4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில்...... - !
4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில்...... - !
4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில்...... - !
மட்டக்களப்பு மாவட்டத்தில் 700 சிறுவர்கள் மற்றும் மேல் மாகாணத்தில் 2019 சிறார்கள் உட்பட நாட்டில் 4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று (13) பழைய கச்சேரி மண்டபத்தில் அபிவிருத்திகுழு தலைவர் அமைச்சர் சுனில் ஹந்திநெத்தி தலைமையில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இல்லாறு குறிப்பிட்டுள்ளார்.
இதில் குறித்த சிறுவர்களின் தாயார் அல்லது தந்தையார் வெளிநாடு சென்றுள்ளது அல்லது சிறுவர்களை விட்டுவிட்டு தாய் அல்லது தந்தைய வேறு திருமணம் முடிப்பது அல்லது போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது போன்ற காரணங்களினால் தாய் தந்தை இல்லாது மட்டக்களப்பில் 700 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
அதேவேளை மேல் மாகாணத்தில் 2019 சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதுடன் இலங்கை பூராகவும் 4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.
எனவே இந்த குழந்தைகளுக்கு அன்பு , பராமரிப்பு, ஆதரவை வழங்குவதற்கும் அவர்களின் கல்வியை பல்வேறு வழியில் தொடர்வதை உறுதி செய்வதற்கு திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்.
இத்துடன் மாவட்டத்தில ஆரையம்பதி பிரதேசத்தில் பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் மாவட்டத்தில் 600 பொலிஸார் கடமையாற்ற வேண்டிய நிலையில் 300 பொலிஸார் மாத்திரமே தற்போது உள்ளனர்.
எனவே இந்த குறைபாட்டை நிலர்த்தி செய்ய 50 பொலிஸார் மாவட்டத்துக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் பாராளுமன்றில் பாரிய திருத்த வேலைகள்...
பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய நாற்பத்தி இரண்டு வருடங்களுக்குப் பின்னர் சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, பாராளுமன்ற கட்டடத்தொகுதியின் கொங்கிரீட் மேல்தளம் மீது காணப்படும் மண் அகற்றப்பட்டு திருத்தவேலைகள் இந்நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அது மாத்திரமன்றி, கூரைகளின் பீலிகள் ,செப்புக் கதவு, பாராளுமன்ற மருத்துவ நிலையம், கழிவறைக் கட்டமைப்பு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அணி அறை என்பவற்றிலும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சிறு அளவிலான திருத்தவேலைகள் மற்றும் பராமரிப்புக்கள் இணைப்புப் பொறியியல் திணைக்களத்தினால் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்திருந்தாலும், பாரிய அளவிலான திருத்த வேலைகள் இலங்கை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு விளக்கமறியல்..
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
காலி மற்றும் எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பணியாற்றிய காலத்தில், சதீஷ் கமகே மற்றொரு நபரின் பெயரில் மூன்று தனியார் வங்கிக் கணக்குகளைத் திறந்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள், பொலிஸ் சேவைகளைப் பெற வந்தவர்கள் மற்றும் பிற குற்றவாளிகளிடமிருந்து சுமார் 1.4 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உப்பு இறக்குமதியில் சிக்கல்
இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நிர்ணயித்த ஜூன் 10 ஆம் திகதி காலக்கெடுவுக்குப் பிறகு நாட்டிற்கு வந்த சுமார் 1,000 உப்பு கொள்கலன்கள் இலங்கை சுங்கத்தில் தேங்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் 400 கொள்கலன்கள் காலக்கெடு முடிந்த பிறகு வந்தவை எனவும், மீதமுள்ள 600 கொள்கலன்கள் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் ஒப்புதல் தாமதத்தால் தேங்கியுள்ளதாகவும் இறக்குமதியாளர்கள் கூறினர். இந்த 400 கொள்கலன்களுக்கு அரசாங்கம் எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை எனவும், இவை மீண்டும் ஏற்றுமதி செய்யப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
சந்தையில் தற்போது போதுமான உப்பு இருப்பு இருப்பதால், நிவாரணம் எதிர்பார்க்கவில்லை எனவும், மறு ஏற்றுமதிக்கு ஆட்சேபனை இல்லை எனவும் இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டனர். இந்த 400 கொள்கலன்களில் உள்ள 10,000 மெட்ரிக் தொன் உப்பு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமதத்திற்கு இறக்குமதியாளர்கள் அல்லது ஏற்றுமதியாளர்கள் காரணமல்ல என்றும், இந்தியாவின் குஜராத் துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்ட உப்பு கொள்கலன்கள் பாதகமான வானிலை காரணமாக ஜூன் 10 ஆம் திகதிக்கு முன் இலங்கையை வந்தடையவில்லை என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சிக்கல் குறித்து அரசாங்கத்தின் மேலதிக நடவடிக்கைகள் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
கண்டி நகரத்தை தூங்கா நகரமாக்கும் சிறப்பு நடவடிக்கை
கண்டி நகரத்தை இரவிலும் செயல்படும் நகரமாக மாற்றி, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டம் இந்த மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்டியில் உள்ள முக்கிய ஹோட்டல்கள், பிற வணிக நிறுவனங்கள், கலாசார மையங்கள், விளையாட்டு போன்ற பல கூறுகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், கண்டியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இரவில் தக்க வைத்துக் கொள்வதாகும் என கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் கண்டியில் உள்ள தலதா வீதி மற்றும் கொட்டுகொடெல்ல வீதியில் கட்டப்பட்ட தற்காலிக கடைகளில் வணிக நிறுவனங்கள் கடைகளை நடத்த அனுமதிக்கும், மேலும் அந்த கடைகள் முதல் இரண்டு வாரங்கள் இலவசமாக வழங்கப்படும்.
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் தெரிவிக்கையில், மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம், மத்திய மாகாண சபை மற்றும் கண்டி மாநகர சபை உட்பட கண்டியில் உள்ள அனைத்து வர்த்தக சங்கங்களின் பங்கேற்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்த திட்டத்திற்கு இணையாக, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் சிறப்பு பேருந்து சேவையும் நள்ளிரவு 12.00 மணி வரை இயங்கும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
(Kandy Breeze Night) என்ற பெயரில் இந்த திட்டம் ஒவ்வொரு வார இறுதியிலும் செயல்படுத்தப்படும் என்று ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில்...... - !
No comments