தங்க ATM அறிமுகம்...!
தங்க ATM அறிமுகம்...!
தங்க ATM அறிமுகம்...!
சீனாவில் தங்க ATM அறிமுகம்...
தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள நிலையில், சீனாவில் முதல்முறையாக தங்க ஏடிஎம் (Gold ATM) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் மூலம் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய தங்க நகைகளை நேரடியாக விற்பனை செய்து, உடனடியாக பணத்தை பெற முடிகிறது.
இந்த ATM-யில் நகையை வைக்கும்போது அதன் எடைக்கும் ஏற்ப பணம் கணக்கிடப்படுகிறது. குறைந்தபட்சம் 3 கிராம் மற்றும் 50% தூய்மை கொண்ட தங்க நகைகளே ஏற்கப்படுகின்றன.
பணக்கஷ்டத்தின் போது வங்கிகளுக்கு சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை. இந்த தங்க ATM மக்கள் நேரத்தை சேமிக்கிறது, உடனடி பணம் வழங்குகிறது, மேலும் முழுக்க காகிதமில்லா செயல்முறை என்பதாலும் பரவலாக வரவேற்கப்படுகிறது.
தற்போது சீனாவில் இந்த ATM-க்கு பெரும் வரவேற்பு கிடைத்து, மே மாதம் வரை புக்கிங் முடிந்துவிட்டதாக சைனாடைம்ஸ்.காம் தெரிவித்துள்ளது.
தங்க ATM அறிமுகம்...!
No comments