பாடசாலையில் ---------- பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும்..................!
பாடசாலையில் ---------- பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும்..................!
பாடசாலையில் ---------- பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும்..................!
பாடசாலையில் நீச்சல் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதால் பாடசாலையில் நீச்சல் பயிற்சியைக் கட்டாயமாக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றில் இன்று (03) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நீரில்மூழ்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் முல்லைத்தீவு - குமுழமுனைப் பகுதியில் தீர்த்தக்கேணியில் மூழ்கி இரண்டு பாடசாலைமாணவிகள் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர தாமரைக்குளத்தில் பூப்பறிக்கச்சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை ஒரேநாளில் நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் பாடசாலை மாணவர்களாக காணப்படுகின்றனர்.
இவ்வாறாக ஒரேநாளில் நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளமையால் முல்லைத்தீவு மாவட்டமே சோகமயமாகக் காணப்படுகின்றது.
இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள மாணவர்கள் மூவருக்கும் நீச்சல் தெரியாது. இப்படியாக பல மாணவர்கள் நீச்சல் தெரியாத நிலையில் காணப்படுகின்றனர். எனவே பாடசாலைகளில் நீச்சல் தடாகங்களை அமைத்து மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சிகளை வழங்கினால் நல்லதென எண்ணுகின்றேன். தயவுசெய்து இந்தவிடயத்தை கவனத்திலெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். என குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலையில் ---------- பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டும்..................!
No comments