எமது பாடத்திட்டங்களில் நவீன காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை..... - !
எமது பாடத்திட்டங்களில் நவீன காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை..... - !
எமது பாடத்திட்டங்களில் நவீன காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை..... - !
எமது பாடத்திட்டங்களில் நவீன காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை..... - !
எமது நாட்டில் சுமார் முப்பது வருடங்களுக்கு மேல் பழைய கல்வித் திட்டம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தற்போதும் நடைமுறையில் உள்ளது. உலகின் பல நாடுகள் தங்களின் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வித் திட்டங்களில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டு வரும் நிலையில், நாம் இன்னும் அதே பழைய கல்வித் திட்டத்தில் இருந்து வருகிறோம்.
எனினும், தற்போது கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் எமது கல்வி அமைச்சருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
நேற்று (24) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணம் உட்பட ஏனைய பல பாடசாலைகளில் அதிபர்கள் இல்லாததனால், கல்வித் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதோடு, அதிபர் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது.
அதேபோன்று, அதிபர்களுக்கு மேலதிகமான எந்தக் கொடுப்பணவும் வழங்கப்படுவதில்லை. ஆசிரியர்கள், அதிபர்களை விட அதிக சம்பளம் பெறும் நிலை காணப்படுகிறது. இதனால் அதிபர் பதவியை பொறுப்பேற்க எவரும் தயார் இல்லாத நிலை உருவாகியுள்ளது. எனவே, அவர்களுக்கான விசேடக் கொடுப்பணை வழங்கப்பட வேண்டும். ஜனாதிபதியும் அவருடைய வரவு செலவுத் திட்ட உரையில் இவ்விடத்தை குறிப்பிட்டிருந்தார். எனினும், இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, இவ்விடயம் தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதேபோல், பல்கலைக்கழக பாடத்திட்டங்களிலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்கள் மிகப் பழையவை. அவற்றை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றி, மாணவர்களின் திறனுக்கும் தொழில்நுட்பத் தேவைகளுக்கும் ஏற்றவாறு மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் உரையில் மேலும் தெரிவித்தார்.
வங்கிக் கணக்கு உரிமையாளர்களுக்கு -- வெளியான விசேட அறிவித்தல்...
சுற்றுலாப் பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள் இணையம் வழியாக வங்கிகளை ஏமாற்றும் குழுக்களின் சமீபத்திய இலக்காக மாறிவிட்டதாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுற்றுலா ஹோட்டல்களை முன்பதிவு செய்யக்கூடிய பிரபலமான வலைத்தளங்கள் மூலம் சுற்றுலா ஹோட்டல்களைத் தொடர்புகொள்வதன் மூலம், இந்த மோசடி செய்பவர்கள், அந்த ஹோட்டல்களின் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
பின்னர் அந்த ஹோட்டல்களின் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன்களுக்கு வங்கிகளால் ஒரு முறை மட்டுமே அனுப்பப்படும் OTP எண்களைப் பெறுகிறார்கள் என்று விசாரணைப் பிரிவு சுட்டிக்காட்டுகிறது.
மேலும், அந்த ஹோட்டல்களின் கணக்குகளில் இருந்து அவர்கள் மில்லியன் கணக்கான ரூபாய் பணத்தை எடுக்கிறார்கள் என்று சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் ஆன்லைன் மோசடி புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில் வந்துள்ளதால், மொபைல் போனில் பெறப்பட்ட OTP எண்களை எந்த சூழ்நிலையிலும் வெளியாட்களுக்கு வழங்க வேண்டாம் என்று பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
இலவச விசா திட்டத்தை விரிவுபடுத்துகிறது
சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை இலங்கை அரசு விரிவுபடுத்த முடிவு செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது, சுற்றுலா வருகைகளை அதிகரித்து, வருவாய் பெருக்குவதற்கான முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தற்போது அனுமதி பெற்ற நாடுகளின் பட்டியலையும் விரைவில் வெளியிட உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
கணவனின் நாக்கை கடித்து --- விழுங்கிய மனைவி
இந்தியாவின், கயா மாவட்டத்திலுள்ள கிஜ்ராசராய் பகுதியில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், மனைவி கணவனின் நாக்கை கடித்து விழுங்கிய கோர சம்பவம் பதிவாகியுள்ளது.
கிஜ்ராசராய் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தநிலையில், கடந்த 23 ஆம் திகதி மீண்டும் தகராறு முற்றியது.
இதன்போது, கணவன் மனைவியை கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மனைவி, கணவனைத் தள்ளி வீழ்த்தி, அவரது உடல் மீது அமர்ந்து, அவரது நாக்கை கடித்து துண்டித்து மென்று விழுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
நாக்கு துண்டிக்கப்பட்டதால் கடுமையான வலியில் கணவன் அலறி துடித்தார்.அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அயலவர்கள், மனைவி கணவன் மீது அமர்ந்திருப்பதையும், கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக கணவனை மீட்டு, அருகிலுள்ள அரசு வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.கணவனுக்கு அதிக அளவு இரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருந்துள்ளது.
பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கயாவிலுள்ள மகத் மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக கிஜ்ராசராய் பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு...
நாடு முழுவதும் 82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்த மருந்தகங்கள் தேவையான தரநிலைகளைப் பேணாததால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார்.
இந்த ஆண்டு தொடக்கம் முதல் ஜூலை 18 வரை, தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபைக்கு 2039 உரிமப் புதுப்பிப்பு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
இவற்றில் 1,820 மருந்தகங்களுக்கு புதிய உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், 219 மருந்தகங்களின் உரிமங்கள் புதுப்பிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இவற்றில் 137 மருந்தகங்களில் முழுநேர மருந்தாளுநர்கள் நியமிக்கப்படாததால், அவர்கள் நியமிக்கப்படும் வரை உரிமங்கள் புதுப்பிக்கப்படாது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எமது பாடத்திட்டங்களில் நவீன காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை..... - !
No comments