தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு... ..... !
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு... ..... !
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு... ..... !
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு...
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடாத்தப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேற்படி பரீட்சை 2025 ஓகஸ்ட் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2787 பரீட்சை நிலையங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
50 பெண் ஓட்டுநர், நடத்துனர் நியமனம் - இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்
இலங்கை போக்குவரத்து சபை 50 பெண் ஓட்டுநர் நடத்துனர் பதவிகள் உட்பட 750 ஓட்டுநர் நடத்துனர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, 425 ஓட்டுநர்கள் மற்றும் 275 நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர், இதில் தலா 50 ஆண் மற்றும் 25 பெண் நடத்துனர்கள் உள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் துணை பொது மேலாளர் (நிர்வாகம்) இந்திகா குலதிலக கூறுகையில், இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும், எதிர்காலத்தில் அவர்களின் சேவைகள் நிரந்தரமாக்கப்படும் என்றும் கூறினார்.
இலங்கை போக்குவரத்து சபையால் பெண் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வது நீண்ட வரலாற்றின் பின்னர் நடைபெற்று வருவதாகவும், கொழும்பு பெண்கள் பள்ளி போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கு அவர்களை பணியமர்த்துவதே இதன் நோக்கம் என்றும் இலங்கை போக்குவரத்து சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஆட்சேர்ப்புகளின் முக்கிய நோக்கம் கிராமப்புற பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்றும், 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் இந்த மாதம் 31 ஆம் தேதிக்கு முன் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் வாரியம் கூறுகிறது.
ஓட்டுநர் பணிக்கு,
வயது 21 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்விப் பொதுச் சான்றிதழ் சாதாரண தரத் தேர்வில் கணிதம், தாய்மொழி உள்ளிட்ட ஆறு பாடங்களில் இரண்டு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐந்து அடி உயரம், நல்ல ஆரோக்கியம், மூன்று வருட நீட்டிப்புடன் கூடிய கனரக வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவை கூடுதல் தகுதிகளாகும்.
நடத்துனர் பணிக்கு,
18 முதல் 45 வயது வரை நல்ல ஆரோக்கியம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கனரக வாகன ஓட்டுநர் உரிமத்தைத் தவிர, மேற்கண்ட அனைத்து தகுதிகளும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழுக்கி விழுந்த காதலனை காப்பாற்றச் முயன்ற காதலி நீரில் அடித்துச்செல்லப்பட்டு மாயம்
மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹியங்கனை 17 ஆம் கட்டை பகுதியில் நேற்றைய தினம் (20) வியன்னா கால்வாய் ஒன்றில் வழுக்கி விழுந்த தனது காதலனை காப்பாற்ற முற்பட்ட வேளையில்,
பெண் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணமல் போய் உள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
இலக்கம் 453, குடா கம்மான 10, வெலிகத்த பகுதியில் வசிக்கும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 26 வயதுடைய மணவியே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் பெண், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து தனது வீட்டிற்கு காதலனுடன் 17 ஆம் கட்டைப் பகுதிக்கு அருகில் வியன்னா கால்வாய்க்கு அருகில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது,
காதலன் வியன்னா கால்வாயில் தவறி விழுந்துள்ளார், அவரைக் காப்பாற்ற முயன்றபோது குறித்த இளம் பெண்ணும் கால்வாயில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த நேரத்தில், அந்த இடத்தை கடந்து சென்ற மஹியங்கனை காவல் பயிற்சி கல்லூரியின் அதிகாரி ஒருவரும் அவரது மனைவியும் குறித்த இளைஞன் சத்தம் இடுவதை அவதானித்து உடன் தண்ணீரில் குதித்து அந்த இளைஞனை மீட்டுள்ளனர்.
பின்னர் குறித்த இளைஞன் தனது காதலி நீரில் அடித்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் ஊர் மக்கள் மஹியங்கனை பொலிஸார் இணைத்து குறித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் இன்றும் இளம் பெண் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவில் காலநிலைக்கு ஏற்றவாறு படகு சவாரி இயக்கம்...
நுவரெலியாவில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் நுவரெலியா கிரகரி வாவியில் படகு சவாரி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் முற்றாக நிறுத்தப்பட்டு சவாரிக்கு அனுமதிக்கப்படவில்லை.
மீண்டும் இன்று (21) காலை காற்றின் வேகம் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் ஒரு சில படகுகளுக்கு மாத்திரம் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர் .
பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கிரகரி, வாவியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று குறைந்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி மிதி படகுகள் இயக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாவி பகுதியில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவி வருகிறது அத்துடன் மழையால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
நுவரெலியாவில் காலநிலைக்கு ஏற்றவாறு படகு சவாரி இயக்கம்...
No comments