முயற்சியாண்மை கல்வி தொடர்ச்சி.......!

 முயற்சியாண்மை கல்வி தொடர்ச்சி.......!








முயற்சியாண்மை கல்வி தொடர்ச்சி.......!



 முயற்சியாண்மை கல்வி தொடர்ச்சி.......!


அரசியற் சூழல்

 

நாட்டில் அரசாங்கத்தினது நிலைத்த தன்மை மற்றும் அரசினால் பின்பற்றப்படும் வேறுபட்ட கொள்கைகள் வணிகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாகும். இவற்றைக் கருத்திற்கொண்டு வணிகர்கள் தமது வணிகச் செயற்பாடுகளை மேற் கொள்ளல் வேண்டும். அரசியற் சூழல்களுக்கு உதாரணங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.

 

உதாரணம்

 

அரசினது நிலைப்புத் தன்மை

உட்கட்டமைப்பு அபிவிருத்திக் கொள்கைகள்

வரவு செலவுத் திட்டக் கொள்கைகள்

தொழிலாளர் தொடர்பான கொள்கைகள்

 

  

சட்டச் சூழல்



 உள்நாட்டு உற்பத்தியாளர்கள், நுகர்வோர், வணிகச் சமூகம் போன்றோர்களையும் சூழலையும் பாதுகாப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட சட்ட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகள் என்பன சட்டச் சூழலில் அடங்கும். அரசினால் விதிக்கப்படுகின்ற சட்ட விதிகள், ஒழுங்கு முறைகள் என்பன வணிகங்களுக்குப் பல்வேறு வகையான தாக்கங் களை ஏற்படுத்தும். அதேபோன்று சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நிறுவனங்கள், சபைகள், ஆணைக்குழுக்கள், மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் போன்றோர்களை அரசு நியமித்துள்ளது. இவ்வாறான சட்ட விதிகளுக்கு உதாரணங்கள் பல கீழே தரப்பட்டுள்ளன.

 

உதாரணம் :-

 

2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிச் சட்டம். 2003 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைச் சட்டம்.

1954 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்கக் கடை, காரியாலய ஊழியர் சட்டம்.

 

சட்டதிட்டங்களைசசெயற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இத்தகைய பதவிகள் மற்றும் நிறுவனங்கள் என்பன பலவாகும்.

உதாரணம்

கம்பனிப் பதிவாளர் நாயகம்

தொழில் பிணக்குச் சபை

இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபை

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்

நுகர்வோர் விவகார / பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை

 

  

 விஞ்ஞான,தொழில்நுட்பச் சூழல்

 

 வணிகத்தில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பச் சூழல் என்பது தொழில்நுட்ப வளர்ச்சி, விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் வணிகத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைக் குறிக்கிறது.

 

தொழில்நுட்ப வளர்ச்சி

 புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்கள் வணிக செயல்திறனை மேம்படுத்தும், உதாரணமாக, தொழில்முறை மென்பொருட்கள், செயற்கை நுண்ணறிவு (AI), மற்றும் மெட்டா பிளேட் வண்ணங்கள்.

 

விஞ்ஞான ஆராய்ச்சி

புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் வணிக நுட்பங்களை மேம்படுத்தும். உதாரணமாக, மருந்து நிறுவனங்களில் புதிய மருந்துகளை உருவாக்கும் ஆராய்ச்சி.

 

தொழில்நுட்பத்தின் தாக்கம

:தொழில்நுட்பம் வணிக செயல்திறனை எப்படி பாதிக்கிறது என்பதைப் பொருத்தது. உதாரணமாக, அங்கீகார முறைமைகள், கிளவுட் சேவைகள் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ்.

 

தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் வணிக மாடல்களை எவ்வாறு மாற்றுகின்றன என்பதைக் காண்பது. உதாரணமாக, ஆன்லைன் வணிகம் மற்றும் மின்னணு வர்த்தகம்.

தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி மூலம் புதிய சந்தைகளை அடைய மற்றும் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்க. தொழில்நுட்ப உதவியுடன் செயல்திறனை மேம்படுத்தல், நேரத்தைச் சேமிக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும்

இந்த விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பச் சூழல், வணிகத்தின் விளைவுகளை உருவாக்குவதற்கும், அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முக்கியமாக இருக்கும்.

 உதாரணம்

·         இணையச்சேவை வணிகர்களுக்கு ஒரு வாய்ப்பாகும்

·         என் புகைப்படக் கருவி பாவனையின் காரணமாக புகைப்படம் எடுக்கும் கடைகளுக்கான தேவைகள் குறைந்தது புகைப்படக் கடை உரிமையாளர்களுக்கு சவாலாக அமைந்தது

 

இயற்கைச் சூழல்

 

 வணிக நடவடிக்கைகளுக்கு இயற்கை நிகழ்வுகளால் ஏற்படுகின்ற அனைத்து தாக்கங்களையும் உள்ளடக்கிய சூழல் இயற்கை சூழல் எனப்படும்

 வணிக நடவடிக்கைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் வழங்கல் ஆகியன இயற்கைச் சூழலில் இருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது இயற்கை சூழல் காரணிகளாக இயற்கை வளம், இயற்கை அர்த்தங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம். வணிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுவதும், பயன்படுத்தப்பட்டதுமான பெறுமதியான வளங்கள் இச்சூழலில் காணப்படுகின்றன. இயற்கை வளங்களை சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் பயன்படுத்தும் போது அதனூடாக வணிக வாய்ப்புகள் பலவற்றை அடைய முடியும். அத்துடன் இயற்கை அனர்த்தங்களும் வணிகத்திற்கு சவாலாக அமையலாம்

உதாரணம்

·         உள்நாட்டு மருத்துவ தாவரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற தாவரம் சார் உற்பத்திகளுக்கு கேள்வி நிலவுகள் வணிக வாய்ப்பாகும்

·         வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அர்த்தங்கள் விவசாய நடவடிக்கைகளுக்கு சவாலாகும்

 

  

 சமூக மற்றும் கலாச்சார சூழல்

 

 பொதுமனப்பாங்கு மதிப்பு மற்றும் வாழ்க்கை குளம் ஆகியவற்றை உள்ளடக்கிய சூழல் சமூக மற்றும் கலாச்சார சூழல் ஆகும்

 சமூக கலாச்சார காரணிகளாக பழக்கவழக்கம், ஒழுக்க நெறி, நம்பிக்கை, வாழ்க்கைக் கோல மாற்றங்கள் போன்றவற்றை குறிப்பிடலாம். பல்லின மக்கள், சமயம், கலாசாரம் காணப்படுகின்ற நாடு ஒன்றில் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் போது தோன்றுகின்ற வணிக வாய்ப்புகள், சவால்கள் பற்றி அவதானத்துடன் செயலாற்றுவது இன்றியமையாததாகும். சமூக, கலாசார மதிப்பு பாதுகாக்கப்படும் வகையில் வணிக நடவடிக்கைகளை கையாள வேண்டும்

உதாரணம்

·         வருடாந்த தலதா பெருகராவை பார்வையிட வரும் வெளிநாட்டு உல்லாச பிரியாணிகள் வணிகத்திற்கு வாய்ப்பாகும்

·         தாவர உணவை உண்ணும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பானது மாமிச உணவுகளை உற்பத்தி செய்கின்ற வணிகர்களுக்கு சவாலாகும்.


 சமூக கலாச்சாரச் சூழலின் புதிய போக்குகள்


 இள வயது திருமணம் அதிகரித்தல்

 ஆடம்பர மோகம்

 குடும்ப பிரிவு அல்லது விவாகரத்து அதிகரித்தல்

 குரு அவமதித்தல்

 துணிச்சலான பேச்சு

பெற்றோர்கள் மீது பிள்ளைகளின் பாசம் குறைவு

 பிள்ளைகள் மீது பெற்றோர் பாசம் அதிகம்

 

 

 பூகோளச் சூழல்



 உலகம் பூராகவும் உள்ள நாடுகள் தமது தேச எல்லைகளைத் தாண்டி ஒன்றிணைந்து செயலாற்றும் செயற்பாடு பூகோள சூழல் எனப்படும்

 

உதாரணம்

·         சர்வதேச சந்தைகளில் நுழைவதற்கான சந்தர்ப்பம் அதிகரித்தல் வணிகத்தின் வாய்ப்பாகும்

·         வெளிநாட்டு உற்பத்திகள் உள்நாட்டு சந்தையில் அதிகமாக காணப்படுவது உள்நாட்டு வணிகர்களுக்கு சவாலாகும்

 

   

மக்கள் சூழல்

 ஒரு நாட்டில் வாழ்கின்ற மக்கள் தொகை மற்றும் அவர்களின் வாழ்க்கை கோலம்  தொடர்பான காரணிகளை உள்ளடக்கிய சூழல் மக்கள் சூழல் எனப்படும்

 மக்கள் சூழலை அடிப்படையாகக் கொண்டே பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான சந்தை வடிவமைக்கப்பட்டுள்ளது சனத்தொகை அதிகரிக்கும் போது சந்தை நடவடிக்கைகள் விரிவடைந்து பொருட்கள், சேவைகள் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. சனத்தொகை அதிகரிப்பு, வயது வேறுபாடு, மக்கள் கட்டமைப்பு போன்ற காரணிகள் வணிகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளாகும்.

உதாரணம்

·         சிறுவர் சனத்தொகை அதிகரித்தல் விளையாட்டு பொருட்கள் உற்பத்திக்கு நல்ல சந்தர்ப்பம் ஆகும்

·         நாட்டு சனத் தொகையில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றமை சிறுவர் பொருட்கள் உற்பத்தி செய்கின்ற வணிகங்களுக்கு சவாலாகும்

 

  

 இலங்கையின் பொருளாதாரம்


 இலங்கையின் பொருளாதாரத்தின் தன்மை


இலங்கை முற்காலம் தொட்டி செழிப்பு மிக்க நாடாக இருந்து வருகின்றது அரசர்கள் ஆட்சியாளர்களாக நிர்வாகத்தை நடத்திச் சென்ற போது நாட்டு மக்கள் விவசாய தொழிலை வாழ்க்கை மூலமாக கொண்டு தமது தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்து கொண்டனர். பிற்காலத்தில் மேலைத்தேய நாட்டவர்களின் வருகை பலவித மாற்றங்களுக்கு உள்ளாகிய இலங்கையின் பொருளாதாரத்தின் திறப்புமுனையாக, பெருந்தோட்ட பயிற்சிகையை குறிப்பிடலாம். அதிலிருந்து பொருளாதார சமூக நிர்வாக வணிகம் மற்றும் கைத்தொழில் துறைகளில் குறிப்பிட்ட தக்க மாற்றங்கள் ஏற்பட்டன

 

 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக பல்வேறு பொருளாதாரத் திட்டங்கள் வகுக்கப்பட்டன விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவை எனும் பிரதான துறைகளாக வணிக நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்டன. தொழில்நுட்ப வளர்ச்சியினால் வணிகத்தின் மூலம் பல வகையான  புதிய உற்பத்திகள் சந்தையில் அறிமுகமாயின. பெருந்தெருக்கள், மின்சாரம், தொலைத்தொடர்பு, காப்புரறுதி, பணம்,வங்கி போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் நாடு பூராவும் பரவல் அடைந்தன கைத்தொழில்துறை நடவடிக்கைகள் விரிவடைந்தமையால் சேவை துறையினால் பெரும் வருமானம் விரைவாக உயர்வடைந்தது உள்நாட்டு சந்தை மட்டும் மன்றி வெளிநாட்டு சந்தைகளிலும் பிரவேசித்து மொத்த பொருளாதார வளர்ச்சியை எழுதுவது தற்கால பொருளாதாரத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது  

 

 

 இலங்கையின் பொருளாதாரத்தில் உள்ளடங்குகின்ற பிரதான வணிகத்துறைகள்

1.       ஆரம்பத்துறை அல்லது முதலாம் நிலை

 

இயற்கைச் சூழலில் இருந்து வருகின்ற வளங்களை எவ்வித மாற்றமும் இன்றி அதே வடிவில் நுகர்தல் இப்பிரிவுக்குள் உள்ளடங்கும்

 

 ஆரம்பத்துறையில் உள்ளடங்கு என்ற வணிகங்களுக்கு உதாரணங்கள் சில கீழ் வருமாறு

·          விவசாய, வன, கால்நடை தொழில்

·         மீன்பிடி

·          அகழ்வும் சுரங்கத் தொழிலும்

2.       இரண்டாம் நிலைப்பிரிவு

இயற்கைச் சூழலில் இருந்து பெற்றுக்கொள்ளும் இயற்கை வளங்களின் வடிவம், குணம் நிறம் போன்றவற்றை மாற்றி நுகர்வுக்காக அல்லது வேறு வணிக நடவடிக்கைகளின் பயன்பாட்டிற்கு உட்படுத்துவதாகும் அதாவது உற்பத்தியில் ஈடுபடுகின்ற கைத்தொழில் உள்ளடக்கிய வணிக துறையாகும்

 

 இது இரண்டு வகைப்படும்

                 1.உற்பத்தி (சப்பாத்து, புத்தகம் போன்ற உற்பத்திகள் )

                ,2.   நிர்மாணம் ( கட்டிடம் பாலம் போன்றன )

 

              3.மூன்றாம் நிலை பிரிவு

 

அனைத்து சேவை வழங்கும் மனிதர்களும் மூன்றாம் நிலை வாணிகம் எனப்படும்

 

 வியாபாரம் மொத்த சில்லறை முதலான வியாபாரம்

 

 வியாபாரத்தின் துணைச் சேவைகள் (வங்கி காப்பிருதி போக்குவரத்து போன்றன)

 

 இலங்கையில் தாராளமாக காணப்படும் வளங்கள்


 நமது நாட்டில் ஒரு நாட்டில் முயற்சியாளர்களால் பயன்படுத்தப்படுவதும் பயன்படுத்தப்படாததுமானை ஏராளமான வளங்கள் உண்டு. மனிதனால் நிர்மாணிக்கப்படுகின்ற வளங்களையும் ஏற்க கூடலில் இருந்து பெற்றுக் கொள்கின்ற வளங்களையும் பயன்படுத்தி வணிகச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இவ்வளங்களை இரண்டு பிரதான பகுதிகளாக பிரிக்கலாம்.

                       1. மனித வளம்

                       2.    பௌதிக வளம்

 

மனித வளம்


 அதிக செயற்பாடுகளை ஈடுபட வேண்டும் முகாமையாளரையும் வணிகச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற பிற ஊழியர்களையும் மனித வளமாக கருதலாம் அனைத்து வளங்களிலிருந்தும் உச்ச பயனை பெறுவது மனித வளத்தின் மூலமே ஆகும். எழுத்தாளர் உயர்ந்த மட்டத்தில் காணப்படுதல் மற்றும் கல்வியை கற்பதற்கானதிறமை போன்றன இலங்கை மனிதவளத்தில் உள்ள விசேட இலட்சணங்களாகும். உம்மிடம் உள்ள மனித வளத்தின் சிறப்புகளை இனம் கண்டு வணிக வாய்ப்புகளில் ஈடுபடுத்த வேண்டும்.

 

 

  பௌதிக வளம்


 வணிக நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் மனித வளம் அல்லாத இயற்கை வளம் மற்றும் மனிதனால் உருவாக்கப்படுகின்ற வளம் இதற்குள் உள்ளடங்கும் வேறு நாடுகளுக்கு நிகராக இலங்கையிலும் விசேடமான வளங்கள் காணக் கிடைக்கின்றன.

பௌதிக வளங்கள் பின்வருமாறு

 இயற்கை வளம்

  நீர் நீர்வீழ்ச்சி ஆறு கடல் வளமான மலைப் பிரதேசம் மே தினங்கள் ஆழமற்ற கடற்போதிகளை காடுகள் கடற் படுக்கை பாறை உயிரியல் பல்வகை சூழல் தொகுதி போன்றன

 கனிய வளம்

 ரத்தினக்கல் காரியம் பளிங்குகள் சுண்ணாம்புக்கல் போன்றன

 கலாசார வளம்

 அனுராதபுரம் போல நடுவை சிகிரியா போன்ற வரலாற்று படங்கள் மற்றும் தோல் பொருட்கள் சிற்ப வேலைப்பாடுகள் மர வேலைப்பாடு ஓவியங்கள் போன்றன  

இயற்கை காடுகள்

 யால குமண முதலான சரணாலயங்கள் மற்றும் சிங்கராஜனம் போன்ற இயற்கை காடுகள்

 விலங்கு வளம்

 அரிய இன விலங்குகள் பறவைகள் ஊர்வன முதலியன

 

 

 மெர்குரிய வளங்களை பயன்படுத்துவதனால் தோன்றக்கூடிய வணிக வாய்ப்புகள் சில கீழே தரப்படுகின்றன

 விவசாய நடவடிக்கை

சுற்றுலா கைத்தொழில்

ஆயுர்வேத மருத்துவத்துறை  

 

 

  வணிக எண்ணங்களும் வாய்ப்புகளும்

 

 வணிக எண்ணம் ஒன்றை தெரிவு செய்தல்


இன்று உலகில் தோன்றியுள்ள அனைத்து பொருட்கள் சேவைகள் செயல்கள் மற்றும் உற்பத்திகள் யாவும் மனிதன் முகம் கொடுத்த  பிரச்சனைகளுக்கு தீர்வுகளாக முன்வைக்கப்பட்டவை ஆகும் இவை யாவும் வணிகச் சிந்தனைகளின் பெறுபேறுகளாகும்

 

வணிக எண்ணம் எண்ண கரு


சூழலில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வுகளாக மனித தேவை மற்றும் விருப்பத்தை நிறைவு செய்கின்ற வணிகப் பெருமானம்முடைய சிந்தனைகள் வணிக எண்ணம்  என கருதப்படுகிறது முயற்சியாளருடைய விருப்பம் மற்றும் நிர்மாணவாக்கத்தை வணிக வாய்ப்பாக மாற்றுவதற்கான முதலாவது வழிமுறையாக வணிக வண்ணங்கள் உள்ளதால் முயற்சியாண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது.


பத்து சதத்துக்கு ஒரு டசின் வாங்கலாம் என்பது வணிகத் துறையில் உள்ள ஒரு கூற்றாகும். வணிக சிந்தனையில் இலகுவானது என இதிலிருந்து புலப்படுகின்றது. ஆனாலும் இவையாவும் வணிக வாய்ப்புகள் ஆவதற்கான வண்ணங்கள் அல்ல அவற்றை வணிக வாய்ப்பாக மாற்றுவது முயற்சியாளர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

 

 

சிறந்த வணிகம் ஒன்றின் பண்புகள்


·         வணிகம் ஒன்றாக அபிவிருத்தி செய்யக்கூடிய திறன் இருத்தல்வேண்டும் 

·         சூழலில் இருந்து எழுகின்ற தேவைகளை நிறைவு செய்யக் கூடியதாக       இருத்தல் வேண்டும்.

·         தேவைகள் விருப்பங்களில் மாற்றத்திற்கு ஏற்ப பிரதிபலிப்பை வெளிப்படுத்தக் கூடியதாக இருத்தல் வேண்டும்

·         போட்டித் தன்மைக்கு வெற்றிகரமாக முகம் கொடுக்கக் கூடியதாக இருத்தல்

·         தொழில்நுட்பத்திற்கு பொருந்தக் கூடியவாறு இருத்தல் வேண்டும்

·         எதிர்நோக்கும் அபாய அளவை குறைத்துக் கொள்ளக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

·         வணிகம் ஒன்றாக வளர்வதன் ஊடாக வருமானம் உழைக்கக் கூடியதாக இருத்தல்.  

·         சொந்த வணிக எண்ணங்களை பாதுகாக்க கூடியதாக இருத்தல் வேண்டும்

 

 

வணிக எண்ணங்களின் மூலங்கள்

 

 வணிக எண்ண மூலங்கள் பல்வேறு விதங்களில் வெளிபடுகின்றது அவற்றுள் பிரதான மூலங்கள் சில கீழே தரப்படுகின்றன.

 

·         பொழுதுபோக்கு விருப்பத்தின் ஊடாக

மனிதர்களுக்கு பல்வகையான பொழுதுபோக்குகள் உள்ளன மலர்ச்ச்செய்கை,ஓவியம் வரைதல்,அலங்கார மீன் வளர்ப்பு, புகைப்படம் பிடித்தல் போன்ற பொழுதுபோக்குகளை தமது வணிகமாக மாற்றிக் கொண்ட முயற்சியாளர்கள் பலர் உள்ளனர்.

 

·         தனி நபர் ஆற்றல் மற்றும் அனுபவத்தின் ஊடாக

     ஒருவர் தான் செய்யும் தொழில் மூலம் பெறுகின்ற ஆற்றல்                           அனுபவத்தினாலும் விளையாட்டு நடனம் பாடல் போன்ற தனிப்பட்ட திறன்கள் விருத்தியுறுவதனாலும் வணிக எண்ணங்கள் தோன்றுகின்றன.

 

·          சந்தை ஆராய்ச்சி ஊடாக வணிக எண்ணம் தோன்றுதல்

முயற்சியால் அல்லது நிறுவனங்கள் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பாக நுகர்வோரின் நடத்திய அறிவதற்காக சந்தை ஆராய்ச்சி கடை மேற்கொள்கின்றனர் அதனூடாக வழிபடுகின்ற நுகர்வோரின் தேவைகள் விருப்பங்கள் மற்றும் பிரதிபலிப்புக்கள் வாயிலாக வணிக எண்ணங்கள் தோன்றுகின்றன

 

 உதாரணம் வங்கிகள் தமது வாடிக்கையாளர்களின் தேவை கருதி இரவு நேர சேவையை வளங்கள்

 

 

·         நுகர்வோரின் பிரதிபலிப்புக்களின் ஊடாக

முயற்சியால் நல்லது நிறுவனங்கள் நுகர்வோரின் தேவை விருப்பம் மற்றும் பிரதிபலிப்பு தொடர்பான கருத்துக்களை அறிந்து கொள்வதன் ஊடாக வணிக எண்ணங்கள் தோன்றுகின்றன. என்று நுகர்வோரின் கருத்துக்களை அறிவதற்காக ஆலோசனை பெட்டிகளும் குறிப்பு புத்தகங்களும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 உதாரணம் நுகர்வோரின் கருத்துக்கமைவாக உணவு பட்டியலை மாற்றுதல்

 

·         ஆக்கப்பூர்வமான சிந்தனை ஆற்றல் ஊடாக

தற்போது உள்ள ஒன்றில் அல்லது செயற்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான புதிய எண்ணங்கள் ஆக்க பூர்வமான சிந்தனை ஆற்றல் ஊடாக வெளிபடுகின்றது

 

 உதாரணம் அவசியமான சந்தர்ப்பத்தில் நீராவியை குடிநீராக மாற்றக்கூடிய இலகுவான உபகரணம் ஒன்றை உற்பத்தி செய்தல்

 

·         தொடர்பு சாதனம் மூலம்

தொடர்பு சாதனங்கள் வெளியிடுகின்ற தகவல் மற்றும் செய்திகள் மூலமும் வணிக எண்ணங்கள் பிறக்கின்றன.

 உதாரணம் நாளாந்த வார விருது நாட்களில் வெளி வருகின்ற பத்திரிகைகள் மற்றும் ஏனையங்கள் வாயிலாக பெரும்பாலான வணிக எண்ணங்கள் பிறக்கின்றன.

 

 

·         வழங்குனர் ஊடாக

தற்போது வணிகம் ஒன்றை செய்து கொண்டிருப்பவர், தமது வழங்குனர்கள், வணிகத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் நபர்களின் ஆலோசனைகளை பெற்று,  அதனூடாக வணிக எண்ணங்களை பிறப்பிக்க முடியும்.

 

·         போட்டிநிலையை ஆய்வு செய்வதன் ஊடாக

போட்டியாளர்களின் செயற்பாடுகளை ஆராய்வதன் ஊடாக வணிக எண்ணங்கள் பிறக்கின்றன

 உதாரணம் வங்கி தனது போட்டியாளர்கள் வழங்குகின்ற சேவைகளை ஒத்த புதிய சேவைகளைச் சந்தைக்கு வழங்க முடியும் வங்கியொன்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்குகென புதிய கண க் கொன்றை  அறிமுகம் செய்யும்போது, ஏனைய வங்கிகளும் அதனை பின்பற்றுதல்.

 

·         கல்வி பாடநெறிகள் மூலம்

நபர்களுக்கு இருக்கின்ற பாடநர்களின் மூலம் பெறுகின்ற அறிவினை கொண்டு வணிக வண்ணங்கள் பிறக்கின்றன

 உதாரணம் தொழில்நுட்பக் கல்லூரி பல்கலைக்கழக கற்க நெறிகளின் முடிவில் பெறுகின்ற அறிவு மற்றும் அனுபவங்களை கொண்டு வணிகங்களை ஆரம்பிக்கின்றவர்களும் உள்ளனர்.

 

·         கண்காட்சி மற்றும் அனுபவம் மூலம்

வணிக சபை போன்ற நிறுவனங்கள் ஒழுங்கு செய்கின்ற கண்காட்சி மற்றும் போட்டிகளில் பங்குபற்றுவதன் ஊடாக முயற்சியாளர்களி டத்தில் வணிக எண்ணங்கள் பிறக்கின்றன.

 

உதாரணம்

முயற்சியாளர்களின் உற்பத்தி கண்காட்சிகள் புத்துருவாக்கவாளர்களுக்கான போட்டிகள்

 

 

 வணிக எண்ண மொன்றை  வணிக வாய்ப்பொன்றாக உருவாக்கிக் கொள்ளுதல்

 

 வணிகம் ஒன்றின் வெற்றி கணப்பொழுதில் நடந்தேறுவதில்லை. அதற்கு நீண்டதொரு நடைப்பயணம் உள்ளது. ஆயிரக்கணக்கில் தோன்றுகின்ற வணிக எண்ணங்களுள் பொருத்தமான வணிகச் சந்தர்ப்பத்தைத் தெரிவு செய்து கொள்வது தொடர்பாகவே இப்பொழுதில் ஆராய உள்ளோம் .

 

 

முயற்சியாண்மை கல்வி தொடர்ச்சி.......!


No comments

Theme images by fpm. Powered by Blogger.