பங்கு சந்தை விலைச்சுட்டி!

பங்கு சந்தை விலைச்சுட்டி!

      




பங்கு சந்தை விலைச்சுட்டி!



விலைச்சுட்டிகள்


பங்குச் சந்தையொன்றில் கொடுக்கல், வாங்கல்கள் செயற்பாட்டுத் தன்மை கொண்டதா?, இல்லையா? என்பதனைப் பகுப்பாய்வு செய்வதற்காக பொதுவான சுட்டிகள் பல உலகத்தில் பயன்படுத்தப்படுவதோடு இலங்கைப் பங்குச் சந்தையின் செயற்றிறனை அளவிடுவதற்காகப் பின்வரும் சுட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.


 1.     அனைத்துப் பங்கு விலைச் சுட்டி (ASPI) All share price Index

2.    S & P இலங்கை 20 சுட்டி S & P SL 20 Index

3.    மொத்த வருமானச் சுட்டி (TRI) Total Return Index

 


அனைத்துப் பங்கு விலைச் சுட்டி

 

கொழும்புப் பங்குப் பரிமாற்றகத்தில் பட்டியற்படுத்தப்பட்ட சகல கம்பனிகளினதும் வாக்குரிமையுள்ள சாதாரண பங்குகளின் விலை மட்டங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைச் காட்டும் சுட்டி அனைத்துப் பங்கு விலைச்சுட்டி எனப்படும்.

 

இச்சுட்டியினைத் தயாரிக்கும்போது 1985 ஆம் ஆண்டு அடிப்படை ஆண்டாகப் பிரயோகிக் கப்படுவதுடன் அடிப்படைச் சுட்டிப் பெறுமானம் 100 எனப் பயன்படுத்தப்படும்.

 

அனைத்துப் பங்கு விலைச்சுட்டியைப் பின்வருமாறு கணிப்பிட முடியும்.

 




                     





 

  

                                                           


S & P இலங்கை 20 விலைச்சுட்டி

 

 

கொழும்புப் பிணைகள் பரிமாற்றகத்தில் பாரியளவானதும் கூடிய திரவத்தன்மை கொண்டதுமான கம்பனிகள் 20 இன் விலை மட்டங்களின் மாற்றங்களை அளவீடு செய்வதற்காக கணிக்கப்படுகின்ற சுட்டி S & P இலங்கை 20 சுட்டி எனப்படும்.

 

·        சந்தை மூலதனமாக்கல்

 

·        திரவத்தன்மை

 

 

·         நிதிச் சாத்தியப்பாடு போன்ற காரணிகளுக்கமைய மேற்கூறப்பட்டுள்ள 20 கம்பனி களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

 

இச்சுட்டியைத் தயாரிக்கும்பொழுது அடிப்படையாகக் கொள்ளப்படும் திகதி 2004.12.17 எனவும் அடிப்படைச் சுட்டிப் பெறுமானம் 1 000 எனவும் கருதப்படுகிறது.

 

S & P இலங்கை 20 சுட்டியானது பின்வருமாறு கணிப்பிடப்படும்.

 

                                                       





                                                                    

   








மொத்த வருமானச் சுட்டி

 

 

எனவும் S & P இலங்கை 20 சுட்டி மொத்த வருமானத்தின் கீழ் கணிக்கப்படும் மேற்காட்டப்பட்ட சுட்டிகளுக்கு மேலதிகமாக மொத்த வருமானச் சுட்டியும்கூட அன்றாடம் தயாரிக்கப்படும். இது 2004 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதோடு இதன் மூலம் பங்குகளில் விலை மாற்றங்கள் மற்றும் இலாப நட்டம், வருமானம் போன்ற இரு காரணிகளிலும் கவனம் செலுத்தப்பட்டுத் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

அனைத்துப் பங்கு விலைச்சுட்டெண், மொத்த வருமானம் எனும் அடிப்படையின் கீழ் கணிக்கப்படும்பொழுது அனைத்துப் பங்குகள் மொத்த வருமானச்சுட்டி (ASTRI) பொழுது S & P இலங்கை 20 மொத்த வருமானச் சுட்டி (S & PTRI) எனவும் அழைக்கப்படும்

 

 

 

பங்குச் சந்தை விலைச் சுட்டிகளின் முக்கியத்துவத்தைப் பின்வருமாறு சுட்டிக்காட்ட முடியும்.

 

·        பொருளாதாரச் செயற்றிறன் தொடர்பாகக் குறித்த விளக்கமொன்றைப் பெற்றுக் கொள்ள முடிதல்.

 

·        பொருளாதாரத்தில் கம்பனிகளின் செயற்றிறன் தொடர்பாகக் குறித்த விளக்க மொன்றைப் பெற்றுக்கொள்ள முடிதல்.

 

·        ஏனைய நாடுகளின் பங்குச் சந்தைகளின் நிலைமைகளோடு ஒப்பிட்டறியக்கூடியதாக இருத்தல்.

 

·        முதலீட்டுத் தீர்மானங்களை எடுக்கும்போது இதனை துணையாகப் பயன்படுத்த முடிதல்.

 

 (பங்குச் சந்தை விலைச்சுட்டியானது காலத்திற்கேற்ப மாற்றமடையக் கூடியதாக இருப்பதோடு அவ்விலைச்சுட்டிகளைக் கணிக்கும் முறைகளும் கூட மாற்றமடையலாம் என்பதனால் காலரீதியான தகவல்கள் தொடர்பாகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.)

(வணிகத்துறை விஞ்ஞான தொழிநுட்ப பீடம்/தேசிய கல்வி நிறுவகம்

www.nie.lk)

 

CSE இன் பார்வை / இலக்கு Vission

 

 • செல்வம் மற்றும் மதிப்பை உருவாக்குவதற்கு விருப்பமான தேர்வாக இருத்தல்

 

 CSE இன் பணி / நோக்கம் Mission

 

 •CSE மூலம் மூலதனத்தை திரட்ட வெளியீட்டாளர்களை ஊக்குவிக்கவும்

 

 • செயலில் உள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்

 

 • பல்வகைப்பட்ட பொருட்களை வர்த்தகம் செய்வதற்கான வசதிகளை வழங்குதல்

 

 • சந்தை ஒருமைப்பாடு மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையைப் பேணுவதற்கு சமநிலையான ஒழுங்குமுறைகளை உறுதி செய்தல்.

 

 

 

வணிகம் மற்றும் தகவல் பற்றிய சர்வதேச மாநாடு 2013 ISBN 978-955-4563-17-9

 ஆய்வுப் பகுதி மற்றும் தரவு சேகரிப்பு

 

 

CSE இலிருந்து பெறப்பட்ட இரண்டாம் நிலை தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள், பல்வேறு வகைகள்

பின்னணி அளவீடுகள் மற்றும் பிற தொடர்புடைய ஆதாரங்கள்.  ஐந்தாண்டு காலத்திற்கான தினசரி வர்த்தக தரவு

ஜனவரி 2008 முதல் ஜனவரி 2013 வரை பிரித்தெடுக்கப்பட்டு, மாதாந்திர வருமானத்தைக் கணக்கிட அட்டவணைப்படுத்தப்பட்டது.

தினசரி இறுதி விலை மதிப்புகள் பின்வருமாறு மாதாந்திர வருமானமாக மாற்றப்படும்.

 

  

 


 

Rt என்பது சந்தை வருவாய் குறியீட்டைக் குறிக்கிறது, Pt என்பது மாதத்தின் கடைசி நாளில் t மற்றும் நேரத்தின் இறுதி விலையைக் குறிக்கிறது. Pt-1 என்பது மாதத்தின் கடைசி நாளில் (t -1) முறையே இறுதி விலையைக் குறிக்கிறது.

 

தற்போதைய ஆய்வின் முறையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.  ஆய்வின் முதல் பகுதியில், விளக்கமாக

புள்ளியியல் நுட்பங்கள் மற்றும் முதன்மை கூறு பகுப்பாய்வு ஆகியவை அடிப்படை அம்சங்களை விவரிக்கப் பயன்படுத்தப்பட்டன மேக்ரோ-பொருளாதார மாறி மற்றும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு இடையிலான உறவுகள்.  பல்வேறு வகையான மேக்ரோ- சந்தை ஏற்ற இறக்கங்களை அதிகம் பாதிக்கும் பொருளாதார மாறிகள் பயன்படுத்தப்பட்டன. 

 

GDP விகிதங்கள், பணவீக்க விகிதங்கள், வேலையின்மை விகிதங்கள், வருடாந்திர பங்கு விலைகள், நுகர்வோர் செலவு விகிதங்கள், ஒரு நாட்டிற்கு PPT மதிப்பீடு ஜிடிபி (அமெரிக்க டாலர்கள்), கச்சா எண்ணெய் முக்கிய விகிதங்கள் (அமெரிக்க டாலர் பில்லியன்கள்), நிகர வருவாய் மற்றும் நிகர வருமானம்.

 

 இந்த ஆராய்ச்சியின் இரண்டாம் பகுதியில், நிலையான தரவு, சுதந்திரம், முன்னறிவிப்பு மற்றும் கணிப்பு ஆகியவற்றை சுருக்கமாக விளக்குகிறது.

 

https://www.researchgate.net/publication/317064624_STATISTICAL_TECHNIQUES_APPROACH_FOR_EVALUATING_THE_MARKET_FLUCTUATIONS_THE_CASE_STUDY_IN_COLOMBO_STOCK_EXCHANGE


 




 


 

 

 


 



 

 









 

                                           









                                                               பங்கு சந்தை விலைச்சுட்டி!      











                          

No comments

Theme images by fpm. Powered by Blogger.