முயற்சியாண்மைக்கும் வணிகத்துக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு......!
முயற்சியாண்மைக்கும் வணிகத்துக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு......!
முயற்சியாண்மைக்கும் வணிகத்துக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு......!
முயற்சியாண்மைக்கும் வணிகத்துக்கும் இடையிலான
நெருங்கிய தொடர்பு
வணிகம் மற்றும் வணிகர் அறிமுகம்
Ø வணிகம் என்பது மனித
தேவைகள் விருப்பங்களை நிறைவேற்றி செய்வதற்கு பண்டங்கள் அல்லது சேவைகளை உற்பத்தி
செய்தல், விநியோகித்தல் என்பவற்றுடன் தொடர்புடைய
செயல்பாடாகும். இச்சைபாட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் வணிகர்கள் எனப்படுவர்.
தேவைகளும் விருப்பங்களும்
Ø மனிதர்கள் தமது வாழ்க்கையின் நடாத்தி செல்வதற்கு
கட்டாயமாக நிறைவு செய்ய வேண்டிய விடயங்கள் தேவைகள் எனப்படும்.
Ø விருப்பங்கள் சகல மனித தேவைகளையும் நிறைவு
செய்கின்ற பல்வேறு முறைகள் விருப்பங்கள் எனப்படும்.
தேவைகளுக்கு விருப்பங்களுக்கும் இடையிலான
வேறுபாடுகள்
தேவைகள் |
விருப்பங்கள் |
ஆரம்பத்திலேயே உருவாகும் |
தேவை உருவான பின்னர் இரண்டாவதாக உருவாகும் |
வரையறுக்கப்பட்டது |
ஒரு தேவை நீ நிறைவு செய்வதற்கு பல விருப்பங்கள்
காணப்படும் |
சகலருக்கும் பொதுவானது |
ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட நிலைமைக்கேற்ப விருப்பங்கள்
பல்வேறுபட்டவைகள் ஆகும் |
பிறப்பிலேயே உருவாகும் |
தனி ஆட்களுக்கு தேவையானவாறு முயற்சியாளர்கள் தனது
வணிகர்களை உருவாக்க முடியும் |
பொருட்கள் மற்றும் சேவைகள்
Ø
மனிதனது தேவைகள் விருப்பங்கள் பூர்த்தி
செய்வதற்காக பௌதீக ரீதியான நிலைப்பு தன்மையை கொண்ட தொட்டு உணரக்கூடிய உற்பத்திகள் பொருட்கள்
எனப்படும்.
Ex:- தளபாடம்
Ø மனித தேவைகளை விருப்பங்களை பூர்த்தி செய்து
கொள்வதற்காக பௌதிக ரீதியான நிலைப்பு தன்மை அற்ற தொட்டு உணர முடியாத ஒரு பிரிவினரால்
மற்றொரு பிரிவினருக்கு முன் வைக்கப்படுகின்ற செயல்முறை ஒன்று சேவை எனப்படும்.
Ex:- வங்கி சேவை, காப்புறுதி சேவை, போக்குவரத்து சேவை
பின்வரும் அட்டவணையின் அடிப்படையில் பொருட்கள் சேவைகளில் காணப்படும் விஷேட
பண்புகள் சிலவற்றை அறிந்து கொள்வோம்.
பொருட்கள் |
சேவைகள் |
தொட்டுணரலாம்,ஆதனால் பௌதீக நிலைப்பாடு
காணப்படும் |
தொட்டு உணர முடியாது அதனால் பௌதிக
நிலைப்பாடு இல்லை |
களஞ்சியப்படுத்தலாம் |
களஞ்சியப்படுத்த முடியாது |
ஒரே தன்மை கொண்டவை பாதுகாக்க
முடியும் |
ஒரே தன்மை கொண்டவை பாதுகாக்க முடியாது
வழங்கும் நபர்களுக்கும் சந்தர்ப்பக்களுக்கும் ஏற்ப வேறுபடும் |
நுகர்வோர் உற்பத்தி
செயல்பாட்டிற்கு தேவைப்பட மாட்டர் |
பெரும்பாலும் நுகர்வோர் உற்பத்தி
செயற்பாட்டின் ஒரு பகுதியாக காணப்படுவர் |
வழங்குனரிடமிருந்து பிரிக்க
முடியும் |
வழங்குனரிடமிருந்து பிரிக்க
முடியாது |
வணிகங்களின் பண்புகள்
Ø
விற்பனை பரிமாற்றம் இடம் பெறுதல்
வணிக நடவடிக்கை அனைத்தும் பொருட்கள்,சேவைகளை பண பெறுமானதின் அடிப்படையில் விற்பனை அல்லது பரிமாற்றம் இடம் பெறும். பொருட்கள் சேவைகளை விலையில் அடிப்படையில் கொள்வனவு செய்தலும் விற்பனை செய்தலும் இடம் பெறும். விற்பனை அல்லது பரிமாற்ம்
Ø
பொருட்கள் சேவைகளுக்கு கொடுக்கல்
வாங்கல் இடம்பெறுதல்
Ø
தொடர்ச்சியான கொடுக்கல் வாங்கல்
இடம் பெறுதல்
Ø
இலாபத்தை ஊக்கப்படுத்தல்
Ø
இடர் ஒன்று காணப்படுதல்
Ø
விருப்பங்களை தோற்றுவித்தல்
Ø
பொருளாதார கருமம் ஒன்றாக இருத்தல்
முயற்சியாளர்களுக்கும்
வணிகர்களுக்கும் இடையிலான ஒற்றுமைகள்
• பொருளாதாரச் செயற்பாடுகளில் ஈடுபடல்
• நட்ட இடருக்கு முகம் கொடுத்தல்
• கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடல்
• வளங்களைப் பயன்படுத்தல்
• உற்பத்தி, கொள்வனவு, விற்பளை என்பன தொடர்பில்
தீர்மானமெடுத்தல்
• போட்டிக்கு முகங்கொடுத்தல்
• தொடர்ந்து நிலைத்திருத்தல் தொடர்பில்
சிந்தித்தல்
• சுய ஊக்குவிப்பு காணப்படல்
முயற்சியாளருக்கும் வணிகருக்கும் இடையிலான வேறுபாடுகள்
முயற்சியாளர் |
வணிகர் |
|
தனது கருத்து அல்லது எண்ணகரு க்களுக்கமைய வணிகம் ஒன்றை ஆரம்பிப்பார்
உதாரணம்- சிறப்பு சந்தை |
நடைமுறையில் காணப்படும் கருத்து அல்லது எண்ண கருவிற்கு அமைய வணிகம் ஒன்றை ஆரம்பிப்பார்
உதாரணம்- சில்லரை வியாபார நிறுவனங்கள்
|
|
நட்ட இடர்களை நன்றாக கணித்து ஏற்கக் கூடிய நட்ட இடர்களை
ஏற்றுக் கொள்வார்கள்
உதாரணம் § புதிய முதலீடுகளின் ஊடாக வணிகத்தை விரிவுபடுத்தல்
§ புதிய சந்தையில் உட்பிரவேசித்தல் |
நட்ட இடர்களை பொறுப்பேற்பதில் அதிக அளவு விருப்பம் காட்ட
மாட்டார்கள்
உதாரணம்- § வணிகத்தைவிரிவுபடுத்துவதற்கு அக்கறைகாட்டாமை |
|
|
|
|
|
|
|
போட்டியினை விருப்பத்துடன் தேடிச் செல்வர் உதாரணம்-
போட்டியினை சவால் ஒன்றாக எடுத்தல் |
போட்டிக்கு முகம் கொடுப்பதற்கு பெரும்பாலும் விருப்பம்
காட்ட மாட்டார்கள் உதாரணம் – §
வேறு வணிகங்கள் உருவாவது தொடர்பிலான விருப்பமின்மை §
இறக்குமதிபண்டங்கள் தொடர்பில் காணப்படும் பயம்
|
|
காணப்படும் வளங்களை தேவைக்கேற்ப உச்ச அளவில்
பயன்படுத்துவார்கள்
உதாரணம்- தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட வளங்களை உச்ச அளவில்
பயன்படுத்துதல் வெளியேற்றப்படும்
கழிவுகள் இருந்து மீள உற்பத்திகளை மேற்கொள்ளல் |
தற்போதுள்ள வளங்களிலிருந்து கூட உச்ச பயனைப் பெற்றுக்
கொள்ள மாட்டார்கள் உதாரணம்
- கட்டடம், மோட்டார், வாகனம் இயந்திரஉபகரணங்கள், மூலப்பொருட்கள் என்பவற்றினை மிக குறைந்த மட்டத்தில் பயன்படுத்துதல்
|
|
பிரச்சனைகளை ஆக்கரீதியான முறையில் தீர்ப்பார்
உதாரணம் வாடிக்கையாளரைதேடிச்
சென்று விற்றல்
|
இயல்பாகவே பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்சித்தல்
உதாரணம் வாடிக்கையாளர் வரும்போது விற்பனை செய்தல்
|
|
நீண்டகால இலக்கு உடையவர் உதாரணம்
சந்தையில் நீண்ட கால நிலைத்திருத்தல் |
குறுகிய கால இலக்கினை உருவாக்கிக் கொள்ளுதல் உதாரணம்- விரைவான லாபத்தை பெறுதல் எவ்வாறேனும் பண்டங்களை விற்றல்
|
|
வணிகத்தை நாளுக்கு நாள் விரிவு படுத்திக் கொள்வார் தற்போது
இருக்கும் நிலைமை தொடர்பில் திருப்தி அடைய மாட்டர் உதாரணம் புதிய சந்தைகளை தேடிச் செல்லல்
|
தற்போது இருக்கும் நிலைமையிலே வணிகத்தை நடாத்தி செல்வதில்
திருப்தி அடைதல் உதாரணம் நடைபாதை வியாபாரம் பாரம்பரிய சில்லறை வியாபாரம் |
|
முயற்சியாளர்
சூழலில் காணப்படும்
வாய்ப்புகளை ஆக்கரீதியாக அறிந்து இடரை ஏற்று புத்தாக்கம் புரிபவர் முயற்சியாளர் என
எளிமையாக குறிப்பிட முடியும்.
முயற்சியாளர்
என்பவர் யார் என்பதை விளக்குவதற்கு உறுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரவிலக்கணமொன்று
இல்லை. முயற்சியாளர் தொடர்பில் பின்வரும் வரவிலக்கணத்தை முன் வைக்கலாம்.
• சந்தையில்
ஏற்படும் மாற்றங்களை வணிகத்திற்கான வாய்ப்பு ஒன்றாக கருதும் நபர் முயற்சியாளர்
ஆவார். புத்தாக்கம் புனைதலே அவரது ஆயுதமாகும்".( பீட்டர் எப். டக்கர்)
முயற்சியாளர்களின்
வகைகள்
வணிகர்களான முயற்சியாளர்கள் : முயற்சியாண்மை
செயற்பாடுகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் அதேவேளை பொதுவாக இலாபம் பெறும் நோக்கில்
வணிகச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற முயற்சியாளர்கள் வணிக முயற்சியாளர்கள்
எனப்படுவர்.
உதாரணம்: சில்லளற
வியாபாரி
சமூக முயற்சியாளர்கள்
• சமூகத்திற்கு சேவை
செய்யும் எண்ணத்தில் சமூக ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்வதற்கு
புத்தாக்கங்களில் ஈடுபடுதல் இதன் கருத்தாகும். மனதிருப்தி,
வரவேற்பு,புகழ்,பிரதிஉபகாரம் போன்ற அணுகூலங்கள் சமூக முயற்சியாண்மையின் மூலம்
எதிர்பார்க்கப்படும். உலகத்தை சிறந்த இடம் ஒன்றாக மாற்றுவதே சமூக
முயற்சியாண்மையின் நோக்கமாக இருக்கின்றது.
உதாரணம்:- தொற்று நோய்கள் பரவுதல், ஊட்டச்சத்துப்
பிரச்சினைகள்,கல்வியறிவின்மை, போதைப்பபொருள் பாவனை, வறுமை
இவ்வாறான பிரச்சினைகளுக்குச் சமூக
முயற்சியாளர்கள், தீர்வுகளை முன்வைத்து சமூக மாற்றத்திளை ஏற்படுத்த
முன்வருகின்றனர். இது பிரதேச, தேசிய, சர்வததசம் என்ற வகையில் செயற்படுவதைக்
காணலாம்
உதாரணம்:- கிராமிய கடனுதவித் திட்டம், தொற்றுநோய்களைத் தடுப்பதற்காக
வேலைத்திட்டமொன்றை அறிமுகஞ் செய்தல்
உலகில் பிரசித்தி பெற்ற சமூக முயற்சியாளர்களில்
சிலரை இங்கு குறிப்பிடலாம்.
உதாரணம்:- மகாத்மா காந்தி, மேரிகியூரி அம்மையார், கலாநிதி
மொஹம்மட் யூனிஸ் போன்றவர்கள்.
தேசிய ரீதியில் பிரசித்தி பெற்றுள்ள பல சமூக முயற்சியாளர்களும்
காணப்படுகின்றனர்.
உதாரணம் :- சி. டப்ளியு. டப்ளியு.கன்னங்கரா
உள்ளக (நிறுவன) முயற்சியாளர்கள் :
• அமைப்புகளின்
வெவ்வேறு கருமமாற்றுகின்ற ஆக்கரீதியான பதவிகளில் தனிநபர்கள் நிறுவனத்தின் உற்பத்தி
பொருட்களில் மட்டுமன்றி உற்பத்தி முறைகளிலும் மாற்றம் செய்கின்றனர். உயர்
முகாமையாளர்கள் அவ்வாறான ஆக்க ரீதியான கருமங்களை மேற்கொள்வதற்கு அவ்வாறான
தனிநபர்களை ஊக்கப்படுத்துவார்கள். இவ்வாறு அமைப்போன்றில் மாற்றங்களை
அறிமுகப்படுத்தும் நிறுவனத்தினுள் செயற்படும் முயற்சியாண்மை உள்ளக முயற்சியாண்மை
எனப்படும்.
உதாரணம் :-
தரவிருதினைப் பெற்ற அரச நிறுவனங்களின் தலைவர்களும், விருதினைப்
பெற்ற பாடசாலை அதிபர்களும்
வணிகச்சூழல்
வணிகச்
சூழலை கற்பதன் முக்கியத்துவம்
வணிக கருமங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணி செயல்படுகின்ற சூழல் வணிகச் சூழல்
எனப்படும்.
நிறுவனத்தினால் கட்டுப்படுத்த கூடியது அல்லது கட்டுப்படுத்த முடியாத
காரணிகளைக் கொண்டது.
அன்றாடம் வணிகச் சூழலினுள் மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அம்மாற்றங்களை
இனம் கண்டு அவற்றுக்கு சரியான பிரதிபலிப்புகளை வெளிப்படுத்துவதன் மூலம் வணிக
நடவடிக்கைகளை இலகுவாக கையாளலாம் அத்தோடு வணிகத்திற்கு அவசியமான பல்வேறு அனுகூலங்களையும்
முயற்சியாளர் அடைவார். தற்போது
இலங்கையின் பொருளாதார சந்தையை முதன்மையாகக் கொண்டு இயங்குவதால் வணிகச் சூழலில்
உள்ள மாற்றங்களை இனம் கண்டு அவற்றை கற்பதன் ஊடாக ஆக்கபூர்வமான வணிக எண்ணங்கள்
மற்றும் வாய்ப்புகளைப் பல்வேறு சூழல் துறைகளினுடாக வெளிக்கொண்டுவர முடியும்.
உதாரணம்
·
கணினி தொழில்நுட்பம்,
தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் மற்றும்
இலத்திரன்கள் வணிகத்திற்கான நாட்டம்.
·
சுற்றுலா பயண கைத்தொழில் உள்ளூர்
வெளியூர் சுற்றுலா பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரித்தல்.
·
நிர்மாணத் துறையில் உள்ள வாய்ப்பு.
தரமான வணிகக்கலாச்சாரத்தை கட்டி
எழுப்பும் முயற்சியாளனின் இருப்பை உறுத்தி செய்வதற்கு வணிகச் சூழல் மிகச் சிறப்பான
பங்களிப்பை வழங்குகின்றது வணிக நோக்கத்தை அடைவதற்கு வணிகச் சூழலை அவதானமாக
கையாளுதல் வேண்டும்.
வணிகச் சூழலிலிருந்து தோன்றுகின்ற
நன்மை மற்றும் தீமையான தாக்கங்களை இனம் கண்டு வைத்திருப்பது வணிகத்தின் நோக்கத்தையும்
குறிக்கோளையும் அடைவதற்கு துணையாக அமையும். சூழல்
காரணிகளின் ஊடாக இனம் காண்கின்ற வாய்ப்புகள் மற்றும் பழம் நன்மையாகவும் பலவீனம்
மற்றும் சவால்கள் தீமையாகவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது இதிலிருந்து
தெளிவாகின்றது.
அனுகூலமான விளைவுகளை இனம் கண்டு
அதனூடாக வணிகத்தை மென்மேலும் கட்டியெளுப்புவதற்றகு முயற்சியாளர் நடவடிக்கை
மேற்கொள்வதோடு பிரதிகூலமான விளைவுகளை இனம் கண்டு அவற்றை குறைப்பதற்கான தீர்வுகளை
முன் வைக்க வேண்டும் வணிகச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற முயற்சியாளர்களினால் சரியான
தீர்மானங்களை எடுப்பதற்கான பின்புலத்தை வணிகச் சூழல் காரணிகள் வழங்குகின்றன.
புராதன மற்றும் நவீன வணிகச் சூழலுக்கு இடையிலான வேறுபாடுகள்
அக்கால மக்களின் பெரும்பாலான அடிப்படைத் தேவைகள் குறைவானதாக காணப்பட்டன
|
மக்களின் அடிப்படைத் தேவைகள் மிகவும் அதிகமாக காணப்படுகின்றன |
தேவைகளும் விருப்பங்களும் எளிமையாக
காணப்பட்டன |
தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு வெண்ணிலடங்கா பொருட்கள் சேவைகள்
காணப்படுகின்றன |
போட்டி குறைவு |
போட்டி அதிகம் |
இலாபம் முக்கிய குறிக்கோளாக இருத்தல் |
இலாபம் மட்டுமல்லாது சமூகப் பொறுப்புகள் போன்ற வேறு வேறு நோக்கங்களை
ஈடுசெய்வதும் இன்றியமையாததாக உள்ளது |
குறிப்பிட்ட ஒரு பிரதேசத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன |
உலகம் பூராகவும் பரவலடைந்துள்ளன |
மாற்றங்களின் வேகம் மிகக் குறைவு |
மாற்றங்களின் வேகம் மிக அதிகம் |
வணிகர்கள் பலம் உடையவர்களாக இருந்தனர் |
நுகர்வோர் பலம் உடையவர்களாக உள்ளனர் |
தற்போதைய வணிகச்
சூழலில் உள்ள உண்மையான மாற்றங்களை அறிந்து கொள்வதன் ஊடாக முயற்சியாளர் அடையும் பயன்கள்.
·
வணிகத்திற்குரிய பலத்தையும் பலவீனத்தையும் இணங்காணல்
·
வணிகச் சூழலில் காணப்படுகின்ற பல்வகையான வணிக சந்தர்ப்பங்களை இனங்காணல்
·
வணிகத்திற்கான சவால்களை இணங்காணல்
·
சூழல் மாற்றத்திற்கு பொருத்தமான வகையில் உற்பத்தி மற்றும் விற்பனை
நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
·
சூழல் மாற்றங்களுக்கு அமைவான விதத்தில் திட்டங்களை வகுத்தலும் உபாய
மார்க்கங்களை தீர்மானித்தலும்
வணிகச் சூழலின் வகைகள்
வணிகச் சூழலை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம்
1.
அகச்சூழல்
2.
புறச் சூழல்
அகச் சூழல்
வணிகச் செயற்பாட்டில்
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அச்செயற்பாட்டில் ஈடுபடும் பல்வேறு பிரிவினர்களும்
வணிகத்தில் காணப்படும் ஏனைய காரணிகளும் “அகச் சூழல்” என அழைக்கப்படும்.
அகச்சூழல் காரணிகள் பின்வருமாறு
·
உரிமையாளர்
·
முகாமையாளர்
·
ஊழியர்
·
வளம்
·
நிறுவன கலாசாரம்
·
நிறுவன கட்டமைப்பு
அகச் சூழலும் அதன் தாக்கமும்
அகச்சுழல் காரணிகளை அறிந்து
கொள்வதன் ஊடாக தமது வணிகத்தின் பலத்தையும் பலவீனத்தையும் துல்லியமாக விளங்கிக்
கொள்ளலாம். பலத்தை உபயோகித்து , வணிகத்தை வெற்றிகரமாக மாற்றலாம். பலவீனங்களை தவிர்த்துக் கொள்வது
கூட வணிகத்தின் வெற்றிக்கு வழிகோலும். இதில் உள்ள விசேட அம்சம் யாதெனில், அகச் சூழற் காரணிகளின் ஊடாக
ஏற்படுகின்ற தாக்கங்களை வணிகங்களினால் கட்டுப்படுத்த கூடியதாக உள்ளதாகும்.
சூழல் வகைப்படுத்தலில் மேற்கூறிய காரணிகளையும்
அதனால் கொடுக்கின்ற தாக்கங்களையும் தனித்தனியாக அறிந்து கொள்வோம்.
உரிமையாளர்
இவர் வணிகத்தில் மூலதனத்தை
ஈடுபடுத்துபவராக இருப்பார். உரிமையாளர்களின் நிதிப்பலம், வணிக அறிவு, அனுபவம்
என்பன வணிகமொன்றின் வெற்றிக்குக் காரணமாக அமையும்.
வணிகத்திற்கு மூலதனத்தை இடுபவர் உரிமையாளர் ஆவார் அல்லது நிதியினை முதலீடு செய்து லாபம்
அல்லது நட்டத்தை ஏற்கும் பிரிவினர் உரிமையாளர் ஆவார்.
முகாமையாளர்
வணிகமொன்றின் நோக்கத்தை
நிறைவேற்றுவதற்காக வணி கத்தின் வளங்களைச் செயற்படுத்துவதற்குத் தேவையான தீர்மானம்
மேற்கொள்ளும் நபர்களே முகாமையாளர்கள் ஆவர். வணிகமொன்றின் வாடிக்கையாளருக்கும்
பணியாளர்களுக்கும் இடையிலான சிறந்த தொடர்பானது முகாமையாளர்கள் மூலமே கட்டியெழுப்பப்படுகின்றது.
சில வணிகங்களில் உரிமையாளர்களே முகாமையாளர்களாகவும் காணப்படுவர்.
வணிகத்திற்குரிய மனித பௌதிக வளங்களை ஒருமுகப்படுத்தி நிறுவனத்தின் குறிக்கோள்
மற்றும் நோக்கங்களை அடைவதற்கு தலைமைத்துவம் வழங்குபவரை முகாமையாளர் எனக்
குறிப்பிடுவோம்
.
தனது அறிவு, திறன்
என்பவற்றைப் பயன்படுத்தி ஒப்படைக்கப் பட்ட கருமங்களைச் சரியான முறையில்
நிறைவேற்றுவோர் ஊழியர்கள் எனப்படுவர். அவர்களது சாதக மனப்பாங்கும் அர்ப்பணிப்பும்
வணிகமொன்றின் வெற்றிக்குக் காரணமாக அமையும்.
வணிகச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற
நபர் ஊழியர் எனப்படுவர். ஊழியர்கள் தங்கள் உடல், உள உழைப்பை வணிகச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தி அதற்காக கூலி அல்லது சம்பளத்தை
பெறுகின்றனர்.
வளம்
வணிகச் செயற்பாடுகளை
மேற்கொள்வதற்கான அனைத்து பௌதீக மற்றும் நிதி முதலான அம்சங்கள் வழங்கல்
எனப்படுகின்றன.
நிறுவன கலாசாரம்
வணிகத்தில் காணப்படும் அனைவரிடமும் பகிர்ந்து
அளிக்கப்படுவதும் அடுத்து வரும் சந்ததியினருக்கு ஒப்படைக்கப்படும்
நம்பிக்கைகள், பெறுமதிகள், மனப்பாங்குகள், பழக்கவழக்கங்கள், நடத்தைமுறைகள், முன்மாதிரிகள் என்பன நிறுவன
கலாசாரம் ஆகும்.
நிறுவன கட்டமைப்பு
நிறுவனத்தின் நோக்கத்தினை
இலகுவாக அடைந்து கொள்ளக் கூடியவாறு அமைப்பின் கருமங்கள் வளங்கள் அதிகாரம் என்பன
பிரிந்து செல்லும் முறை நிறுவன கட்டமைப்பு ஆகும்.
அகச் சூழலை
ஆய்வின் மூலம் மூலம் பெற்றுக்கொள்ளப்படுபவை
·
பலங்களை இனம் காண முடியும்
·
பலவீனங்களை இனங்கால முடியும்
பலம்
வணிக அமைப்பு காணப்படுகின்ற அதில் நேரான
தாக்கத்தை செலுத்துகின்ற காரணிகள் பலம் எனப்படும்.
பலவீனம்
வணிக அமைப்பில் காணப்படுகின்ற அதில் எதிரான தாக்கத்தை
ஏற்படுத்தும் காரணிகள் பலவீனம் ஆகும்.
அகச்சுழல் காரணிகளுடன் இணைந்த பலம் பலவீனங்களை
அட்டவணை படுத்தல்.
காரணிகள் |
பலம் |
பலவீனம் |
உரிமையாளர் |
கூடுதலானோர் காணப்படுதல்
அவர்களிடம் நிதிப்பலம்அதிகரித்தல்
அவர்களின் அறிவும் அனுபவமும்அதிகரித்தல் |
குறைவான தொகையினர் காணப்படல்
அவர்களிடம் மிதிப்பலம் குறைவாக
இருந்தல்
அவர்களின் அறிவும் அனுபவமும்
குறைவாக இருத்தல்
|
முகாமையாளர் |
பயிற்சியும் அனுபவமும்
அதிகரித்தல்
சரியான தீர்மானம் எடுக்கும்
ஆற்றல் |
பயிற்சியும் அனுபவமும் குறைவடைதல்
பிழையான தீர்மானம் படுத்தல்
|
ஊழியர் |
திறமையான அனுபவம் உள்ள ஊழியர்கள்
காணப்படல்
பல்வேறு திறன்களை கொண்டிருத்தல்
சாதகமான மனப்பாங்கு காணப்படல்
ஊக்கமுள்ள ஊழியர்கள் காணப்படும் |
பயிற்சஅற்ற ஊழியர் காணப்படல்
பல்வேறு திறன்களை கொண்டிருக்காமை
எதிரான மனப்பாங்கு காணப்படல்
வினைத்திறன் அற்ற ஊழியர் காணப்படல்
|
வளம் |
தேவையான வளம் காணப்படல்
தரமான பொருள் காணப்படல்
இற்றைப்படுத்திய வளம் காணப்படுல்
|
தேவையான அளவு வளம் காணப்படாமை
தரமற்றதாககாணப்படல்
காலம் கடந்த வளம் காணப்படல் |
நிறுவன கலாச்சாரம் |
நேரான மதிப்பீடு மற்றும் நேரான
முறைமை காணப்படும்
விருத்தி அடைந்த நடத்தை ஒழுக்கம்
பழக்கவழக்கங்கள் காணப்பட்டமை |
நேர் மதிப்பீடு மற்றும்
நேர்முகாமை காணப்படாது
விருத்தியடைந்த நடத்தை ஒழுக்கம் காணப்படாமை |
நிறுவன கட்டமைப்பு |
பொருத்தமானவாறு வேலை பகிர்ந்து
அளித்தல்
பொருத்தமானவாறு ஒழுங்கமைப்பு கட்டி எழுப்புதல்
|
பிரிவினர்களுக்கிடையே சிறந்த
இணைப்பு இல்லாமல் |
புறச்சூழல்
வணிக நிறுவன நடவடிக்கையில்
செல்வாக்கு செலுத்துகின்ற ஆனால் வணிகத்துக்கு வெளியே காணப்படுகின்ற சகல காரணிகளும்
புறச்சூழல் எனப்படும்.
புறச்சூழல் காரணிகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்
·
அண்மிய சூழல்
·
அரசியல்
மற்றும் சட்டசூழல்
·
பொருளாதாரச் சூழல்
·
சமூக மற்றும்
கலாச்சார சூழல்
·
தொழில்நுட்ப சூழல்
·
இயற்கைச் சூழல்
·
மக்கள் சூழல்
·
பூகோளச் சூழல்
புறச் சூழலும் அதன் தாக்கமும்
வணிகத்தின் நோக்கத்தை இலகுவாக அடைந்து கொள்ள
வேண்டுமாயின் சந்தர்ப்பங்களில் இருந்து உச்ச பயனை பெறுவதோடு சவால்களுக்கு சரியான
தீர்வுகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அண்மியச் சூழல்
அண்மியச் சூழல் என்பது புறச்சூழல் காரணிகளில்
வணிகத்துக்கு மிகவும் நெருக்கமாக செயல்படுகின்ற சக்திகளை உள்ளடக்கிய சூழல் ஆகும்.
அண்மியச் சூழல் காரணிகளாக வாடிக்கையாளர், வழங்குனர்கள், போட்டியாளர்கள் பதிலீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிப்பவர், எதிர்காலத்தில் வணிகத் துறையில்
பிரவேசிக்க எதிர்பார்த்து உள்ளோர் ஆகியோரை குறிப்பிடலாம்.
வாடிக்கையாளர்
வணிகமொன்றில் பொருள்கள், சேவைகளைக் கொள்வனவு செய்வோர் வாடிக்கை யாளர்களாகக்
கருதப்படுவர். இவர்கள் மூலமே வணிகமொன்றின் நிலைப்புத்தன்மை நிர்ணயிக்கப்படும்.
எனவே, அவர்களது பல்வேறு தேவைகள், விருப்பங்களை இனங்கண்டு அவற்றைச் சரியான முறையில்
திருப்திசெய்வதற்கு வணிகங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்களது
கொள்வனவு செய்யும் போக்குகளில் ஏற்படும் மாற்றங்கள் வணிகமொன்றின் செயற்பாடுகள்
மீதுஅதிக தாக்கத்தினை ஏற்படுத்த முடியும்.
வழங்குனர்கள்
வணிகமொன்றை
நடாத்திச்செல்லும்போது தேவையான மூலப்பொருள்கள், போக்குவரத்து வசதிகள் போன்ற
பல்வேறு சேவைகளை வழங்கும் பிரிவினர்கள் வழங்குனர்கள் எனக் கருதப்படுவர்.
மூலப்பொருள்கள் மற்றும் சேவைகளைத் தொடர்ச்சியாக உரிய நேரத்திற்குப் பெற்றுக்கொள்ள உதவுதல்,
அவற்றின் தரத்தை உறுதிப்படுத்தல் எனும் வழங்குனரது சேவைகள் வணிகத்தின் தொடர்ச்
சியான செயற்பாட்டை நடாத்திச் செல்வதற்கு மிக முக்கியமானவையாகும்.
போட்டியாளர்கள்
வணிகமொன்றினது
பொருள் அல்லது சேவையொன்றிற்குச் சமமான பொருள் அல்லது சேவையொன்றை உற்பத்திசெய்யும்
அல்லது விநியோகம்செய்யும் நிறுவனங்கள் போட்டியாளர்கள் எனக் கருதப்படும்.
போட்டியாளர்கள் அவர்களது வணிகச் செயற் பாடுகளை மேற்கொள்ளும் முறைகள்,
போட்டியாளர்களது உற்பத்திகளின் விலைகள், தரம் போன்ற விடயங்களும் வணிகச்
செயற்பாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.
முயற்சியாண்மைக்கும் வணிகத்துக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு......!
No comments