பாடசாலை வகுப்பறையில் மீட்கப்பட்ட --இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்... ..... !
பாடசாலை வகுப்பறையில் மீட்கப்பட்ட --இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்... ..... !
பாடசாலை வகுப்பறையில் மீட்கப்பட்ட --இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்... ..... !
பாடசாலை வகுப்பறையில் மீட்கப்பட்ட 30 பாம்புக் குட்டிகள்; இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்
பாடசாலையின் ஆரம்ப பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக் குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் உள்ள போகமுவ மத்திய கல்லூரியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் பாம்புகள் தென்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு அறிவித்தனர்.
இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி அன்று கடமைகளைப் பொறுப்பேற்ற அதிபர் தலைமையில் சோதனை செய்யப்பட்டதில் 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை சுமார் 2,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அதில், 153 மாணவர்கள் ஆரம்ப பிரிவில் உள்ளனர்.
பாடசாலை நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்தமையினால் பிள்ளைகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பெண்கள் அதிகரிப்பு;ஆண்கள் எண்ணிக்கை வீழ்ச்சி; ஆபத்து தொடர்பில் எச்சரிக்கிறார் பேராசிரியர்
இலங்கையில் ஆண் மக்கள்தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்தார்.
1995 ஆம் ஆண்டில் 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த நிலையில், தற்போது அது 100 பெண்களுக்கு 93.7 ஆண்களாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண்களின் பிறப்பு வீதம் உயர்வு, இளம் ஆண்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக பேராசிரியர் கூறினார்.
இதேவேளை, பெண்களுக்கு சமமாகத் தகுதியான ஆண்கள் இல்லாதால், அவர்கள் திருமண வாழ்க்கையில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித…
செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் ஒத்துழைப்பு - அநுரவின் யோசனைக்கு அனுமதி
செயற்கை நுண்ணறிவு அபிவிருத்திக்கு சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவுக்கான இலங்கை மூலோபாயக் கொள்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பங்காண்மை மற்றும் அறிவுப் பரிமாற்றத்திற்கான வாய்ப்புக்களைத் தேடிக் கண்டறிவதற்காக சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் "சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு தொடர்பான வேலைத்திட்டம்” (AI Singapore) உடன் கலந்துரையாடல் நடாத்தப்பட்டுள்ளது.
அதற்காக இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்களை முறைமைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்மூலம் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் எதிர்கொள்கின்ற சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒருங்கிணைந்த ஆய்வுகளை ஆரம்பித்தல், செயற்கை நுண்ணறிவு நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்களை உருவாக்கிக் கொள்வதே நோக்கமாக உள்ளது.
மீனவர்களுக்கு தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை!
கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 - 70 கி.மீ வரையிலும், கடல் கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரையில் உள்ள கடல் பகுதிகளில் கடல் அலைகள் 2.5 - 3 மீற்றர் வரையிலும் மேல் எழும்பக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
எனவே, அடுத்த 24 மணி நேரத்திற்கு கல்பிட்டியிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் கடல் அலைகள் நிலப்பகுதிக்கு வரக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
இதேவேளை கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கல்பிட்டியிலிருந்து காங்கேசந்துறை வரையான கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
கல்பிட்டியிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளும் காங்கேசந்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளும் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இக் கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
No comments