பேஸ்புக் மூலம் பணம் பறிக்கும் மோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.......!
பேஸ்புக் மூலம் பணம் பறிக்கும் மோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.......!
பேஸ்புக் மூலம் பணம் பறிக்கும் மோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.......!
தளபாடங்கள் விற்பனை செய்யும் போர்வையில் பேஸ்புக் மூலம் பணம் பறிக்கும் மோசடி சம்பவமொன்றை 'அத தெரண' உகுஸ்ஸா வெளிப்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு பொருட்களை விற்பனை செய்வது இன்று மிகவும் பொதுவானது. சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு பொருட்கள் விற்பனை செய்து வரும் நிலையில், பொதுமக்களும் அவற்றினூடாக பொருட்களை கொள்வனவு செய்ய முனைகிறார்கள்.
இருப்பினும், பேஸ்புக் மூலம் சிலர் மேற்கொள்ளும் மோசடிகளால் மக்கள் ஏமாற்றப்படும் பல சம்பவங்கள் உள்ளன.
பொதுமக்களை ஏமாற்றுவதற்காக பேஸ்புக் பக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி குறித்த தகவல்களை, அந்த மோசடியில் சிக்கிய பல நபர்கள் 'அத தெரண' உகுஸ்ஸாவுக்கு வெளிப்படுத்தினர்.
குறித்த மோசடி நடவடிக்கையானது பெறுமதியான தளபாடங்களை தற்போதைய சந்தை மதிப்பை விடக் குறைந்த விலையில் விற்பனை செய்வதாகக் கூறி முன்னெடுக்கப்படுகிறது. பல்வேறு தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக வாடிக்கையாளர் பணத்தை வைப்பிலிட்ட பின்னர், மோசடிக்காரர்கள் வாடிக்கையாளரின் தொலைபேசி இலக்கத்திற்கு பதிலளிக்காமல் முன்பதிவு செய்யப்பட்ட தளபாடங்களை வழங்குவதில்லை.
இந்த மோசடியில் ஏற்கனவே கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் சிக்கியுள்ளனர்.
அதன்படி, இந்த மோசடி இன்னும் செயல்படுகிறதா என்பதை விசாரணை செய்ய, சம்பந்தப்பட்ட பேஸ்புக் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைப்பை மேற்கொண்டோம்.
எமது அழைப்பைத் தொடர்ந்து, தளபாடங்களின் புகைப்படங்களை வட்ஸ்அப் மூலம் எங்களுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்ட பிறகும், இந்த மோசடி இன்னும் செயல்பட்டு வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற மோசடிகளுக்கு இரையாகாமல் விழிப்புடன் செயல்படுவது, பொதுமக்களாகிய உங்களுடை பொறுப்பு என்பதை 'உகுஸ்ஸா' உங்களுக்கு நினைவூட்டுகிறது.
பேஸ்புக் மூலம் பணம் பறிக்கும் மோசடி தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.......!
No comments