புதிய திட்டம் ---- புத்தகம், செய்தித்தாள் வாசிக்கும் மாணவர்களுக்கு இனி கூடுதல் மதிப்பெண்!

புதிய திட்டம்  ----  புத்தகம், செய்தித்தாள் வாசிக்கும் மாணவர்களுக்கு இனி கூடுதல் மதிப்பெண்!





புதிய திட்டம்  ----  புத்தகம், செய்தித்தாள் வாசிக்கும் மாணவர்களுக்கு இனி கூடுதல் மதிப்பெண்!






புதிய திட்டம்  ----  புத்தகம், செய்தித்தாள் வாசிக்கும் மாணவர்களுக்கு இனி கூடுதல் மதிப்பெண்!



புத்தகம் மற்றும் பத்திரிகை வாசிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக கருணை மதிப்பெண்கள் வழங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது தொழிநுட்பத்தின் அதீத பயன்பாடு காரணமாக பலரிடமும் வாசிப்பு பழக்கம் குறைந்து கொண்டே வருகின்றது.


இந்நிலையில் கேரள அரசு, மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன்படிஇ வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க கேரள அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.


இதற்காக பள்ளி நேரத்தில் தனியான வகுப்பு ஒதுக்கப்படும் என்று கேரள கல்வித்துறை அமைச்சரான சிவன் குட்டி தெரிவித்துள்ளார். இதில் 01 முதல் 04 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாராந்திர உணர்வுகள் மூலமாக வாசிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் 05 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பத்திரிகை வாசிப்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.


இத்திட்டத்தை கொண்டுவரும் முன்பாக ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி வழங்கப்படுமென்றும் கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.



அரச ஊழியர்களுக்கு கற்பிக்கப்படவுள்ள இலவச பாடநெறி....

    

கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, அரச ஊழியர்களுக்காக இலவச சைகை மொழி சான்றிதழ் பாடநெறியை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.


அதன்படி, முதல் கட்டமாக, கொழும்பு மாவட்டத்தில் உள்ள அமைச்சகங்கள், திணைக்களங்கள் மற்றும் மாவட்ட செயலகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 68 அரசு அதிகாரிகளுக்கு இரண்டு குழுக்களின் கீழ் பாடநெறி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த திட்டம் கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலாவின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தால் செயல்படுத்தப்படுகிறது.


இது ஒரு தத்துவார்த்த மற்றும் நடைமுறை பாடநெறியாகும், இது 24 நாட்களில் நடத்தப்படுகிறது மற்றும் மொத்த பாடநெறி காலம் 60 மணி நேரம் ஆகும்.


2026 ஆம் ஆண்டில், முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் 25 பாடநெறிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் 625 அதிகாரிகளுக்கு ஒரு குழுவிற்கு 25 அதிகாரிகள் என இலவச பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இரத்தினக்கல் ஏற்றுமதியை மேம்படுத்த நடவடிக்கை - பிரதமர் ஹரிணி...

   

இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பில் சர்வதேசப் புகழ் பெற்றிருந்த போதிலும், எதிர்பார்த்த அளவிற்கு அதன் ஏற்றுமதி வளர்ச்சி அடையவில்லை என்றும், எனவே சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையை வெற்றி கொள்ளும் வகையில் நிலையான கொள்கைகளை வகுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.


இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்குடன், "Gem City Ratnapura- 2025" எனும் தலைப்பில் இன்று (15), 16, மற்றும் 17 ஆகிய மூன்று நாட்கள் பெல்மடுல்ல கிராண்ட் சில்வரே விடுதியில் நடைபெறும் சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி 2025-இன் தொடக்க விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.


தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, இலங்கையை உலகின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையாக நிலைநிறுத்தும் நோக்குடன், பல்வேறு வகையான இரத்தினக்கற்கள், ஆபரணங்கள், அகழ்வு மற்றும் பதப்படுத்தும் முறைகள், ஆய்வக சேவைகள், களப்பயிற்சி மற்றும் கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.பிரதமர் மேலும் கூறியதாவது:


"இலங்கை இரத்தினக்கற்கள் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றிருக்கின்றன. அத்துடன், இந்த இரத்தினக்கற்களில் பெரும் பகுதி இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்தே கிடைக்கின்றன. எனினும், இரத்தினபுரிக்கு அந்த கௌரவம் கிடைத்துள்ளதா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உயர்தர இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினக்கல் துறை தேசிய பொருளாதாரத்திற்கு அளிக்கும் பங்களிப்பு மிகப் பெரியது.


இருப்பினும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையிலிருந்து உள்ளூர் ஏற்றுமதி வருமானத்திற்கு நாம் அளிக்கக்கூடிய உச்சபட்ச பங்களிப்பினை இன்னும் அடையவில்லை. பொருத்தமற்ற கொள்கைகளே இத்துறையின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வருகின்றன. ஆகையால், இரத்தினக்கல் துறையின் இலக்கு ஏற்றுமதி வருமானத்தை ஈட்டத் தேவையான நிலையான கொள்கைகளை உருவாக்க எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படும்.


இக்கண்காட்சியில் கலந்துகொண்டிருக்கும் அமெரிக்கா, இந்தியா, சீனா, சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, அரசாங்கத்தின் கொள்கைகளில் நம்பிக்கை வைத்து எதிர்காலத்திலும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் ஏற்றுமதி நடவடிக்கைகளில் இணைந்து கொள்ளுமாறு அந்நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.


இந்நிகழ்வில் உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி,


இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் ஏற்றுமதி மூலம் எதிர்பார்க்கப்படும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் என்ற கடினமான இலக்கை அடைவதற்கு, வைரக்கல் துறையின் வளர்ச்சி மற்றும் பட்டை தீட்டப்படாத இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்வதற்கான புதிய சட்டங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல புதிய கொள்கைகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.


இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் முதலாவது அரச வர்த்தக இணையதளமாகிய www.gemcityratnapura.com என்ற இணையதளம், GOV PAY என்ற புதிய வசதியுடன் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில், ஸ்ரீபாதஸ்தானதிபதி பென்கமுவே தம்மதின்ன மஹா நாயக்க தேரர், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் அதிகாரிகளும், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர உட்படப் பல அரச அதிகாரிகளும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் வர்த்தகர்கள் உட்படப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.



லொஹான் ரத்வத்தேயின் மறைவு இந்த 

    

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இன்று காலை காலமான கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.


முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, 57 வயதில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.


லொஹான் ரத்வத்தேவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அவரது மறைவு நாட்டிற்கு, குறிப்பாக கண்டி மாவட்டத்திற்கு பேரிழப்பு என தெரிவித்தார்.


“அவர் எங்களுக்கு மிகவும் நெருக்கமான அரசியல்வாதி. அவர் மிகச் சிறந்த நண்பராக இருந்தார்,” என மகிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, லொஹான் ரத்வத்தே ராஜபக்ஷ குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என குறிப்பிட்டார்.


“அவர் மகிந்த ராஜபக்ஷவின் சகோதரராகவும், எங்கள் குடும்பத்தின் நெருங்கிய அரசியல் தோழராகவும் பணியாற்றினார். லொஹான் ரத்வத்தே, நாட்டிற்கும் கண்டி மாவட்டத்திற்கும் பல பணிகளை ஆற்றியவர். எங்கள் குடும்பத்தின் சார்பாகவும், அரசியல் கட்சியின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்,” என நாமல் ராஜபக்ஷ, மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு அஞ்சலி செலுத்தினார்.



கொழும்பு பங்குச் சந்தையின் மற்றுமொரு மைல்கல்


இலங்கை பங்கு சந்தை, வரலாற்றில் மற்றொரு மைல்கல்லைக் இன்று (15) கடந்துள்ளது. 


கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் இன்று (15) முதன்முறையாக 20,000 புள்ளிகளைத் கடந்துள்ளது. 


அதன்படி, அனைத்துப் பங்கு விலைக் சுட்டெண் 289.69 புள்ளிகள் உயர்ந்து 20,218.36 புள்ளிகளாக பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. 


இதற்கு முன்னர் கடந்த ஓகஸ்ட் 4ஆம் திகதி 20,000 புள்ளிகளை எட்டியிருந்த போதிலும், அன்றைய தினம் முடிவில் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. 


இன்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு 9.54 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.



புதிய திட்டம்  ----  புத்தகம், செய்தித்தாள் வாசிக்கும் மாணவர்களுக்கு இனி கூடுதல் மதிப்பெண்!



No comments

Theme images by fpm. Powered by Blogger.