32267 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல் தொடர்பான அறிவிப்பு!
32267 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல் தொடர்பான அறிவிப்பு!
32267 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல் தொடர்பான அறிவிப்பு!
அழகுசாதன பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை
இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்படும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
49 வகையான அழகுசாதன பொருட்கள் பயன்படுத்த பொருத்தமற்ற அளவில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் அவற்றில் முக்கியமானவை என அதிகாரசபையின் போட்டித்திறன் மேம்பாட்டு பணிப்பாளர் சமந்த கருணாரத்ன தெரிவித்தார்.
பொருத்தமற்ற அழகுசாதன பொருட்கள் ஒன்லைனில் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனி வாட்சப் இல்லாதவர்களுடனும் - வருகிறது விருந்தினர் அரட்டை வசதி
வாட்சப் செயலி இல்லாதவர்களுடனும் உரையாடும் வகையில் புதிய அம்சம் நடைமுறைக்கு வர உள்ளது.
மெட்டா நிறுவனத்தின் வாட்சப் செயலி பயனர்களை கவர்வதற்காக அவ்வப்போது புதிதாக பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அதே போல், தற்போது வாட்சப் செயலி பயன்படுத்தாதவர்களுடனும் உரையாடும் வகையில் விருந்தினர் அரட்டை(Guest Chat) என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அம்சத்தில், வாட்சப் செயலியை பயன்படுத்தாதவர்களுக்கு ஒரு லிங்க் அனுப்பி அழைப்பு விடுக்க முடியும்.
இந்த லிங்க்கை, SMS ஈமெயில் அல்லது சமூகவலைத்தளங்கள் மூலம் அனுப்ப முடியும்.
இந்த லிங்கை கிளிக் செய்தால், பிரௌசரில் தற்காலிக பக்கம் ஒன்று திறக்கும். அதில் வாட்சப் செயலியை டவுன்லோட் செய்யாமலே உரையாட முடியும்.
ஆனால், இதில் புகைப்படம், வீடியோ, குரல்பதிவு உள்ளிட்ட எந்த கோப்புகளையும் அனுப்ப முடியாது. மேலும், குரல் அல்லது வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியாது.
இந்த உரையாடல் end-to-end encryption செய்யப்பட்டுள்ளதால், இதனை வேறு யாரும் அணுக முடியாது.
தற்போது இந்த அம்சம் உருவாக்கத்தில் உள்ள நிலையில், எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
A/L மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வௌியானது
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்று (07) வெளியிடப்பட்டுள்ளன.
பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான
அல்லது
இல் பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்த மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மற்றும் 2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு குறிப்பிட்ட காலத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்கள் ஓகஸ்ட் 7 முதல் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை ஒன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ் இந்திகா குமார லியனகே குறிப்பிட்டுள்ளார்.
6 மாதங்களில் விமான எரிபொருள் விற்பனை 21 மில்லியன் லிட்டர்கள் அதிகரிப்பு!
நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் விமான எரிபொருள் விற்பனை 21 மில்லியன் லிட்டர்களால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூரா நெத்திகுமார தெரிவித்தார்.
பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் போட்டி விலைகளை பராமரிப்பதன் மூலம் இந்த விற்பனை அதிகரிப்பை எட்ட முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் தனிமையால் பாதிப்பு!
2024 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பாடசாலை சுகாதார கணக்கெடுப்பின் படி, 22.4 வீதமான மாணவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சமூகத்தில் பல்வேறு காரணங்களால் பாடசாலை மாணவர்கள் தற்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் உளநல இயக்குநரக குழாமின் பதில் பணிப்பாளர், விசேட மருத்துவர் லக்மினி மகோதரத்ன தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்ற விசேட மருத்துவர் லக்மினி மகோதரத்ன இதனைத் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டில், இலங்கையில் ஒரு பாடசாலை சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மேலும் எங்கள் பிள்ளைகளின் தரவுகளைப் பார்க்கும்போது, 22.4 வீதமான பிள்ளைகள் தனிமையால் பாதிக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்தார்.
13-17 வயதுடைய இந்த பாடசாலை செல்லும் பிள்ளைகளில் 11.9 வீதமானோர் ஏதோ ஒன்றைப் பற்றிக் கவலைப்படுவதால் இரவில் தூங்குவதில் சிரமப்படுவதாகக் கூறினர்.
சுமார் 18 வீதமானோர் மனச்சோர்வின் அறிகுறிகளைக் காட்டினர்.
7.5 வீதமானோருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை இல்லையெனவும் குறிப்பிட்டார்.
25 வீத பிள்ளைகள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேச யாராவது இருப்பதாகக் கூறினர்.
அதாவது 75 வீதமான பிள்ளைகளுக்கு அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் இல்லை எனவும் தெரிவித்தார்.
_
32267 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல் தொடர்பான அறிவிப்பு!
No comments