A/L பரீட்சை திகதி அறிவிப்பு --2025ஆம் ஆண்டுக்கான!
A/L பரீட்சை திகதி அறிவிப்பு --2025ஆம் ஆண்டுக்கான!
A/L பரீட்சை திகதி அறிவிப்பு --2025ஆம் ஆண்டுக்கான!
2025 ஆம் ஆண்டுக்கான A/L பரீட்சை இந்தாண்டு (2025) நவம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
ரணில் இன்று விசேட உரை
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (10) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இளைஞர் சமூகங்கள் தொடர்பான தற்போதைய நெருக்கடி நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி இதன்போது கருத்து வௌியிடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நாவின் 60ஆவது அமர்வில் -- இலங்கை குறித்து புதிய தீர்மானம்
அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானம் முன்வைக்கப்படும் என்று ஐக்கிய இராச்சியமும் கனடாவும் அறிவித்துள்ளன.
இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், 60வது அமர்வில் "இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை" குறித்த தனது அறிக்கையை முன்வைப்பார்.
வரைவுத் திட்டத்தின்படி, அமர்வு தொடங்கும் நாளில், செப்டம்பர் 8 ஆம் திகதியன்று இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
உயர்ஸ்தானிகர் டர்க் ஏற்கனவே செம்மணிப் புதைகுழியைப் பார்வையிட்டுச் சென்றுள்ளமையால், இலங்கை குறித்த தனது அறிக்கையில் முக்கியமாக அந்த புதைகுழி இடம்பெற வாய்ப்புள்ளது.
இதற்கிடையில் புதிய அரசாங்கம் கடந்த செப்டம்பரில் பதவியேற்றதிலிருந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான தீர்மானங்கள் மற்றும் சமர்ப்பிப்புகளில் நிலைப்பாடு மென்மையாக்கப்பட்டுள்ளதாக, இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பொறுப்புக்கூறலை நிவர்த்தி செய்வதற்கான உள்நாட்டு செயல்முறை வலுப்படுத்தப்படுவதையும் அரசியல் தலையீடு இல்லாததையும் உறுதி செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் போல் நடித்தவர் சிக்கினார்
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் செயலாளர் போல் நடித்து மஹரகம பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹெரோயின் வைத்திருந்ததற்காக மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிப்பதற்காக சந்தேக நபர் இவ்வாறு அழைப்பு மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக விசேட விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு,
இலங்கை பொலிஸார் எடுக்கும் எந்தவொரு கைதுகள் அல்லது நடவடிக்கைகளிலும் அமைச்சரோ அல்லது அமைச்சரின் பணிக்குழாமோ தேவையற்ற அழுத்தங்களையோ அல்லது தேவையற்ற தலையீட்டையோ மேற்கொள்ளாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுவை எதிர்த்துப் போராடுவதற்கும், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தற்போது விசேட தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர்-- வைத்தியசாலையில்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது முன்னர் மேற்கொள்ள வேண்டிய திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை என தெரிவிக்கபட்டுள்ளது.
அவர் பல மாதங்களாக கல்லீரல் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அதன்படி, அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் (08) அவரது நலம் விசாரிக்க பல முன்னாள் ஜனாதிபதிகளும் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுகாதார அமைச்சகத்தின் அறிவிப்பு -- மருத்துவர்களின் ஆட்சேர்ப்பில் தொழிற்சங்க தலையீடு
பயிற்சிக்குப் பின்னர் மருத்துவ அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் தலையிட தொழிற்சங்கங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயிற்சிக்குப் பிந்திய நியமனங்கள் என்று அழைக்கப்படும் மருத்துவ சேவையின் முதன்மை நிலைக்கு 1,402 மருத்துவ அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது இணையத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஆட்சேர்ப்பு ஆவணத்திற்கு அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஆட்சேபனை ஆதாரமற்றது என்று விஜயமுனி வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, சட்ட நடைமுறைகளை மீறி பயிற்சிக்குப் பிந்திய நியமனப் பட்டியலை அமைச்சகம் தயாரித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் பேச்சாளர் சமில் விஜேசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
பாரிய சேதம் - மீன்பிடி படகுகளில் தீப்பரவல்
காலி மீன்பிடி துறைமுகத்தில் பயன்படுத்தப்படாத பல மீன்பிடி படகுகளில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினரும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீப்பரவலில் இதுவரை 4 மீன்பிடி படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பரிதாபமாக உயிரிழந்த 16 வயது மாணவி --- யாழ்.போதனா வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மர்மக் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில தினங்களில் குறித்த மாணவி மயக்க நிலையை அடைந்துள்ளார். தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்து வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். கிருமித் தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
A/L பரீட்சை திகதி அறிவிப்பு --2025ஆம் ஆண்டுக்கான!
No comments