பரீட்சை முறையில் புதிய மாற்றம் -

 பரீட்சை முறையில் புதிய மாற்றம் - !




பரீட்சைமுறையில் புதிய மாற்றம் -






பரீட்சை முறையில் புதிய மாற்றம் -


கல்வியை அளவிடும் பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை (module) கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். 


இதன் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 


2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து, இன்று (23) பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் பிரதமர் இதனைக் கூறினார். 


புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய விளக்கங்கள் இந்த சீர்திருத்தம் குறித்த விளக்கங்களை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ மற்றும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி அசோக டி சில்வா ஆகியோர் ஊடக நிறுவனங்களின் ஊடகவியலாளர்களுக்கு வழங்கினர். 


பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், பல்வேறு முக்கிய விடயங்களை தெளிவுபடுத்தினார். 


கற்றல் மற்றும் மதிப்பீட்டில் மாற்றம் 


"ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராகும் முறைக்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், இந்த தொகுதி முறையில் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் கற்றுக்கொள்ளவும், மதிப்பீடு செய்யப்படவும் வாய்ப்புகள் கிடைக்கின்றன," என்று பிரதமர் விளக்கமளித்தார். 


க.பொ.த சாதாரண தரப் பரீட்சை


புதிய பாடத்திட்ட வழிகாட்டுதலின்படி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2029 ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும். 


அமுலாக்கத்தின் தொடக்க நிலை


2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தத்தின் கீழ், 1 ஆம் வகுப்பு மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே புதிய கல்வித் திட்டம் கற்பிக்கப்படும். இந்த சீர்திருத்தத்தைக் கண்காணிக்க மூன்று ஆண்டுகள் அவகாசம் இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்யப் போதுமான கால அவகாசம் இருப்பதாகவும், சீர்திருத்தம் இறுதியானது என்று கூற முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். மேலும், இந்த சீர்திருத்தம் குறித்த கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைக்க ஊடகவியலாளர்களுக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.


வகுப்பறை மாணவர் எண்ணிக்கை


ஒரு வகுப்பறையில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 25 - 30 ஆகக் குறைக்க வேண்டும் என்பதே இலக்கு. தற்போது 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் வகுப்பறைகள் உள்ளன.


கல்வி அமைச்சர் மற்றும் செயலாளரின் உத்தரவின்படி அதிக மாணவர்களை வகுப்பறைகளுக்குள் உள்வாங்கும் முறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட மாணவர் எண்ணிக்கை மட்டுமே உள்வாங்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார். 


ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 


ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.


அவ்வாறு செய்வதற்கு முன், பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை முதலில் நீக்க வேண்டும் என்றும், இது உடனடி செய்யக்கூடிய காரியமல்ல என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.


புலமைப்பரிசில் பரீட்சையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து, கல்வி முறையின் சுமையைக் குறைப்பதே சீர்திருத்தத்தின் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 


முன்பள்ளிப் பருவ வளர்ச்சி மையங்கள் 


முன்பள்ளி குழந்தைப் பருவ வளர்ச்சி மையங்களை நடத்துவது மற்றும் அங்குள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்த முழுமையான கண்காணிப்பை கல்வி அமைச்சகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த சீர்திருத்தம் பரிந்துரைப்பதாக பிரதமர் கூறினார். 


ஆசிரியர் பயிற்சிக்கு முக்கியத்துவம் 


இச்சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த கல்விப் பிரதி அமைச்சர் மதுர சேனவிரத்ன, ஆசிரியர் பயிற்சிக்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.


முன்மொழியப்பட்ட ஐந்து தூண்களிலும் ஆசிரியர் பயிற்சி உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆசிரியர் பயிற்சிப் பாசறைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 


மேலும், இந்த சீர்திருத்தம் தொடர்பாக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கல்வித் துறை சார்ந்தோர் போன்ற சமூகத்தினர் மத்தியில் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.




அறுபது வயதில் கட்டாய ஓய்வு


அரச சேவையில் உள்ள நான்கு தரங்களைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் வகையில் முந்தைய அரசாங்கத்தின் போது அமைச்சரவை எடுத்த முடிவை செயற்படுத்துவதைத் தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை செல்லுபடியற் றதாக்கி உயர்நீதிமன்றம் நேற்று (17) ஆணை பிறப்பித்தது.


மேலும், இது தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மறுபரிசீலனை செய்யவும் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் மற்றொரு உத்தரவைப் பிறப்பித்தது.


மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு சட்டத்துக்கு முரணா னது என்று அதனை இரத்துச் செய்யக்கோரி சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த பின்னர், நீதியரசர்கள் யசந்த கோதா கொட, ஜனக் டி சில்வா மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. அரச ஊழியர்கள் 60 வயதில் கட்டாய ஓய்வு பெற வேண்டும் என்று முந்தைய அரசாங்கத்தின்போது அமைச்சரவை முடிவு எடுத்திருந்தது.


அந்த முடிவுக்கு எதிராக பொதுச் சேவை ஐக்கிய செவிலியர் சங்கமும் அதன் தலைவருமான வணக்கத்துக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அது தொடர்புடைய தீர்ப்பை செயல்படுத்துவதைத் தடுத்து இந்த இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.


இந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்ட விதம் சட்டத்துக்கு முரணானது என்றும் அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்க மேன்முறை யீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறி, சட்ட மா அதிபர் உயர்நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.


இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வே இந்த உத்தரவை பிறப்பித்தது.


மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் ருவந்த குரே ஆஜரானார். அதே நேரத்தில் சட்ட மா அதிபர் சார்பாக அரச வழக்கறிஞர் நயனதரா பாலபட்டபெந்தி மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி அப்ரு ஆகியோர் ஆஜரானார்கள்




பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து


பெலியத்த - வீரகெட்டிய வீதியில் பெலிகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 16 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை  காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த 16 பாடசாலை மாணவர்களும் சிகிச்சைக்காக பெலிகல்ல, தங்காலை மற்றும் வீரகெட்டிய  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பெலியத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



தாய் மகளுக்கு செய்த கொடூரம்


களுத்துறை, பதுரலிய பிரதேசத்தில் தனது 12 வயது மகளை தகாத தொழில் ஈடுபடுத்திய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் பதுரலிய மொல்காவா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பணியகத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இருந்த கிடைத்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாயிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமி தற்போது கடவத்தை குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

தனது தாய்க்கு தெரிந்தே தன்னுடன் பலரும் தகாத உறவு கொண்டதாகவும், அவர்கள் கொடுத்த பணத்தை தான் தாய்க்கு கொடுத்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.



பரீட்சை முறையில் புதிய மாற்றம் - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.