பிரபல பாடசாலை ஒன்றின் வகுப்பறையில் 30 பாம்புகுட்டிகள்... ..... !

 பிரபல பாடசாலை ஒன்றின் வகுப்பறையில் 30 பாம்புகுட்டிகள்... ..... !




பிரபல பாடசாலை ஒன்றின் வகுப்பறையில் 30 பாம்புகுட்டிகள்... ..... !





பிரபல பாடசாலை ஒன்றின் வகுப்பறையில் 30 பாம்புகுட்டிகள்... ..... !



 பிரபல பாடசாலை ஒன்றின் வகுப்பறையில் 30 பாம்புகுட்டிகள்...

    


குருநாகல் மாவட்டத்தில் போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில், ஆரம்பப் பிரிவில் உள்ள வெளிப்புற வகுப்பறையில் இருந்து 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பாடசாலையில் பாம்புகள் தென்படுவதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு அறிவித்தனர்.


இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி அன்று கடமைகளைப் பொறுப்பேற்ற அதிபர் தலைமையில் சோதனை செய்யப்பட்டதில் 30 பாம்புக்குட்டிகள், மூன்று பெரிய பாம்புகள் மற்றும் 55 பாம்பு முட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.


அதேவேளை போகமுவ மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை சுமார் 2,000 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அதில், 153 மாணவர்கள் ஆரம்ப பிரிவில் உள்ளனர்.


இந்நிலையில் பாடசாலை நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுத்தமையினால் பிள்ளைகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.



ஆய்வில் தகவல் -- திங்கட்கிழமைகளில் அதிகம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு !



உலகம் முழுவதும் அச்சுறுத்தும் பிரச்சனையாக மாரடைப்பு பிரச்சனை உள்ள நிலையில் மற்ற நாட்களை விட திங்கட்கிழமைகளில்தான் மாரடைப்பு அதிக அளவில் ஏற்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இது தொடர்பான ஆய்வுகள் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி இருந்த நிலையில் , தற்போது அந்த ஆய்வு மீண்டும் கவனம் பெற்று வருகிறது.


பெல்ஃபாஸ்ட் ஹெல்த் மற்றும் சோஷியல் கேர் டிரஸ்ட் மற்றும் ராயல் காலேஜ் ஆஃப் சர்ஜன்ஸ் இன் அயர்லாந்து ஆகியவற்றைச் சேர்ந்த மருத்துவர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.


STEMI எனப்படும் தீவிர மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 10,528 நோயாளிகளின் மருத்துவ பதிவுகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.


2013 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் அயர்லாந்து தீவு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் தரவுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.


STEMI என்பது இதயத்திற்கு இரத்தம் வழங்கும் முக்கிய கரோனரி தமனி முழுவதுமாக அடைக்கப்படும்போது ஏற்படுகிறது. இந்த சமயத்தில் அவசர சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிர் போய்விடும்.


அதேசமயம் இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் 30,000-க்கும் அதிகமானோர் STEMI காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


இந்த சிகிச்சை மூலம் அடைபட்ட கரோனரி தமனியைத் திறந்து, இதயத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்க முடியும்.


பிரச்சனை என்னவெனில், வாரத்தின் தொடக்கத்தில் அதாவது திங்கட்கிழமைகளில் STEMI மாரடைப்பு விகிதம் அதிகரிப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.


திங்கட்கிழமைகளில் இது மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 13% அதிகமாக இருந்தது.


அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் STEMI சதவீதம் அதிகமாக இருந்தது. இப்படி திங்கட்கிழமைகளில் மாரடைப்பு ஏற்படுவதை 'ப்ளூ மண்டே' என்று அழைப்பார்கள். இந்த விளைவுகளுக்கு பின்னால் உள்ள காரணம் இன்னும் முழுயைமாக தெரியவில்லை.



 சுமார் 40 நிமிடங்களில் மீட்பு --  மரக்கிளையில் தொங்கி நீருக்குள் தத்தளித்த பெண்ணை 




மிசோரியின் கன்சாஸ் நகரில் உள்ள இந்தியன் க்ரீக்  சிற்றோடையில் நீரிற்குள் சிக்கி பெண் ஒருவர் தத்தளித்துக் கொண்டிருந்த பெண் சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டார். 


அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின்  கன்சாஸ் நகரில் உள்ள இந்தியன் க்ரீக் சிற்றோடையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


மிசோரியின் கன்சாஸ் நகரில் உள்ள இந்தியன் க்ரீக் மிக வேகமாக நகரும் சிற்றோடை நதியாகும். இந்த சிற்றோடையில் பெண் ஒருவர்  சிக்கிக் கொண்டார். 


சிற்றோடையில் சிக்கிய பெண் நீரில் மூழ்காமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு மரக்கிளையைப் பிடித்துக்கொண்டு பல நிமிடங்களாகப் போராடியுள்ளார். 


நீரிற்குள் பெண் ஒருவர் தத்தளித்துக் கொண்டதை அவதானித்த சிலர், மிசோரியின் தீயணைப்புத் துறை  குழுவினர் 717 W. 101வது டெரஸுக்கு  தகவல் வழங்கி அவர்களை அழைத்தனர். 


சம்பவத்தையடுத்து கான்சஸ் இந்தியக் க்ரீக் சிற்றோடைக்கு விரைந்த தீயணைப்புத் துறை குழுவினர்,  கரையில் இருந்து 50 முதல் 75 அடி உயரத்தில் இருந்த பெண்ணை மீட்க, ஊதப்பட்ட படகை  ஏவினர்.


எனினும் சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, குறித்த பெண்ணை படகில் மீட்டு கரைக்கு அழைத்துச் சென்றனர். மீட்கப்பட்ட பெண்ணிற்கு அங்கு காத்திருந்த ஆம்புலன்சில்  மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 


சிசிக்சையின் பின்னர் குறித்த பெண் நலமாக உள்ளார் என்றும் தீயணைப்புத் துறைக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நீரிற்குள் தத்தளித்துக் கொண்டிருந்த பெண், தனது உயிரைக் காக்க மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.


விலகியது அமெரிக்கா --.யுனெஸ்கோவிலிருந்து 

     


யுனெஸ்கோவிலிருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


இஸ்ரேல் மீதான அதன் சார்பு மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பிற்கு (யுனெஸ்கோ) அமெரிக்கா தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


யுனெஸ்கோவின் தொடர்ச்சியான ஈடுபாடு அமெரிக்காவின் தேசிய நலன்களைப் பூர்த்தி செய்யவில்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டொமி புரூஸ் தெரிவித்துள்ளார்.



பிரபல பாடசாலை ஒன்றின் வகுப்பறையில் 30 பாம்புகுட்டிகள்... ..... !


No comments

Theme images by fpm. Powered by Blogger.