இலங்கையில் புதிய சீரோ கிளிக் வட்ஸ்அப் தாக்குதல்…
இலங்கையில் புதிய சீரோ கிளிக் வட்ஸ்அப் தாக்குதல்…

புதியதாக
அடையாளம் காணப்பட்ட சீரோ - கிளிக் வட்ஸ்அப் (Zero-Click
WhatsApp) கணக்கு கைப்பற்றும் தாக்குதல், பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள ஐஓஎஸ் 16 பதிப்புகளில் இயங்கும் ஐபோன் சாதனங்களை இலக்காகக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இலங்கை கணனி அவசர தயார் நிலை அணி தெரிவித்துள்ளது.
இந்த
தாக்குதலின் முக்கிய அம்சம், பயனர் எந்தச் செயலையும் செய்யாமல் இருந்தபோதும் தாக்குதலாளர்கள் வட்ஸ்அப் கணக்கிற்குள் நுழைய முடிவதாகும் என்றும் அந்த அணி குறிப்பிட்டுள்ளது.
இலங்கை
கணனி அவசர தயார் நிலை அணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
புதியதாக
அடையாளம் காணப்பட்ட சீரோ -கிளிக் வட்ஸ்அப் கணக்கு கைப்பற்றும் தாக்குதல், பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள ஐஓஎஸ் 16 பதிப்புகளில் இயங்கும் ஐபோன் சாதனங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த
தாக்குதலின் முக்கிய அம்சம், பயனர் எந்தச் செயலையும் செய்யாமல் இருந்தபோதும் தாக்குதலாளர்கள் வட்ஸ்அப் கணக்கிற்குள் நுழைய முடிவதாகும்.
இந்த
தாக்குதல் தொடர்பாக ஊடகத்துறையினர், வணிக சமூக உறுப்பினர்கள் உட்பட பலர் இலங்கை கணனி அவசர தயார் நிலை அணிக்கு முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதன்
மூலம் இந்த சீரோ - கிளிக் வட்ஸ்அப் பாதுகாப்பு மீறல் இலங்கையிலும் இடம்பெற்று வருவதாகக் காணப்படுகிறது.
இத்தாலிய
பாதுகாப்பு ஆய்வு நிறுவனமொன்றின் Forensic விசாரணையின் படி, வட்ஸ்அப்பின் Linked Device
Synchronization செயல்முறையை
பாதிக்கும் பல பாதுகாப்பு குறைபாடுகளை
இணைத்து பயன்படுத்தி தாக்குதலாளர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள்
தெரிவித்ததாவது, தங்களது வட்ஸ்அப் கணக்குகளில் இருந்து பணம் மாற்றுமாறு கோரும் அனுமதியற்ற செய்திகள் அனுப்பப்பட்டிருந்தன.
ஆனால்,
கணக்கின் Linked
Devices அமைப்புகளில்
எந்தச் சந்தேகத்திற்கிடமான சாதனமும் காணப்படவில்லை.
மேலும்,
சில சந்தர்ப்பங்களில் தாக்குதலாளர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வட்ஸ் அப் குழுக்களின் நிர்வாக உரிமைகளையும் கைப்பற்றியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
தாக்குதல் ஐஓஎஸ் 16.7.12 க்கும் குறைந்த பதிப்புகளில் இயங்கும் சாதனங்களை பாதிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
இது
பாரம்பரிய QR-code
phishing தாக்குதல்களை
விட மிகவும் சிக்கலானதும் மேம்பட்டதுமான தாக்குதல் முறையாக கருதப்படுகிறது.
ஐஓஎஸ்ஸை
உடனடியாக சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்கவும், வட்ஸ்அப்பின் அண்மைய பதிப்பை நிறுவவும், Two-Step
Verification வசதியை செயல்படுத்தவும், Chat Lock
வசதியை பயன்படுத்தவும்,
அசாதாரணமான
பணக் கோரிக்கைகள் வந்தால், நம்பகமான வேறு தொடர்பு வழி மூலம் உறுதிப்படுத்தவும்
பாதுகாப்பு
நிபுணர்கள் எச்சரிப்பதாவது, இந்த சம்பவம் நிதி மோசடிகளை மேற்கொள்ளும் சைபர் குற்றவாளிகள் எந்தவொரு கிளிக் நடவடிக்கையும் இன்றிச் செய்யப்படும் ஊடுருவல் நுட்பங்களை அதிகளவில் பயன்படுத்தி வருவதை வெளிப்படுத்துகிறது.
எனவே,
மொபைல் சாதனங்களையும் பயன்பாடுகளையும் எப்போதும் முழுமையாக புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.
14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை…
ஜனவரி
மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 இலட்சத்தைக் கடந்துள்ளது.
அதன்படி,
ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 9 ஆம் திகதி வரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,408,620 ஆகப் பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை,
ஒகஸ்ட் 01 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை 65,202 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
ஒகஸ்ட்
மாதத்தில் இதுவரை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 13,483 ஆகும்.
இரண்டாவதாக
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 7,460 ஆகப் பதிவாகியுள்ளது.
மூன்றாவதாக
பிரான்ஸிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், அவர்களின் எண்ணிக்கை 5,388 ஆகும்.
இதேவேளை,
ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதுடன், அவ்வெண்ணிக்கை 351,713 ஆகும்.
இது
தவிர, பிரித்தானியாவில் இருந்து 137,861 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 92,940 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும்,
ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பெப்ரவரி மாதத்திலேயே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன்,
அவ்வெண்ணிக்கை
279,328 ஆகப் பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
WhatsApp
Chats Delete பண்ணியும் Storage Full-ஆ இருக்கா ?
✨ 1️⃣ FOLDER #1: Forwarded Many Times
▶ WhatsApp → Settings → Storage and Data → Manage
Storage
▶ 'Larger than 5MB' மற்றும்
'Forwarded Many Times' பகுதியை
ஓபன் பண்ணுங்க.
▶ தேவையில்லாத
ஃபார்வர்ட் வீடியோக்களை டெலீட் பண்ணுங்க! (குடும்ப குரூப் வீடியோக்களே பல GB அடைக்கும்!) 🎥
✨ 2️⃣ FOLDER #2: Large Media inside Chats
▶ Manage Storage பகுதியிலேயே
பெரிய அளவில் உள்ள சாட்களை தேர்வு செய்யுங்கள்.
▶ 'Select All' கொடுக்க
வேண்டாம்! 'Photos' மற்றும் 'Videos' ஃபைல்களை மட்டும் தேர்வு செய்து அழியுங்கள்.
▶ உங்கள்
உரையாடல்கள் அப்படியே இருக்கும், மீடியா ஃபைல்கள் மட்டும் அழிந்து Storage Free ஆகும்! 📸
✨ 3️⃣ FOLDER #3: Old Databases
▶ File Manager → Internal
Storage → Android →
media → com.whatsapp →
WhatsApp → Databases
▶ இதில்
உள்ள பழைய msgstore-2024-xx.db ஃபைல்களில் கடைசி ஃபைலைத் தவிர மற்ற பழைய பேக்கப் ஃபைல்களை டெலீட் செய்யுங்கள்!
▶ ஒவ்வொரு
ஃபைலும் 300MB -
500MB வரை இருக்கும்! 🗄️🧹
✨ 4️⃣ FOLDER #4: WhatsApp Status Folder
▶ File Manager Settings →
Show Hidden Files (Enable)
▶ WhatsApp → Media → .Statuses ஃபொல்டருக்குச்
செல்லுங்கள்.
▶ நீங்க
பார்த்த அத்தனை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களும் இங்கு சேமிக்கப்பட்டிருக்கும்.
Select All → Delete கொடுங்கள்!
👁️🗨️
📲 iPhone Users-க்கு?
▶ WhatsApp → Settings → Storage and Data → Manage
Storage → Review and Delete Items
▶ Settings → Chats → Save to Photos → OFF செய்து விடுங்கள்! 🍏
🚫 திரும்பவும் Storage Full ஆகாமல் தடுக்க 3 Simple Steps:
1️⃣
Settings → Storage and Data → Media Auto-Download → எல்லாவற்றையும் OFF செய்யுங்கள்!
2️⃣
Settings → Chats → Media Visibility → OFF மாற்றுங்கள்!
3️⃣ தேவையில்லாத பெரிய ஃபார்வர்ட் பிராட்காஸ்ட் குரூப்களில் இருந்து வெளியேறுங்கள்! ⚙️⚡
➜ உடனே
5 நிமிடங்கள் ஒதுக்கி இந்த 4 ஃபொல்டர்களை க்ளீன் பண்ணுங்க!
பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த…
அநுராதபுரம்
- கல்நேவ பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த,
23 வயதுடைய
இளைஞர் ஒருவர் கல்நேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக்
கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்,
கல்நேவ
பொலிஸ் குழுவினரும் வடமத்திய மாகாண ஆயுர்வேதத் திணைக்களத்தின் சமூக சுகாதார மருத்துவ அதிகாரிகளும் இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து கஞ்சா அடங்கிய 94 சிறிய பொதிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன்,
கஞ்சா கலந்த போதைப்பொருட்கள் அடங்கிய 150 கிராம் நிறை கொண்ட 15 போத்தல்கள், 250 கிராம் நிறை கொண்ட 21 போத்தல்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட
கஞ்சா கலந்த போதைப்பொருட்களின் மொத்த நிறை 9 கிலோகிராம் 296 கிராம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவனகல
பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் கல்நேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Mobile
Battery Life நீண்ட நாள் இருக்க இந்த Tips
Follow பண்ணுங்க…
➜ உங்க
Battery Health-ஐ
100% பாதுகாக்க இந்த Smart Steps ஃபாலோ பண்ணுங்க:
✨ 1️⃣ Follow the 20-80 Rule
▶ Charge-ஐ
20%-க்கு கீழே குறைய விடாதீங்க, அதேபோல 80% - 85% வந்ததும் Plug Out பண்ணிடுங்க!
▶ 0% வரை
விட்டு 100% முழுசா சார்ஜ் போடுறது Battery Stress-ஐ அதிகரிக்கும்! 🛑
✨ 2️⃣ Avoid Overnight Charging
▶ இரவு
முழுவதும் போனை சார்ஜரில் போட்டு வைப்பதை தவிர்க்கவும்.
▶ இது
அதிக வெப்பத்தை உருவாக்கலாம், காலப்போக்கில் Battery
Capacity-ஐ குறைத்துவிடும்! 🔌❌
✨ 3️⃣ Don't Play Games While Charging
▶ சார்ஜ்
ஏறும்போது Gaming, 4K
Video Watching அல்லது
Heavy Apps பயன்படுத்தாதீங்க.
▶ Heating தான்
பேட்டரியின் மிகப்பெரிய எதிரி! 🔥
✨ 4️⃣ Use Original Charger Only
▶ எப்போதும்
போனுடன் வந்த Original Charger அல்லது Brand Verified Fast
Charger மட்டுமே பயன்படுத்துங்கள்.
▶ மலிவான
Local Chargers போனின்
Motherboard மற்றும்
Battery-ஐ பாழ்படுத்திவிடும்! ⚡
✨ 5️⃣ Turn Off Unnecessary Features
▶ தேவையில்லாத
நேரத்தில் Location
(GPS), Wi-Fi Scanning & Bluetooth-ஐ
Off செய்து வையுங்கள்.
▶ Screen Brightness-ஐ
Auto-Brightness பயன்முறைக்கு
மாற்றுங்கள்! 💡
✨ 6️⃣ Enable Battery Saver & Dark Mode
▶ AMOLED/OLED Screen உள்ள
போன்களில் Dark Mode பயன்படுத்துவது கணிசமான சார்ஜை சேமிக்கும்! 🌙
உடனே
இந்த 6 Habits-ஐ ஃபாலோ பண்ணி
உங்க Phone Battery
Health-ஐ அதிகப்படுத்துங்க! 🚀⚡
உங்க
போனில் இப்போது Battery Health % எவ்வளவு இருக்கு?
அல்லது
ஒரு நாளைக்கு எத்தனை முறை சார்ஜ் போடுவீங்க?
இந்த
கேள்விக்கான பதிலை உங்க பக்கத்துல இருக்குற பிரண்ட்ஸ் கிட்ட சொல்லுங்க.
இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று மேலும் உயர்வு...
அமெரிக்க
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் (12.08.2026) மேலும் வலுவடைந்துள்ளது.
அமெரிக்க
டொலரின் சராசரி கொள்வனவு விலை 330.3351 ரூபாயாகக் குறைந்துள்ளதுடன், அதன் விற்பனை விலையும் 339.5820 ரூபாயாகக் குறைந்து ரூபாயின் மதிப்பு உயர்வடைந்துள்ளது.
அமெரிக்க
டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.
ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் கணக்குகளை முடக்கும் புதிய இணையவழி தாக்குதல்.
இலங்கையிலுள்ள
ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் (WhatsApp) கணக்குகளை இலக்குவைத்து 'ஸீரோ க்ளிக்' (Zero-click) வகையிலான புதிய இணையவழி தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் இலங்கை கணினி அவசர பதிலளிப்பு குழுவுக்கு (SLCERT) முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
பாதிக்கப்பட்ட
நபர் எந்தவொரு போலி இணைப்புகளையும் (Links) கொடுக்காத நிலையிலும் அல்லது QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாத நிலையிலும், அவர்களின் வட்ஸ்அப் கணக்குகளை இணைய ஊடுருவிகள் (Hackers) தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் வகையில் இந்தத் தாக்குதல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய
iOS பதிப்புகளில் இயங்கும் ஐபோன்களே இந்தத் தாக்குதலினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், இலங்கையின் ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகச் சமூகத்தைச் சேர்ந்த பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு
ஊடுருவப்பட்ட வட்ஸ்அப் கணக்குகள் மூலம் மற்றவர்களுக்குப் பணமனுப்புமாறு கோரி போலிச் செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
iOS 16.7.12 க்கும்
பழைய பதிப்புகளைப் பயன்படுத்தும் ஐபோன் பயனர்களே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே,
இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க ஐபோன் பயனர்கள் உடனடியாகத் தமது தொலைபேசிகளின் iOS பதிப்பையும், வட்ஸ்அப் செயலியையும் அண்மைய பதிப்புக்கு புதுப்பிக்குமாறு (Update) இணையப் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன்,
வட்ஸ்அப் கணக்குகளில் இருபடிச் சரிபார்ப்பு (Two-Step
Verification) மற்றும்
'செட் லாக்' (Chat Lock) ஆகிய பாதுகாப்பு அம்சங்களை உடனடியாகச் செயற்படுத்துமாறும், தெரிந்த நபர்களிடம் இருந்து பணக் கோரிக்கைகள் வந்தால் தொலைபேசி அழைப்பு மூலம் அதனை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையில் புதிய சீரோ கிளிக் வட்ஸ்அப் தாக்குதல்…
No comments