கச் சென்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து பல பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுவந்த நிலையில்,
இலங்கையில் இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகளுக்காக…
நாடு
முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளுக்காக,
25,000க்கும்
மேற்பட்ட நோயாளிகள் காத்திருப்புப் பட்டியலில் காத்திருப்பதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அக்கூட்டமைப்பின்
தலைவரான நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ சுட்டிக்காட்டுகையில்
இந்தக்
காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகளின் அறுவை சிகிச்சைகளை விரைவுபடுத்துவதற்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்த
போதிலும்,
அந்தத்
திட்டம் இதுவரை தீவிரமாகச் செயல்படுத்தப்படாதது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.
ஏழை
நோயாளிகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒதுக்கப்படும் தொகையை அதிகரித்து,
அரசு
மருத்துவமனைகளின் காத்திருப்புப் பட்டியலில் உள்ள நோயாளிகள் குறிப்பிட்ட கட்டணங்களுக்கு உட்பட்டு தனியார் துறையிலாவது அறுவை சிகிச்சைகளைச் செய்துகொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவர் யோசனை
தெரிவித்துள்ளார்.
அவ்வாறு
செய்யாவிட்டால், அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்கி,
நாளொன்றுக்கு
மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுதவிர,
சம்பந்தப்பட்ட துறைகள் சார்ந்த நிபுணத்துவ மருத்துவர்களைப் பயிற்றுவிக்கும் திறனை அதிகரிப்பது,
மருத்துவமனை
வசதிகளை மேம்படுத்துவது,
நவீன
அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் பரிசோதனை சாதனங்களைக் கொள்முதல் செய்வதன் மூலம் எதிர்காலத்தில் இந்த நெரிசலைக் குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள
இதய அறுவை சிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் 2029 ஆம் ஆண்டு வரை நீடிப்பதோடு,
சிறுநீரகம்
மற்றும் ஏனைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக தினமும் நோயாளிகள் சேர்க்கப்படுவதால்,
முழு
சுகாதார அமைப்பும் தாங்க முடியாத அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ மேலும் வலியுறுத்தினார்.
கல்முனை பகுதியில் தொடர் சைக்கிள் திருட்டு…
கல்முனை
தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த துவிச்சக்கரவண்டி (சைக்கிள்) திருட்டுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளை அடுத்து,
போதைப்பொருளுக்கு
அடிமையான இரு சகோதரர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
கல்முனை
தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி அவர்களின் தலைமையில்,
குற்றத்தடுப்புப்
பிரிவுப் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர்
கே.எல்.எம். முஸ்தபா அவர்களின் வழிகாட்டலில் விசேட பொலிஸ் குழுவினர் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
குற்றத்தடுப்புப்
பிரிவிற்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையின் போது,
கல்முனைக்குடி
செய்லான் வீதியைச் சேர்ந்த 34 வயதுடைய இரு சகோதரர்கள் 3 திருடப்பட்ட சைக்கிள்கள் மற்றும் ஒரு தொகுதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
கைது
செய்யப்பட்டவர்களிடம்
நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில்,
திருடப்பட்ட
இரண்டு சைக்கிள்கள் சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதியில் உள்ள பழைய இரும்பு வியாபாரி ஒருவரிடம் தலா 2,400 ரூபாவிற்கு விற்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
அதன்பேரில்,
கல்முனைப் பகுதியில் வைத்து மற்றுமொரு சைக்கிளை 1,700 ரூபாவிற்கு விலைக்கு வாங்கிய நபரையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைது
செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து,
அவர்களை
எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மிலான் லினாட்டே விமான நிலையத்தில்…
இத்தாலியின்
மிலான் லினாட்டே (Milan Linate) விமான நிலையத்தில் நேற்று (10) ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த,
தனியார்
ஜெட் விமானம் மீது தரைவழிச் சேவை வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
புதிய ஆம்புலன்ஸ் (Ambulance) வாகனங்கள்…
பதுளை
மாவட்ட வைத்தியசாலைகளுக்காக 181.5 மில்லியன் ரூபாய் செலவில்,
புதிய
ஆம்புலன்ஸ்
(Ambulance) வாகனங்கள்
மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
11 வயது சிறுமிக்கு பாலியல் துஷ்பிரயோகம்…
நண்பனின்
11 வயது மகளை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய நபருக்கு,
40 ஆண்டுகள்
கடூழிய சிறைத்தண்டனை விதித்து,
வவுனியா
மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா
தீர்ப்பளித்தார்.
கடந்த
2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட,
தந்தையின்
பராமரிப்பின் கீழ் இருந்த 11 வயது சிறுமியை பாரதூரமான பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகிய,
36 வயது
நிரம்பிய நபருக்கு எதிராக வவுனியா பொலிஸாரினால் 2016 ஆம் ஆண்டு பீ அறிக்கை வவுனியா
நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் வெள்ள அபாயம் இல்லை-அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் அறிவிப்பு
தற்போது
நாட்டில் எந்தப் பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசனத் திணைக்களத்தின்
நீர்வியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று தெரிவித்தார்.
நாட்டில்
பெய்த மழைவீழ்ச்சி குறைந்துள்ளதைத் தொடர்ந்து, எந்தவொரு ஆற்றின் நீர்மட்டமும் விரைவாக உயரவில்லை என்பதுடன், வெள்ள அபாய நிலையும் ஏற்படவில்லை என அவர் மேலும்
உறுதிப்படுத்தினார்.
கடந்த
24 மணித்தியாலத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சியாக சுமார் 20 மில்லிமீற்றர் அளவில் களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் மேல்நிலைப் படுகைப் பகுதிகளிலேயே பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை,
நேற்றைய தினம் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும் மழை பெய்தபோதிலும், அப்பகுதிகளில் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான குறைந்த மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளது.
நாட்டின்
ஏனைய பகுதிகளிலும் 10 மில்லிமீற்றருக்கும் குறைவான குறைந்த மழைவீழ்ச்சியே பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழமைக்கு திரும்பிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சேவைகள்!
குடிவரவு
மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் இன்று (11) காலை ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட
கணினி அமைப்பு மீட்டமைக்கப்பட்டு, தற்போது வழைமை போன்று இயங்கி வருவதாக அத்திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.
கணினி
அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று காலை கடவுச்சீட்டு வழங்கும் சேவைகள் தற்காலிகமாகத் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments