பாதுகாப்பு அமைச்சு விசேட வௌிப்படுத்தல்..... !
பாதுகாப்பு அமைச்சு விசேட வௌிப்படுத்தல்..... !
பாதுகாப்பு அமைச்சு விசேட வௌிப்படுத்தல்..... !
ழக்கு ஆசியாவில் இயங்கும் சைபர் குற்ற மையங்களுக்கு இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களை மோசடியாக ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை நடைபெறுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐடி துறையில் வேலை வழங்குவதாகக் கூறி, இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 50,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகைய ஐந்து சைபர் குற்ற மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் போலி வேலை விளம்பரங்கள் பரப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில வாரங்களில், இத்தகைய மோசடி மையங்களுக்கு 11 இலங்கையர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையில் வசிப்பவர்களுக்கு அப்பால், டுபாயில் பணிபுரியும் இலங்கையர்களும் ஐடி வேலை வாய்ப்புகள் என்ற போர்வையில் இம்மையங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, தாய்லாந்து, மியான்மார், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் வேலை வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விளம்பரங்களுக்கு பதிலளிக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
தீவிரமாகப் பரவும் சரும நோய்
மொரட்டுவைப் பிரதேசத்தில் வேகமாகப் பரவி வரும் சரும நோய் ஒன்று குறித்து மருத்துவர்களின் தீவிர கவனம் திரும்பியுள்ளது.
மொரட்டுவைப் பிரதேசத்தில் எகொட உயன சுகாதார மருத்துவர் பிரிவில் கடந்த ஆறு மாத காலத்தினுள் 23 தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த தொழுநோயாளிகளில் ஆறு பேர் சிறுவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
அதற்கு மேலதிகமாக இன்னும் 31 பேர் ஒருவகையான சரும வியாதியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களும் தொழுநோயாளிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் மருத்துவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குறித்த நோயாளிகளுக்கு தொழுநோய் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மொரட்டுவைப் பிரதேசத்தில் வேகமாகப் பரவத் தொடங்கியிருக்கும் குறித்த சரும வியாதி தொடர்பில் சுகாதாரத்துறையினர் தற்போது தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
மின்னேரியாவில் வாகன விபத்து
கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில், மின்னேரியாவின் பட்டுஓய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
மாதுரு ஓயாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து, இன்று (12) அதிகாலை 3 மணியளவில் முன்னால் சென்ற டிப்பர் லொரியுடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக மின்னேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் பொலன்னறுவை, மின்னேரியா மற்றும் ஹிங்குராக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
விபத்து தொடர்பாக மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை வங்கி தலைமையகத்தில் --- தீ விபத்து
கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமையகத்தில் நேற்றிரவு(11) தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இலங்கை வங்கி தலைமையகத்தின் ஐந்தாவது மாடியில் நேற்றிரவு 8.30 மணியளவில் குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தின் போது ஐந்தாவது மாடியில் ஊழியர்கள் சிலர் பணியாற்றிக் கொண்டிருந்த போதும் எதுவித காயங்களும் இன்றி அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட தீயணைப்புப் படையினர் களத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
5 மாதங்களில் --- 32 சிறுமிகள் கர்ப்பம்
நாட்டின் இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் பதின்ம வயதைச் சேர்ந்த 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வருடாந்தம் வெளியிடும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான புள்ளிவிபரங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 53 சிறுமிகள் கர்ப்பம் தரித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், மாணவர்களுக்கு முறையான பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என்றும் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு விசேட வௌிப்படுத்தல்..... !
No comments