மாணவர்களுக்கு வரலாறு கற்பிக்கக் கூடாது!

 மாணவர்களுக்கு வரலாறு கற்பிக்கக் கூடாது!




மாணவர்களுக்கு வரலாறு கற்பிக்கக் கூடாது!





 மாணவர்களுக்கு வரலாறு கற்பிக்கக் கூடாது!




 மாணவர்களுக்கு வரலாறு கற்பிக்கக் கூடாது!



பாடசாலை மாணவர்களுக்கு வரலாற்றைக் கற்பிப்பதை நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்திருந்தார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியிருந்தார். 


இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

1600 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நல்லதொரு வரலாறு இல்லை என்றும் அவர் கூறினார்.


இலங்கை தமிழ் மக்களுக்குச் சொந்தமானதா அல்லது சிங்கள மக்களுக்குச் சொந்தமானதா என்பதை வரலாறு கற்பிக்கிறது என்றும், இதை மக்களின் தலையில் திணிக்கக்கூடாது என்றும் அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தினார்.


அதோடு தேவைப்பட்டால் மட்டுமே அந்தப் பாடங்களை விருப்பப் பாடமாகக் கற்பிப்பது போதுமானது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.   



பிரதமருடன் ஐந்து நாடுகள் கலந்துரையாடல்



இலங்கைக்கான பூட்டான் தூதுவர் டஷோ கர்மா ஹமு டோர்ஜி, இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் சேர்ஜி விக்டோரோவ், இலங்கைக்கான ஜோர்தான் தூதுவர் யூசெப் முஸ்தபா அப்தெல்கனி, இலங்கைக்கான எரித்திரியா நாட்டின் தூதுவர் அலம் வோல்டெமரியம், மற்றும் இலங்கைக்கான உஸ்பெகிஸ்தான் தூதுவர் அலிஷர் துக்தயேவ் ஆகியோருடன் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பாராளுமன்ற வளாகத்தில் சந்திப்புகள் நடைபெற்றன.


இந்த சந்திப்பானது பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடனான இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.


பிரதமருடனான இந்த கலந்துரையாடலில் அனைத்து தூதுவர்களையும் வரவேற்ற பிரதமர், பரஸ்பர நலன்கள், நிர்வாகத்தில் ஒத்துழைப்பு, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்தி இந்த கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.


ஆடை உற்பத்தி, கல்வி, கலாச்சாரப் பரிமாற்றம், ஏற்றுமதி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சுற்றுலாத் துறை விரிவாக்கம் ஆகியவை இந்தக் கலந்துரையாடலின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டன.


இந்த நிகழ்வில் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் ருவினி முனதாச ஆகியோர் கலந்துகொண்டனர்



புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வு 


சப்ரகமுவ மாகாணத்தில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலந்துரையாடலொன்று இன்று (26) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.


கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இது நடைபெறவுள்ளது.


அதன்படி, சப்ரகமுவ மாகாண கல்வித் துறையில் பணிபுரியும் நிர்வாக அதிகாரிகள், அனைத்து கோட்டக் கல்வி பணிப்பாளர்கள், ஆசிரியர் பயிற்சி மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் அனைத்து பிராந்திய பொறியியலாளர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளனர்.



 பல அரச வைத்தியசாலைகள் முடங்க வாய்ப்பு!



தரப்படுத்தப்பட்ட வைத்தியர்களுக்கான பணியிடமாற்ற நடவடிக்கையில் நிலவிவரும் சீர்கேடு  காரணமாக அரச வைத்தியசாலைகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது, இந்நிலைமை நீடிக்கும் பட்சத்தில் எதிர்வரும் நாட்களில் பல வைத்தியசாலைகள் முடங்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர்  சமில் விஜேசிங்க இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். 


கொழும்பில் அமைந்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.


நாடு முழுவதும் சுகாதார சேவையை  உயர் தரத்தில் வழங்க அனைத்து அரச வைத்தியசாலைகளுக்கும் அவசியமான வைத்தியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். 


எனினும் நீண்ட காலமாக வைத்தியர்களுக்கான பணியிட மாற்றம் வழங்கப்படாமையால் பல வைத்தியசாலைகளில்  வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.


இதனால் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை சேவைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.  


அந்தவகையில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரப்படுத்தப்பட்ட வைத்தியர்கள் இந்த நாட்டில் உள்ளனர்.  அவர்கள் தற்போது கடும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுதே பணியாற்றி வருகின்றனர். 


இதனால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள பல அரச வைத்தியசாலைகளின் சேவைகள் எதிர்வரும் நாட்களில் முடங்க வாய்ப்புள்ளது.


சுகாதார அமைச்சின் பின்புல அதிகாரம் மற்றும் கட்டுப்பாடுகளற்ற செயற்பாடுகள் காரணமாக சுகாதார சேவை நாளுக்கு நாள் நெருக்கடிக்குள்  தள்ளப்படுகிறது எனவும் குற்றம்சாட்டினார். 



பொம்மைக்குள் வைத்து போதைப்பொருட்களை கடத்திய பெண்


பொம்மை ஒன்றுக்குள் மறைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண் ஒருவரை சீதுவ பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். 


கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த இவர், தனது குழந்தையைப் பயன்படுத்தி இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


சீதுவ ராஜபக்ஷபுர பகுதியில் இன்று (26) காலை பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்தப் பெண் கைது செய்யப்பட்டார். 


குறித்த பகுதியில் உள்ள விடுதிகளை பொலிஸார் சோதனை செய்தபோது, ஒரு அறையில் இருந்து பெண்ணொருவர் குழந்தையுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு பொம்மையை எடுத்துச் சென்று கொண்டிருந்தார். 


அதற்கமைய, சந்தேகத்தின் அடிப்படையில் பொம்மையை பரிசோதித்ததில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், கேரள கஞ்சா மற்றும் ஒரு மின்னணு தராசு ஆகியவற்றை பொலிஸார் கண்டுபிடித்தனர். 


அதற்கமைய, குறித்த பெண்ணின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஐஸ் பெக்கட்டுக்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 


கைது செய்யப்பட்ட பெண் கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர். 


அந்தப் பெண் தனது 8 வயது குழந்தைக்கு பொம்மையைக் கொடுத்து, குழந்தையுடன் கொட்டாஞ்சேனையில் இருந்து சீதுவ பகுதிக்கு போதைப்பொருட்களைக் கொண்டு வந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர். 


சீதுவ பகுதியில் போதைப்பொருட்கள் பொதி செய்யப்பட்டு, மீண்டும் கொட்டாஞ்சேனை பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது. 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நீர்கொழும்பு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக தர்மசேனவின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.




 மாணவர்களுக்கு வரலாறு கற்பிக்கக் கூடாது!






No comments

Theme images by fpm. Powered by Blogger.