Enjoy WhatsApp Users..! --உங்களை வியக்க வைக்கும் 5 அம்சங்கள்..!

  Enjoy WhatsApp Users..! --உங்களை வியக்க வைக்கும் 5 அம்சங்கள்..!



Enjoy WhatsApp Users..! --உங்களை வியக்க வைக்கும் 5 அம்சங்கள்..!



Enjoy WhatsApp Users..! --உங்களை வியக்க வைக்கும் 5 அம்சங்கள்..!

வாட்ஸ்அப் செயலியில் மெசேஜிங் அனுபவத்தை மேலும் எளிமையாகவும்,

பிரைவசி பாதுகாப்பை பலமடங்கு உயர்த்தவும் கொண்டுவரப்பட்டுள்ள Top 5 Game-Changing Features!

உங்கள் வாட்ஸ்அப் செயலியை உடனடியாக Google Play Store அல்லது Apple App Store-ல் Update செய்துவிட்டு இந்த அம்சங்களை செக் செய்து பாருங்கள்: 👇


1. 𝐕𝐎𝐈𝐂𝐄 𝐌𝐄𝐒𝐒𝐀𝐆𝐄 𝐓𝐑𝐀𝐍𝐒𝐂𝐑𝐈𝐏𝐓𝐒 (ஆடியோ மெசேஜை டெக்ஸ்ட்டாக படிக்கும் வசதி)

➜ The Feature: கூட்ட நெரிசலில் அல்லது மீட்டிங்கில் இருக்கும்போது வரக்கூடிய நீண்ட வாய்ஸ் நோட்டுகளை இனி ஹெட்போன் இல்லாமலேயே படிக்கலாம்!

➜ How it Works: வாட்ஸ்அப் அந்த ஆடியோவை ஆன்-டிவைஸ் (On-Device AI) முறையில் தானாகவே படித்து கீழே முழுமையாக எழுத்து வடிவில் (Text Transcript) காட்டிவிடும்.

➜ Where to Find: Settings ➔ Chats ➔ Voice Message Transcripts-ஐ ஆன் செய்து கொள்ளவும். 🎙️📝


 2. 𝐂𝐇𝐀𝐓 𝐋𝐈𝐒𝐓 𝐅𝐈𝐋𝐓𝐄𝐑𝐒 & 𝐂𝐔𝐒𝐓𝐎𝐌 𝐋𝐈𝐒𝐓𝐒 (சாட்களை வரிசைப்படுத்தும் வசதி)

➜ The Feature: நூற்றுக்கணக்கான மெசேஜ்களுக்கு நடுவில் முக்கியமான சாட்களைத் தேடி அலைந்த காலத்திற்கு முற்றுப்புள்ளி.

➜ How it Works: திரையின் மேற்பகுதியில் உள்ள All, Unread, Groups, Favourites போன்ற ஃபில்டர்கள் மூலம் தேவையானதை நொடியில் பிரிக்கலாம். மேலும் 'Family', 'Office', 'College Friends' என நீங்களே சொந்தமாக Custom Lists உருவாக்கி சாட்களை வகைப்படுத்திக் கொள்ளலாம்.


 3. 𝐄𝐍𝐇𝐀𝐍𝐂𝐄𝐃 𝐒𝐓𝐀𝐓𝐔𝐒 𝐌𝐄𝐍𝐓𝐈𝐎𝐍𝐒 & 𝐋𝐈𝐊𝐄𝐒 (ஸ்டேட்டஸ் லைக் & பிரைவேட் மென்ஷன்)

➜ The Feature: இன்ஸ்டாகிராம் போல வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் ரியாக்ட் செய்யும் சூப்பர் வசதி.

➜ How it Works:

➜ Status Likes: ஸ்டேட்டஸ் பார்க்கும் போது கீழே இருக்கும் பச்சை நிற 'Heart' பட்டனைத் தட்டி எளிதாக லைக் செய்யலாம்; இது சாட்பாக்ஸில் தனி மெசேஜாகப் போகாது.

➜ Private Mentions: ஸ்டேட்டஸ் வைக்கும் போது நண்பர்களை @mention செய்யலாம். 

அவர்களுக்கு மட்டும் நோட்டிஃபிகேஷன் போகும்; மற்ற யாருக்கும் யார் மென்ஷன் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியாது!


 4. 𝐒𝐂𝐑𝐄𝐄𝐍 𝐒𝐇𝐀𝐑𝐈𝐍𝐆 𝐖𝐈𝐓𝐇 𝐀𝐔𝐃𝐈𝐎 (ஸ்கிரீன் ஷேரிங் உடன் ஆடியோ சப்போர்ட்)

➜ The Feature: வாட்ஸ்அப் வீடியோ காலில் உங்கள் மொபைல் திரையைப் பகிரும்போது இனி ஒலியும் (System Audio) சேர்ந்து கேட்கும்!

➜ How it Works: நண்பர்களுடன் சேர்ந்து ஒரே நேரத்தில் வீடியோக்கள் பார்ப்பதற்கும், பிரசன்டேஷன் அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கு போன் செட்டிங்ஸ் சரிசெய்து கொடுப்பதற்கும் இது மிகச் சிறந்தது.


 5. 𝐌𝐄𝐓𝐀 𝐀𝐈 𝐂𝐎𝐍𝐕𝐄𝐑𝐒𝐀𝐓𝐈𝐎𝐍𝐒 & 𝐈𝐌𝐀𝐆𝐄 𝐄𝐃𝐈𝐓𝐈𝐍𝐆 (நேரடி AI உதவியாளர்)

➜ The Feature: தனி ஆப் தேவைப்படாமல் வாட்ஸ்அப்பிற்குள்ளேயே செயல்படும் பவர்ஃபுல் AI அசிஸ்டெண்ட்.

➜ How it Works: சர்ச் பாரில் உள்ள நீல நிற Meta AI ஐகானைத் தட்டி சந்தேகங்களுக்குப் பதில் பெறலாம், சில நொடிகளில் கற்பனையான படங்களை உருவாக்கலாம் (Generate Images), மேலும் போட்டோக்களில் உள்ள பேக்கிரவுண்டை நீக்க அல்லது மாற்ற வாட்ஸ்அப்பிற்குள்ளேயே எடிட் செய்யலாம்! 

➜ பலர் வாட்ஸ்அப்பை வெறும் மெசேஜ் அனுப்ப மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.


இந்த புதிய அப்டேட்களை முறையாகப் பயன்படுத்தினால் உங்கள் நேரமும் வேலையும் பல மடங்கு மிச்சமாகும்.

வாட்ஸ்அப்பை தினமும் பயன்படுத்தும் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அலுவலக குரூப்களுக்கு உடனே Save & Share செய்து பயன்பெறச் செய்யுங்கள்.




Gov Pay இணையதளம் மூலம் நிதி மோசடி

 

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதக் கட்டணங்களை இணைய வழியில் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி,

 

பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடியொன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

'Gov Pay' மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் கிடையாது என்பதால்,

 

இத்தகைய நிதி மோசடிகளில் சிக்கி ஏமாற வேண்டாம் என்று பொலிஸார் அறிவுறுத்துகின்றனர்.

 

பொதுமக்களின் சேவையை இலகுபடுத்தும் நோக்கிலும், நிதி மோசடிகளைக் குறைக்கும் நோக்கிலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை 'Gov Pay' முறைமையின் மூலம் செலுத்தும் நடைமுறை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

இருப்பினும், 'Gov Pay' அமைப்பைப் போன்ற போலி இணையதளத்தை உருவாக்கி,

 

பொதுமக்களின் பணம் மற்றும் ரகசியத் தரவுகளை தந்திரமாகத் திருடும் மோசடி இடம்பெற்று வருவதாக பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

இந்த போலி இணையதளத்தின் இணைப்புகள் (Links), குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகள் மூலமாக கையடக்க தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்டு, பொதுமக்களின் பணம் இவ்வாறு திருடும் மோசடி இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.

 

'Gov Pay' மூலம் பணத்தைச் செலுத்துவதற்கு வேறு எந்த இணையதளமும் இல்லாததால்,

 

இவ்வாறான போலி நிதி மோசடிகளில் சிக்க வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

 

 

 தந்தையை குத்திக் கொலை செய்த 16 வயது மகன் கைது_..!

 

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

 

இச்சம்பவத்தில் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே மகன் இந்தக்கொலையைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

GCE A/L Results Update...!

 

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான நிலையில் செப்டெம்பர் 05 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

 

இப்பரீட்சைக்கு இம்முறை மொத்தமாக 3 ,72, 310 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதீப்பீடு சனிக்கிழமை (05) முதல் ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் திருமதி இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

 

அத்துடன், உயர்தர பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தெரிவித்தார்.

 

மேலும் பரீட்சை பெறுபேறுகளை இவ்வாண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

 

 

 

ஆரோக்கியத்தை காக்க உதவும் பழக்கங்கள்...!

 

கோப்பவயது அதிகரிப்பது இயற்கையானது என்றாலும்,

 

ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இளமைத் தோற்றத்துடனும் வாழ வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு.

 

இளமையான தோற்றம் என்பது அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது நமது உணவு, தூக்கம், உடற்பயிற்சி, மனநிலை மற்றும் அன்றாட வாழ்க்கை முறையுடனும் நெருங்கிய தொடர்புடையது.

 

சில எளிய, ஆரோக்கியமான பழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் உடலையும்,

 

மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.

 

இயற்கையான முறையில் முதுமையை தாமதப்படுத்தி, நீண்ட காலம் ஆரோக்கியத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வாழ உதவும் சில முக்கியமான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

 

தினமும் குறைந்தபட்சம் 8 டம்ளர் (2.2 முதல் 3 லிட்டர்) தண்ணீர் பருகுங்கள். உடலின் இயல்பான செயல்பாடுகளுக்கும், சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்கவும் தண்ணீர் உதவும்.

 

பழங்கள், காய்கறிகள், முழுத் தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த சத்தான உணவை உண்ணுங்கள்.

 

நீண்டகால ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயது தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்க இவை துணைபுரியும்.

 

சன்ஸ்கிரீனை தினமும் பயன்படுத்துங்கள். சூரியனின் புற ஊதாக்கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகள், முன் கூட்டியே தோன்றும் சுருக்கங்கள் மற்றும் சரும புற்றுநோய் அபாயத்தை குறைப்பதற்கு சன்ஸ்கிரீன் துணை புரியும்.

 

சர்க்கரையை அளவோடு பயன்படுத்துங்கள். அதிக சர்க்கரை உட்கொள்வது உடல் பருமன், நீரிழிவு மற்றும் சில நீண்டகால நோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கலாம்.

 

சமூக உறவுகளை பேணுங்கள். குடும்பம், நண்பர்கள் ஆகியோருடன் சிறந்த உறவை பேணுவது மன நலத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் உதவும்.

 

புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருங்கள். மூளையின் செயல்பாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்க இது உதவக்கூடும்.

 

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள். தியானம், சுவாசப் பயிற்சி அல்லது மன அமைதி பயிற்சிகள் மன நலத்தை மேம்படுத்த வழிவகை செய்யும்.

 

தினமும் 7 முதல் 9 மணி நேரம் போதுமான, தரமான தூக்கம் பெறுங்கள். ஆழ்ந்த தூக்கம் உடல் தன்னைத்தானே பழுதுபார்க்கும் செயல்முறைகளுக்கும், மனநலத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் முக்கியமானது.

 

வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியம், தசை வலிமை மற்றும் நீண்ட ஆயுளுக்கு பயனுள்ளதாகும்.

 

அதேபோல வாரத்திற்கு குறைந்தது 2 நாட்கள் தசைகளை வலுப்படுத்தும் (ஸ்டிரென்த் டிரெய்னிங்) பயிற்சிகளை செய்யுங்கள். தசை மற்றும் எலும்பு வலிமையை பாதுகாக்க இந்த பயிற்சிகள் உதவிடும்.

 

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். இவை மனநலத்திற்கு நன்மை தரும்.

 

சிரிப்பு மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைத்து மனநிலையை மேம்படுத்த உதவக்கூடும்.

 

மதுவைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது. அதிக அளவு மது உட்கொள்வது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். விரைவாக வயது அதிகரிக்கும் தோற்றத்தை உண்டாக்கும்.

 

ஆரோக்கியமான கொழுப்புகளை உணவில் சேருங்கள். அவகேடோ, நட்ஸ்கள், விதைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவை இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை.

 

உடல் தோரணையை சீராக பராமரியுங்கள்.

 

முதுகு மற்றும் கழுத்து வலியை குறைக்கவும், உடல் சமநிலையை மேம்படுத்தவும் அது உதவும்.

 

மேற்கண்ட எளிய பழக்கங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

 

இவற்றை ஒரே நாளில் மாற்ற முயற்சிப்பதைவிட, படிப்படியாக அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்வது சிறந்தது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் நீண்ட காலம் சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் வாழலாம்.

 

 

 

பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை...!

 

பல மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.

 

வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு செல்லுபடியாகும்.

 

அதன்படி, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா,

 

குருநாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் வேளையில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் 'அவதானம் செலுத்தப்பட வேண்டிய' (Caution) மட்டத்தில் காணப்படலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 புதிதாகப் பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு ஒரு வாரத்திற்குள் இலக்கத் தகடுகள்...!

 

பதிவு செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், இவ்வருடம் ஜூன் 10 முதல் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளைத் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

 

இனிவரும் காலங்களில் இலக்கத் தகடுகளை விரைவாக வழங்குவதற்கான நடைமுறைகள் ஒழுங்குபடுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

மேலும், இவ்வருடம் பதிவு செய்யப்பட்ட கார்கள், SUV வாகனங்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட அனைத்து மின்சார வாகனங்களுக்கும் முன்புறம் மற்றும் பின்புறம் பச்சை நிற இலக்கத் தகடுகள் வழங்கப்படவுள்ளன.

 

வருமான அனுமதிப்பத்திரங்களைச் சோதனையிடும்போது மின்சார வாகனங்களைப் பொலிஸார் எளிதில் அடையாளம் காண இந்த மாற்றம் உதவும்.

 

மின்சார வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளின் பின்னணி பச்சை நிறமாக இருக்கும். எனினும், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் குறியீடு உள்ளிட்ட ஏனைய அம்சங்களில் மாற்றம் இருக்காது.

 

ஏனைய வாகனங்களுக்கு முன்புறத்தில் வெள்ளை நிற இலக்கத் தகடும், பின்புறத்தில் மஞ்சள் நிற இலக்கத் தகடும் வழங்கப்படும்.

 

2024, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நிலுவையிலுள்ள இலக்கத் தகடுகளை வழங்கும் பணிகள் அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும் என்றும் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 

 

 

இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தை

 

இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட காலிப் பகுதியைச் சேர்ந்த அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபரான அதிபர், குறித்த பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக ஒரு பிள்ளைக்கு மூன்று லட்சம் ரூபாய் வீதம் இருவருக்கும் ஆறு லட்சம் ரூபாய் கோரியுள்ளதுடன், பின்னர் அத்தொகை மூன்று லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

 

அதில் ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு 2026ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டிற்கு ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மற்றைய பிள்ளையை 8ஆம் வகுப்பில் சேர்ப்பதற்காக எஞ்சிய ஒன்றரை லட்சம் ரூபாயில் 50,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டு அப்பிள்ளையையும் பாடசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதன்பின்னர், இவ்விரு பிள்ளைகளையும் பாடசாலையில் சேர்ப்பதற்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுத்தமைக்காக மேலும் இரண்டரை இலட்சம் ரூபாய் பணம் கோரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அப்பணத்தைக் கொடுக்காவிட்டால் இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையை விட்டு நீக்கிவிடுவதாகக் கூறி, அவ்வாறு செய்யாமல் இருப்பதற்காகக் கோரப்பட்ட இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற முயன்றபோதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

 

சந்தேகநபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

 

 

 

2018 இல் இராணுவ சிப்பாய் ஒருவர் கடத்தப்பட்டு

 

கிரிந்திவெல பகுதியில் 2018 செப்டம்பர் 09 அன்று ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கடத்தப்பட்டு,

 

உயிரிழந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

குற்றவியல் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்,

 

இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் நேற்று (07) பிற்பகல் கிரிந்திவெல காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட நாரங்கஸ்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், உயிரிழந்தவரின் மனைவியான நாரங்கஸ்பிட்டிய,

 

கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண் என காவல்துறை தெரிவித்துள்ளது.

 

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


Enjoy WhatsApp Users..! --உங்களை வியக்க வைக்கும் 5 அம்சங்கள்..!

No comments

Theme images by fpm. Powered by Blogger.