இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல் ................!

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்................!










இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல் - ................!




 

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்  ................!


 இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல் - உடனடியாக வைத்தியரை நாடவும்....

     

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவுடன் தொடர்புடைய வலி நிவாரணத்திற்கு பரசிட்டமோல் மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான அறிவுறுத்தலை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.


அத்துடன் இந்த ஆண்டு இதுவரை 25,505 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகர் சமூக மருத்துவர் பிரஷிலா சமரவீர கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் வைத்து கூறியுள்ளார்.


இதேவேளை நிலவும் மழையுடனான வானிலையால் சுவாச நோய்கள் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


சுவாச நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானம் தொடர்பான விசேட வைத்தியர் அத்துல லியனபத்திரன பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.


காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது பொருத்தமானதென அவர் கூறியுள்ளார்.


சுவாச நோய்கள் ஏற்பட்டுள்ள எந்தவொரு தரப்பினரும் மூச்சு விடுவதில் சிரமம் காணப்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.






இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்............! 


No comments

Theme images by fpm. Powered by Blogger.