புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு..... - !
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு..... - !
நேற்று நடைபெறும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு செப்டம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகிழக்கு --- கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள்
கிழக்கு மாகாண முன் பள்ளி ஆசிரியைகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக கொடுப்பனவு வழங்கப்படவில்லை என்ற தகவல் கவலை அளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof) தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் இது விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியைகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவு கடைசியாக மே மாதம் வழங்கப்பட்டதாகவும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை எனவும் முன்பள்ளி ஆசிரியைகள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
இது இந்த ஆசிரியைகளுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும், கிழக்கு மாகாணத்தின் கல்விக்கு பலமான அத்திவாரம் இடுபவர்கள் முன்பள்ளி ஆசிரியைகள் தான்.
இவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை வழங்குவதில் ஏன் இந்த அரசாங்கம் பொடு போக்காக உள்ளது ? கொடுப்பனவுக்கான நிதி இதுவரை விடுவிக்கப்படாததாலேயே கொடுப்பனவு தாமதம் நிலவுவதாக கூறப்படுகின்றது.
கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப் பட்ட முன்பள்ளி நிர்வாகமே இப்போது இயங்குகின்றது.
எனவே ஆளுநரே இந்த விடயத்தில் தலையிட்டு மாதாந்தம் உரிய காலத்தில் கொடுப்பனவு வழங்குவதற்கான நிதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க செப்டம்பரில் இரண்டு வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார், முதலில் நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை (UNGA) கூட்டத்திற்காக அமெரிக்காவிற்கும், அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் உத்தியோபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்
வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, ஜனாதிபதி செப்டம்பர் 23 ஆம் திகதி அமெரிக்காவுக்குப் புறப்பட்டு, 24 ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றுவார், வெளியுறவுக் கொள்கை உட்பட தனது அரசாங்கத்தின் கொள்கைகளை கோடிட்டுக் காட்டுவார். அமர்வுகளின் போது அவர் பல உலகத் தலைவர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நியூயோர்க்கிலிருந்து, ஜனாதிபதி திசாநாயக்க செப்டம்பர் 27 அன்று ஜப்பானின் ஒசாகாவிற்கு எக்ஸ்போ 2025 இல் கலந்து கொள்ளவும், இலங்கை தினத்தில் பங்கேற்கவும் பயணம் செய்வார், அங்கு நாட்டின் கலாச்சாரம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்துவார்.
பிரதமர் ஷிகெரு இஷிபாவின் அழைப்பின் பேரில், ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ பயணம் செப்டம்பர் 28 ஆம் திகதி தொடங்கும்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் பலி!
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐந்து ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசா நகரில் உள்ள அல்ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அல்-ஜசீரா செய்தியாளர் உட்பட ஐந்து ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (10) மாலை காசா நகரில் உள்ள அல்ஷிஃபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு வெளியே ஒரு கூடாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் இறப்பதற்கு சற்று முன்னர், அல்-ஷரீப் என்ற 28 வயதான அல் ஜசீரா செய்தியாளர், அவரது எக்ஸ் தள பக்கத்தில் ”இஸ்ரேல் காசா நகரின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாக” பதிவிட்டுள்ளார்.
இதேவேளை அல் ஜசீரா ஊடகம் ஒரு அறிக்கையில், இந்தக் கொலைகள் "கருத்துச் சுதந்திரத்தின் மீதான மற்றுமொரு பொதுத் தாக்குதல்" என்று குறிப்பிட்டுள்ளது.
தேயிலையில் உருவாக்கப்படவுள்ள புதிய உற்பத்தி
சர்வதேச புகழ்பெற்ற இலங்கைத் தேயிலையில் இருந்து மதுபானம் தயாரிக்கும் புதிய முயற்சியொன்று தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Ceylon Tea Liquor எனும் பெயருடன் குறித்த மதுபானத் தயாரிப்புகள் வெகுவிரைவில் சந்தைக்கு வரவுள்ளது.
களுத்துறையில் உள்ள தனியார் தொழிற்சாலையொன்றே அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
அதன் பிரகாரம் இலங்கைத் தேயிலையின் தரமானதும் சுத்தமானதுமான சாற்றைக் கொண்டு நான்கு வகையான மதுபான உற்பத்திகள் தயாரிக்கப்படவுள்ளது
Ceylon Tea Whisky, Ceylon Tea Gin, Ceylon Tea Vodka, Ceylon Tea Arrack ஆகிய நான்கு வகை மதுபான உற்பத்திகளே இலங்கைத் தேயிலையின் சாற்றில் இருந்து உற்பத்தி செய்து சந்தைப்படுத்தப்படவுள்ளது.
இவற்றில் தேயிலையின் நறுமணம் மற்றும் சுவை என்பன உள்ளடங்கியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியம் முரளிதரன் இன்று கடமையேற்பு --கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக
கிளிநொச்சி மாவட்ட அரச அதிபராக சுப்பிரமணியம் முரளிதரன் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பதில் அரச அதிபராக கடமையாற்றிய சுப்பிரமணியம் முரளிதரன் கடந்த 05.06 2025 அன்று கிளிநொச்சி மாவட்டத்தின் அரச அதிபராக நியமிக்கப்பட்டு அவருக்கான நியமனக் கடிதமும் வழங்கப்பட்டது.
நியமனம் வழங்கப்பட்டதையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தின் அரச அதிபராக சுப்பிரமணியம் முரளிதரன் இன்று காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கொழும்பில் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை ஆரம்பம்!
கொழும்பில் இன்று முதல் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில் மட்டக்குளி முதல் சொய்சாபுர வரை செல்லும் 155 ஆம் இலக்கப் பேருந்துச் சேவை சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.
பின்னர் வட கொழும்பு நகர சபை உறுப்பினர்களின் தீவிர முயற்சியால் ஒரு சில பேருந்துகள் குறித்த பகுதியில் இயக்கப்பட்டன.
எனினும், குறித்த பகுதியில் வாழும் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேருந்து சேவையை, முழுமையாக இயக்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு..... - !
No comments