சந்தைப்படுத்தல் திட்டம்.............!
சந்தைப்படுத்தல் திட்டம்.............!
சந்தைப்படுத்தல்
திட்டம்
சந்தைப்படுத்தல்
அறிமுகம்
·
வணிகத்திட்டத்தின் அடிப்படையாக சந்தைப்படுத்தல் திட்டத்தை அறிமுகம் செய்யலாம்
·
வணிகமொன்றில்
சந்தைப்படுத்த எதிர்பார்க்கும் பொருட்கள் சேவைகள் இலக்குச்சந்தையை அடைந்து கொள்ளும்
முறையை காட்டும் பட்டியல் சந்தைப்படுத்தல் திட்டம் ஆகும்.
·
வணிகமொன்று தனது
நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு பின்பற்ற வேண்டிய அடிப்படை முறைகள் தொடர்பில்
வழிகாட்டல் சந்தைப்படுத்தல் எண்ணக்கருவாகும்
சந்தைப்படுத்தலானது பின்வருமாறு
வளர்ச்சியடைந்துள்ளது
1.
உற்பத்தி
எண்ணக்கரு
2.
உற்பத்திப்பொருள் எண்ணக்கரு
3.
விற்பனை
எண்ணக்கரு
4.
சந்தைப்படுத்தல்
எண்ணக்கரு
5.
வாடிக்கையாளர்
எண்ணக்கரு
6.
முழுமையான
சந்தைப்படுத்தல் எண்ணக்கரு
உற்பத்தி எண்ணக்கரு
·
சந்தைப்படுத்துவோருக்கு வழிகாட்டலைக் காட்டும் பழைமையான எண்ணக்கருவாகும்.
·
இதில் சந்தைப்படுத்துவோர் பின்வரும்
கருமங்களில் கவனம்செலுத்துவர்
ü
-உற்பத்தியை
இயன்றளவில் அதிகரித்தல்
ü
-குறைந்த
கிரயம்
உற்பத்திப்பொருள்
·
உயர்தரத்துடனும்
நவீன மற்றும் மனதைக் கவரக்கூடிய பண்புகளுடன் கூடிய பொருட்களை கொள்வனவு செய்ய நுகர்வோரை
தூண்டுதலாகும்.
·
சந்தைப்படுத்துவோர் பின்வரும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவர்
ü
தரம்
தொடர்பில்
ü
தனது நேரம்
உழைப்பினை செலவழித்து ஆய்வு அபிவிருத்திக்கருமங்களை மேற்கொள்ளல்
விற்பனை
எண்ணக்கரு
·
விற்பனைக்கொள்கை விற்பனை மேம்பாட்டு முறை என்பவற்றை அடிப்படையாக கொண்டதாகும்.
சந்தைப்படுத்தல்
எண்ணக்கரு
·
உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பதிலாக சந்தைப்படுத்தப்கூடிய பொருள்களை உற்பத்தி செய்வதாகும்.
வாடிக்கையாளர் எண்ணக்கரு
·
வாடிக்கையாளரை தனித்தனியாக இனங்கண்டு அந்தந்த வாடிக்கையாளருக்கு பொருந்தக்கூடியவாறு உற்பத்திப் பொருட்களை முன்வைத்தலாகும்.
சமூக
சந்தைப்படுத்தல் எண்ணக்கரு
·
சமுகத்திற்கு தீங்குவிளைவிக்காத பொருட்கள் சேவைகளை வழங்குதலாகும்.
முழுமையான சந்தைப்படுத்தல் எண்ணக்கரு
·
உயர்பெறுபேற்றை பெற்றுக்கொள்வதற்காக ஒரே நோக்கத்துடன் செயற்படல் ஆகும்.
·
இதில் பின்வரும் விடயங்கள் உள்ளடங்கும்
Ø
1.தொடர்புமுறை
சந்தைப்படுத்தல்
Ø
2.ஒருங்கிணைந்த
சந்தைப்படுத்தல்
Ø
3.அக
சந்தைப்படுத்தல்
Ø
4.செயலடைவுச்சந்தைப்படுத்தல்
சந்தைப்படுத்தல் திட்டமொன்றின் பகுதிகள்
1.
சந்தை ஆய்வு
2.
உத்தேச
வணிகத்தின் சந்தைப்படுத்தல் உபாயவழிகள்
3.
3.விற்பனை
கணிப்புக்கள்
4.
4.சந்தைப்படுத்தல்
வருமானமும் செலவுகளும்
5.
5.நிலையான
சந்தைப்படுத்தல் செலவு
1.சந்தை ஆய்வு
·
பொருட்கள்,சேவைக்குள்ள கேள்வி,இலக்கு வாடிக்கையாளர், போட்டியாளர்களின்
தன்மை அவர்களின் சந்தைப்படுத்தல் உபாயம் போன்வற்றை பரீட்சத்தல் சந்தை ஆய்வு
எனப்படும்.
·
சந்தை ஆய்வின் பிரதான நோக்கம் சந்தைப்படுத்தல் திட்டத்தை மிகவும் சரியாக
ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான தகவலை பெற்றுக்கொள்வதாகும்.
சந்தையாய்வின் போது கருத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள்
1.
பொருட்கள்
சேவைக்குள்ள கேள்வி
§
பொருட்களை
கொள்வனவு செய்வதற்காக வாடிக்கையாளரது விருப்பம் கொள்வனவு செய்வதற்கான ஆற்றல்
என்பவற்றை ஆராய்வதாகும்.
2.
இலக்கு
வாடிக்கையாளர்
§
முழுமையான
சந்தையில் இருக்கின்ற பல்வேறு பண்புகளைக்கொண்ட வாடிக்கையாளர்களை இனங்கண்டு
அவர்களுக்கேற்ற பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்தலாகும்.
3.
போட்டியாளர்
§
முயற்சியாளர்
ஒருவர் முன்வைக்கும் பொருட்களுக்கு சமனான ஒத்த பொருட்களை முன்வைப்பவர் போட்டியாளர்
ஆவர்.
§
அல்லது அதே வகையான பொருட்கள் மற்றும் சேவைகளாக இல்லாதிருப்பினும் தமது பொருளுக்கோ சேவைக்கோ பதிலீடான பொருட்கள் சேவைகளை விற்பனை செய்யக்கூடியதாக இருக்கும்.
உ+ம்
உற்பத்தி |
பதிலீடு |
பட்டர் |
மாஜரின் |
சீனி |
கரும்பு |
சவர்க்காரம் |
சலவைத்தூள் |
2.சந்தைப்படுத்தல் உபாயவழிகள்
·
வணிக
நிறுவனமொன்று தனது இலக்குச்சந்தையில் சந்தைப்படுத்தல் நோக்கத்தை அடைந்து
கொள்வதற்காக நடைமுறைப்படுத்துகின்ற உபாயவழிகள் சந்தைப்படுத்தல் உபாயவழிகள்
எனப்படும்.
·
சந்தைப்படுத்தல்
உபாயவழியை தெரிவு செய்யும் போது சந்தைப்படுத்தல் கலவையை அடிப்படையாக்க் கொள்வது முக்கியமாகும்.
அவையாவன: (4Ps)
·
உற்பத்தி-product
·
விலை-price
·
இடம்-place
·
மேம்படுத்தல்-promotion
இவற்றிற்கு மேலதிகமாக மேலும் மூன்று
மாறிகள் 3Ps உள்ளடக்கப்பட்டு 7Ps மாறிகளைக் கொண்டதாக இருக்கும்.
(7Ps = 4Ps +3Ps)
அவையாவன:
·
மனிதர்கள்-people
·
செயன்முறை-process
·
பௌதீகச்சூழல்-physical environment
7Ps மாறிகளும் அவற்றிற்கான உதாரணங்களும்
உற்பத்தி
·
நுகர்வோரின் தேவைகள்,விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கு விற்பனைக்காக சந்தைக்கு முன்வைக்கும் எந்தவொன்றும் உற்பத்திப்பொருள் ஆகும்.
உ+ம்
·
தரம்
·
வடிவமைப்பு
·
குணாம்சங்கள்
·
சின்னம்
·
பொதி
·
அளவு
·
உத்தரவாதம்
·
ஆக்கம்
விலை
·
பொருள் அல்லது சேவையை பெற்றுக்கொள்வதற்காக நுகர்வோர் செலுத்தும் பணத்தொகையை விலை ஆகும்.
உ+ம்
·
பட்டியற்விலை
·
கழிவுகள்
·
படிகள்
·
கடன்நிபந்தனை
இடம்
·
உற்பத்திப்பொருளை மிக வெற்றிகரமாக விற்பனை செய்வதற்காக சந்தைக்கு விநியோகித்தலாகும்.
உ+ம்
ü
விநியோகித்தல்
வழிமுறை
ü
வழிக்கலவை
ü
போக்குவரத்து
ü
பிரதேசம்
மேம்படுத்தல்
·
உற்பத்திப்பொருள் தொடர்பாக ஆர்வம் காட்டும் இலக்குவாடிக்கையாளர்களுக்கு தொடர்பாடல் செய்வதற்காக பயன்படுத்தப்படும் செயன்முறையாகும்.
உ+ம்
·
விளம்பரப்படுத்தல்
·
விற்பனை
மேம்படுத்தல்
·
தனிப்பட்ட
விற்பனை
·
நேர்
சந்தைப்படுத்தல்
மனிதர்கள்
·
சிறப்புத்தேர்ச்சி பெற்ற அன்பான ஒழுக்க விழுமியங்களுடன் கூடிய விற்பனை ஊழியர்களைக் குறிக்கும்.
செயன்முறை
·
சேவையை வழங்குவதற்கு தேவையான செயற்பாட்டு முறைமை மற்றும் விற்பனையின் பின்னர் இடம்பெறும் சேவையை குறிக்கும்.
பௌதீகச்சூழல்
·
வாடிக்கையாளர்களுக்கு உயர்பெறுமானம் ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக சேவைவழங்கும் இடத்தின் சூழலையும் சுற்றாடலையும் உருவாக்குதல் இதுவாகும்.
4Cs வாடிக்கையாளர் கலவைகள்
Ø
நுகர்வோர் தேவை விருப்பம்-customer needs and wants
Ø
கிரயம்-cost
Ø
வசதி- convenience
Ø
தொடர்பாடல்-communication
விற்பனையாளர்
மாறிக்கும் (4Ps) வாடிக்கையாளர் மாறிக்கும் இனையிலான தொடர்பு
4ps
4cs
சந்தைப்படுத்தல்
கலவையினை SIVA எனும் முறைக்கேற்ப வகைப்படுத்தல்
தீர்வு.
-solution
தகவல். -information
பெறுமதி. -value
மார்க்கம்- Access
விற்பனையாளர் கொள்வனவாளர் மாறியினை SIVA முறைக்கேற்ப வகைப்படுத்தல்.
4Ps. SIVA. 4Cs
Product. Solution. Customer needs & wants
Promotion. Information Communication
Price. Value. Cost
Place. Access. Convenience
வெற்றிகரமான
சந்தைப்படுத்தலுக்கு சந்தைப்படுத்தல் கலவையின் முக்கியத்துவம்
ü
விற்பனைப்புரள்வை
அதிகரித்துக் கொள்ள முடியும்
ü
நுகர்வோரைக் கவரக்கூடியதாக
இருத்தல்
ü
பொருள்களை
கொள்வனவு செய்வதற்கு ஊக்குவிக்க கூடியதாக இருத்தல்
3.விற்பனை எதிர்வு கூறல்
·
குறித்த காலத்திற்குள் சந்தைக்கு முன்வைக்க எதிர்பார்க்கும் பொருட்கள் சேவைகளின் அளவுகளை தீர்மானிப்பது இதுவாகும்.
·
அதாவது ஏதேனும் ஒரு பொருளொன்றுக்குகுறித்த பிரதேசத்தினுள் மாதம் ஒன்றுக்கு 5000 அலகுகள் கேள்வியுள்ளதாக அறிந்த பின் 4500அலகுகள் தற்போதுள்ள போட்டியாளர்வழங்குவர் என இனங்காணப்பட்டுள்ளது.
·
இதில் 500 அலகுகள் சந்தை இனைவெளி ஒன்று நிலவுகின்றது.இவ் 500 அலகினைநிரம்பல் செய்ய முடியுமா அல்லது ஒரு பகுதியை மட்டும் வழங்க முடியுமா? என்பது பற்றி புதிய முயற்சியாளர் தீர்மானம் எடுக்க வேண்டும்.
4.சந்தைப்படுத்தல் வருமானமும்
செலவுகளும்
விற்பனை வருமானம்
எதிர்பார்க்கும் எதிர்பார்க்கும்.
அலகொன்று
விற்பனை.
= பொருட்களின். × க்கு எதிர்பார்
வருமானம்.
விற்பனை. க்கும் விற்பனை
அலகு விலை
எண்ணிக்கை.
சந்தைப்படுத்தல் செலவு
·
பொருட்கள் சேவைகளை சந்தைப்படுத்துவதோடு தொடர்புடைய அனைத்து செலவுகளும் சந்தைப்படுத்தல் செலவாகும்.
உ+ம்
ü
சந்தைப்படுத்தல்முகாமையாளர்
சம்பளம்
ü
சந்தைப்படுத்தல்
ஊழியர் சம்பளம்
ü
நிறுவனத்தின் மொத்த சந்தைப்படுத்தல் வருமானம் மற்றும் செலவுகள் தொடர்பாக எதிர்வுகூறப்பட்ட தரவுகள் சந்தைப்படுத்தல் திட்டத்தில் உள்ளடக்கப்படும்.
5.நிலையான சந்தைப்படுத்தல்
சொத்துக்கள்
·
வணிகத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகச் செயற்பாடுகளில் நேரடியாக தொடர்புபடும் நீண்டகாலச் சொத்துக்கள் இதுவாகும்.
உ+ம்
ü
காணி,கட்டிடம்,இயந்திர உபகரணங்கள்
சந்தைப்படுத்தல் திட்டம்.............!
No comments