பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை..... - !

பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை..... - !





பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை..... - !




 


பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை..... - !



சிறுவர்கள் மற்றும் பெண்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பேஸ்புக் மூலம் அடையாளம் காணும் நபர்களுக்கு வழங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இந்த வேண்டுக்கோளை மிரிஹான பொலிஸ் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரியும் தலைமை பொலிஸ் ஆய்வாளருமான வாருணி கேஷலா போகாவத்த விடுத்துள்ளார்.


பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட ஆண்கள் பல பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளம் பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை எடுத்து, அவற்றை இணையத்தில் வெளியிடவுள்ளதாக மிரட்டி பணம் பறிப்பதாக தெரிய வந்துள்ளது.


இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் முறைப்பாடுகளை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தை விசாரித்த பின்னர் கப்பம் கோரிய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


நேற்று முன்தினம் புறக்கோடை பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் பொலிஸ் ஆய்வாளர் இவ்வாறு கூறியுள்ளார்.


“பெண்கள் பேஸ்புக்கில் சந்திக்கும் ஆண்கள் குறித்து குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் உங்களிடம் அந்தரங்க புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைக் கேட்டால், அவற்றை ஒருபோதும் அனுப்ப வேண்டாம்.


நீங்கள் அறியாமலேயே சிக்கலில் மாட்டிக் கொள்ளலாம். இதுபோன்ற சிக்கலில் மாட்டிக்கொள்ளும் பல பெண்கள், மற்றும் சிறுவர்கள் மிரிஹான சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு வருகிறார்கள். ஒன்லைன் குற்றவாளிகளுக்கு பலியாகாதீர்கள்” என வாருணி கேஷலா மேலும் தெரிவித்துள்ளார்.



வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!



இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த தொடருந்து கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. 


முன்பதாக, முன்பதிவு செய்யப்பட இருக்கை தொடருந்து சேவைகளில் இருந்து விலகுவதற்கு தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தனர். 


எனினும், தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.



திங்கட்கிழமைகளில் மூடப்படும்  --- அனைத்து அருங்காட்சியகங்கள்



கொழும்பு தேசிய அருங்காட்சியகம் உட்பட, அதன் கீழுள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் மூடப்படுமென, தேசிய அருங்காட்சியக திணைக்களம் தெரிவித்துள்ளது. 


பராமரிப்பு பணிகளுக்காக, அவை மூடப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 


அத்துடன், சுதந்திர தினம், தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு, தொழிலாளர் தினம் போன்ற விசேட விடுமுறை தினங்களில் அருங்காட்சியகங்கள் மூடப்படும். 


ஏனைய அனைத்து நாட்களிலும், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, அனைத்து அருங்காட்சியகங்களும் பொது மக்களின் பார்வைக்காக திறந்திருக்குமெனவும், தேசிய அருங்காட்சியக திணைக்களம் தெரிவித்துள்ளது.



வேலைநிறுத்தம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது...

    


இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டிருந்த ரயில் கட்டுப்பாட்டாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. 


முன்பதாக, முன்பதிவு செய்யப்பட இருக்கை ரயில் சேவைகளில் இருந்து விலகுவதற்கு ரயில் கட்டுப்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தனர். 


எனினும், தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.



பசுபிக் கடற்கரையில் 1,000 அடி ஆழிப்பேரலை ஏற்படும் அபாயம்...

    


அமெரிக்காவின் பசுபிக் பெருங்கடல் கடற்கரையில், காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலத்தில் (Cascadia Subduction Zone) ஏற்படக்கூடிய பாரிய நிலநடுக்கம் 1,000 அடி உயர ஆழிப்பேரலையை (மெகா-சுனாமி) ஏற்படலாமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விர்ஜினியா டெக் பல்கலைக்கழக ஆய்வு, அடுத்த 50 ஆண்டுகளில் 8.0 மெக்னிடியூட் அல்லது அதற்கு மேற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட 15% வாய்ப்பு உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இந்த நிலநடுக்கம் கடற்கரை பகுதிகளை 6.5 அடி வரை திடீரென தாழ்த்தி, வெள்ளப் பரப்பை விரிவாக்கி, சியாட்டில், போர்ட்லேண்ட் உள்ளிட்ட நகரங்களை நிமிடங்களில் மூழ்கடிக்கக் கூடிய பேரலைகளை உருவாக்கலாம். இது 30,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும், 170,000-க்கும் மேற்பட்ட கட்டமைப்புகளுக்கு சேதத்தையும், 81 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தலாம் என ஆய்வு எச்சரிக்கிறது.


வொஷிங்டன், வடக்கு ஒரேகான், வடக்கு கலிபோர்னியா ஆகியவை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக உள்ளன. அலாஸ்கா மற்றும் ஹவாய் ஆகியவையும் நிலநடுக்க மற்றும் எரிமலை அபாயங்கள் காரணமாக ஆபத்தில் உள்ளன.


ஆய்வு, ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள், வலுவான கட்டமைப்புகள், மற்றும் அவசர தயார்நிலை பயிற்சிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.



போக்குவரத்துக்காக புதிய பாலம் அமைக்க கோரிக்கை


முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாயையும், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையையும் இணைக்கும் பாலத்தை அமைக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இந்நிலையில் குறித்த பாலத்தினை அமைப்பதற்கு எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவுத்திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் உறுதியளித்துள்ளார்.


ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (13) இடம்பெற்ற சந்திப்பில் ரவிகரன் எம்.பி. குறித்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்த நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு உறுயளித்துள்ளார்.


மேலும் இப்பாலம் அமைக்கப்பட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான போக்குவரத்து இலகுவாக்கப்படுவதுடன், சுற்றுலாத்துறையும் மேம்படும் என இதன்போது ரவிகரன் எம்.பி. ஜனாதிபதிக்கு இந்தப் பாலத்தை அமைக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியதையடுத்து, இப்பாலத்தை அமைப்பதற்கு அடுத்த வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது




பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை..... - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.