பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம்...


பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம்...



National school Graduate Teaching interview results Released 2021(2025) – Interview List



முழு விபரங்கள் கீழே 








அரசின் புதிய திட்டம்; எந்தவொரு நாட்டினருக்கும் விசா அவசியமில்லை

இலங்கைக்கு வருகை தருகின்ற தங்கள் நாட்டினருக்கு விசா இல்லாத வசதியை மேலும் பல நாடுகள் கோரியுள்ளதாக வெளியான செய்திகளையடுத்து, அமைச்சரவை சமீபத்தில் அங்கீகரித்த 40 நாடுகளின் பட்டியலைத் தவிர வேறு எந்நாட்டையும் பரிசீலிக்க தற்போது எந்தத் திட்டமும் இல்லையென்று பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.


குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை பொதுப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வருகின்றது. இது தொடர்பாக அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்கள் தெரிவிக்கையில்இ '40 நாடுகளுக்கு இலவச விசா வசதியை வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நாம் சமர்ப்பித்தோம்.

இந்தப் பட்டியல் சட்டமா அதிபரால் (GA) அங்கீகரிக்கப்படல் வேண்டும், இதன் பிறகு அது நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படும். தற்போது, இந்த வசதியை மேலும் பல நாடுகளுக்கு விரிவுபடுத்தும் திட்டம் இல்லை.'

இலங்கை முன்பு 07 நாடுகளுக்கு இலவச விசா வசதியை வழங்கியிருந்தது. சமீபத்திய கொள்கையின் முடிவில் மேலும் 40 நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் இப்போது சட்ட மா அதிபரின் ஒப்புதலுக்காக இவை நிலுவையில் உள்ளது.

ஒப்புதல் அளிக்கப்பட்டதும், அது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நாடுகளின் குடிமக்கள் இலவச சுற்றுலா விசாவிற்கு ஒன்லைனில் (Online) விண்ணப்பிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேவேளை இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் சுற்றுலா மூலமாக கிடைக்கும் வருமானத்தின் அடிப்படையில் நாடுகளை மதிப்பிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் 40 நாடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளரான மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ சமீபத்தில் தெரிவித்தார்.

அதனை தொகுக்கும் போது எந்நாட்டிற்கும் சிறப்பு சலுகை வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். தற்போது, அந்நிய செலாவணி வருவாயின் முக்கிய இயக்கியாக இலங்கை தனது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.

நுழைவுத் தேவைகளை தளர்த்துதல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் உலக சந்தைகளில் பாதுகாப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இடமாக நாட்டை ஊக்குவிப்பதன் மூலமாக அதிக பார்வையாளர்களை ஈர்க்க அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.  



அஞ்சல் சேவை உத்தியோகத்தர் வேலை வாய்ப்பு (திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்) - 2025

රට පුරා තැපැල් සේවා නිලධාරී තනතුර සඳහා බඳවා ගැනීමේ අයදුම්පත (විවෘත විභාගය) 2025

Calling Applications for - Open Competitive Examinations for Recruitment to the post of Grade III Postal Service Officer



GOVERNMENT JOB VACANCIES

Calling Applications for Open Competitive Examinations for Recruitment to the post of Grade III Postal Service Officer – 2025

Department of Posts, Sri Lanka

01.  Postal Service Officer (PSO)

▪️Qualification: GCE.A/L & ICT Course
▪️Age Limit: 18 – 30
▪️No of Vacancies: 600
▪️Online Application



Full Details

Tamil

English

Sinhala

Online Application

Closing Date - 15.08.2025




இலங்கையின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததை விட வேகமாக உள்ளது! – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு


"இலங்கையின் பொருளாதார மீட்சி எதிர்பார்த்ததை விட தற்போது வேகமாக முன்னேறி வருவதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் பொருளாதார மீட்சி ஆரம்பத்தில் நாம் எதிர்பார்த்ததை விடவும் தற்போது வேகமாக முன்னேறி வருகின்றது.

ஒரு நாடு நெருக்கடியால் பாதிக்கப்பட்டவுடன், உற்பத்தி இழப்பை மீட்டெடுக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும். எங்கள் விடயத்தில், மூன்று ஆண்டுகளுக்குள் அந்த நிலையை அடைந்துள்ளோம்.

அடுத்த ஆண்டுக்குள், வேலைவாய்ப்பு, வறுமைக் குறைப்பு, வருமானம் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்ற முக்கிய துறைகளில் இலங்கை நெருக்கடிக்கு முந்தைய நிலைகளை விட சிறப்பாக இருக்கும். 

அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், நாம் முன்பு இருந்த நிலையை அடைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்."




தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு அரசாங்கத்துக்கு பெரும் சவால் - பிமல் ரத்நாயக்க


தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

நானுஓயா ரயில் நிலையத்தின் கள விஜயத்தில் பங்கேற்ற பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சம்பள விடயம் தொடர்பில் தோட்டத் தொழில்கள் அமைச்சகமும் நிதி அமைச்சகமும் தொடர்ந்து தலையிட்டு வருவதாகவும் மேலும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் இலாபகரமான டிப்போக்களுக்கு போனஸ் வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 



ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு


மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிச் செல்லும் கடுகதி ரயிலில் மோதி நேற்று (14) இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - பெலியத்த ரயில் மார்க்கத்திலேயே இச் சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்தில் உயிரிழந்தவர் யார் என்று இதுவரை வெளியிடப்படாத நிலையில், பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள்பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது


பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனம்...


                                                                            ***

No comments

Theme images by fpm. Powered by Blogger.