சமூக ஊடகத்தில் இலங்கை யுவதிகளின் ஆபாசப் படங்கள் விற்பனை..... - !
சமூக ஊடகத்தில் இலங்கை யுவதிகளின் ஆபாசப் படங்கள் விற்பனை..... - !
சமூக ஊடகத்தில் இலங்கை யுவதிகளின் ஆபாசப் படங்கள் விற்பனை..... - !
சமூக ஊடகத்தில் இலங்கை யுவதிகளின் ஆபாசப் படங்கள் விற்பனை..... - !
டெலிகிராம் சமூக ஊடக கணக்கின் மூலம் பெண்கள் மற்றும் யுவதிகளின், ஆபாசப் படங்கள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சமூக ஊடக செயற்பாட்டாளரான சான்யா ஹேரத் இந்த விடயத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதன்படி, டெலிகிராம் சமூக ஊடக பயனாளர்களுக்குப் படங்களை அனுப்பி பணம் ஈட்டப்படுவதாக அவர் தமது சமூக ஊடக பக்கத்தில் கூறியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த பின்னணியிலேயே, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பிரீத்தி இனோகா ரணசிங்க எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.
அவசரமாக தரையிறக்கப்பட்ட டெல்டா விமானம்
நடுவானில் குலுங்கியதால் பலர் காயமடைந்ததை அடுத்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (30) மினியாபோலிஸ் – செயின்ட் போல் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டி விமான நிலையத்திலிருந்து அந்நாட்டு நேரப்படி மாலை 4:30 மணிக்கு நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி புறப்பட்ட இந்த விமானம் நாடுவானில் குலுங்கியதால் மினியாபோலிஸுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அங்கு அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் காயமடைந்திருந்த 25 பயணிகள் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
விமானத்தில் 275 பயணிகளும் 13 பணியாளர்களும் இருந்துள்ளனர்.
அமெரிக்காவில் மட்டும் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 207 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் பலரும் 48 மணி நேரத்திற்கும் அதிகமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர் என அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓராண்டில் உலகளவில் புறப்படும் சுமார் 3.5 கோடிக்கும் அதிகமான விமானங்களில், 5000 விமானங்கள் தீவிரமாக குலுங்குவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் விமானப் பயணிகளுக்கு ஏற்பட்ட காயங்களில் 40 சதவீதமான காயங்கள் விமானம் குலுங்கியதால் ஏற்பட்டவை என சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் பெற்ற 34 பேர் கைது
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பில் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை 3,022 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த காலகட்டத்தில் 54 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களில் இலங்கை பொலிஸ் துறையைச் சேர்ந்த 10 அதிகாரிகள், நீதி அமைச்சின் ஐந்து அதிகாரிகள், சுகாதார அமைச்சின் இரண்டு அதிகாரிகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களில் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடத்தில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 60 சந்தேக நபர்களுக்கு எதிராக 50 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், குறித்த காலப்பகுதியில் 6 வழக்குகள் நிறைவடைந்துள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இலஞ்சம் பெற்றமை தொடர்பாக 273 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்காக 122,913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது 928 கிலோ ஹெரோயின் போதைப்பொருள், 1,396 கிலோ ஐஸ், 27 கிலோ கொக்கெய்ன், 381 கிலோ ஹாஷிஷ் மற்றும் 11,192 கிலோ கஞ்சா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினர் இணைந்து நடத்திய விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் 948 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடைய 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று துப்பாக்கிகளும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சமூக ஊடகத்தில் இலங்கை யுவதிகளின் ஆபாசப் படங்கள் விற்பனை..... - !
No comments