A/L மாணவர்களுக்கு -- கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!
A/L மாணவர்களுக்கு -- கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!
A/L மாணவர்களுக்கு -- கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
2024 ஆம் ஆண்டு மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 2025 உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், மற்றும் 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு குறிப்பிட்ட காலத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு இந்த நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை காலம் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் மேலும் நீட்டிக்கப்படாது என்று கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வதந்திகளை முறியடித்து -- நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது
சுப்ரீம் செட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கடந்த 13 ஆண்டுகளாக குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காகப் பரப்பப்பட்ட வதந்திகளை முறியடித்து, தங்கள் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனத்தின் தலைவர் ஆர்.எம். மணிவண்ணன் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் முன்னேற்றத்திற்கும் புதுமைத் துறைக்கும் தொடர்ந்து பங்களிப்பதன் மூலம், சர்வதேச தரநிலையிலான வணிக விண்வெளித் துறையில் முன்னணி கூட்டாளியாக நிறுவனம் செயல்படும் என்று தெரிவித்தார்.
அறிக்கையில் மேலும், சரியான அறிவு அல்லது புரிதல் இல்லாமல் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் நபர்களின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் வெற்று அறிக்கைகளுக்கு நிறுவனம் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுப்ரீம் செட் நிறுவனம், தனது நற்பெயரை மேம்படுத்தி, இலங்கையின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிக்க உறுதிபூண்டுள்ளதாகவும் ஆர்.எம். மணிவண்ணன் வலியுறுத்தினார்.
நெடுங்கேணியில் -- கிரவல் அகழ்வு!
வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு உட்பட்ட நெடுங்கேணி கொத்தன்குளம் மாறா இலுப்பை கிராமத்தில் பிரதேசசபையின் அனுமதி பெறாது கிரவல் அகழ்வு இடம்பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் தி. கிருஸ்ணவேணிக்கு தகவல் கிடைத்தததை அடுத்து கிரவல் அகழ்வை குறித்த பிரதேசசபைத் தலைவர் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
இதன்போது பிரதேசசபையின் அனுமதி பெறாது அத்துமீறி கிரவல் அகழ்வு நடைபெற்றதால் அதனை உடன் நிறுத்துமாறு தெரிவித்திருந்தார்.
அத்துடன் இனிவரும் காலத்தில் பிரதேசசபையின் அனுமதியினைப் பெற்று பிரதேசசபையின் அறிவுறுத்தலுக்கு அமைய கிரவல் அகழ்வு மேற்கொள்ளுமாறும் பிரதேசசபைத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
வண்டிகளை இறக்குமதி செய்யத் திட்டம்
அரசு நிறுவனங்களில் நீண்டகாலமாக நிலவும் வாகனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 2,000 கெப் வண்டிகளை இறக்குமதி செய்ய பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
சில அரசுத் துறைகளுக்குக் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக புதிய வாகனங்கள் கிடைக்கவில்லை என்றும், இதன் விளைவாக அதிகாரிகள், குறிப்பாகக் களப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்குக் குறிப்பிடத்தக்கச் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் தளவாட சவால்களை முழுமையாக மதிப்பாய்வு செய்த பின்னர், ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
பிரதேச செயலகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
வெள்ளம் – 10 பேர் உயிரிழப்பு - சீனாவில் கனமழை
சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதோடு 33 பேர் மாயமாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கனமழை காரணமாக,குறித்த பகுதியில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
A/L மாணவர்களுக்கு -- கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!
No comments