20 வயதில் பெரும் கோடிஸ்வரர் ---- ஒற்றை முடிவால் மொத்தமும் இழந்தவரின் இன்றைய நிலை.!
20 வயதில் பெரும் கோடிஸ்வரர் ---- ஒற்றை முடிவால் மொத்தமும் இழந்தவரின் இன்றைய நிலை.!
20 வயதில் பெரும் கோடிஸ்வரர் ---- ஒற்றை முடிவால் மொத்தமும் இழந்தவரின் இன்றைய நிலை.!
சாதிக்க வேண்டுமென்ற வெறியுடன் சில தொழில் முயற்சிகளை முன்னெடுத்து, அதில் எதுவும் கைக்கொடுக்காத நிலையில் அமெரிக்காவுக்கு சென்றவர் தனது 20 வயதுகளிலேயே பெரும் கோடீஸ்வரராக மாறினார். வேலைஇ வருவாய் என்று அமெரிக்காவில் கனவு வாழ்க்கை வாழ்ந்த இவர் அப்போது 40 பில்லியன் அமெரிக்க டொலர் சந்தை மதிப்பு கொண்ட MicroStrategy என்ற நிறுவனத்தில் பணியாற்றினார்.
ஆனால் 2000 ஆண்டு காலகட்டத்தில் கணினி உலகம் பெரும் ஆட்டம் காணத் தொடங்கியதையடுத்து வேலை, வருவாய் என்று மொத்தமும் இழந்த நிலையில், 2003 ஆம் ஆண்டு வெறும் 30,000 டொலர் தொகையுடன் வேறு வழியின்றி இந்தியாவுக்கு திரும்பினார்.
அவர் தான் பின்னர் Shaadi.com என்ற நிறுவனத்தை ஆரம்பித்துஇ மீண்டும் சாதித்தவரான அனுபம் மிட்டல். Shaadi.com நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ 2,500 கோடி என்றே கூறப்படுகின்றது. உலகில் மிகப்பெரிய மேட்ரிமோனியல் இணையதளங்களில் ஒன்று Shaadi.com மட்டுமின்றி, உலக அளவில் 35 மில்லியன் பயனர்கள் இதில் உள்ளனர். இந்தியாவின் முதல் மேட்ரிமோனியல் இணையதளம் Shaadi.com ஆகும்.
அத்தோடு, 50 லட்சம் திருமணங்களும்Shaadi.com நிறுவனத்தால் நடந்துள்ளது. பொதுவாக தோல்வி கண்டு அஞ்சாத அனுபம் மிட்டல் தீவிர ஆலோசனைக்குப் பின்னர் எடுத்த ஒற்றை முடிவு அவரை மீண்டும் சாதனை புரிய வைத்துள்ளது.
இந்தியா திரும்பும்போது தன்னிடம் எஞ்சிய 30,000 டொலர் தொகையில் 25,000 டொலரை செலவிட்டு இணையத்தள டொமைன் ஒன்றை வாங்கினார். மீதமிருக்கும் 5,000 டொலர் தொகையில் தொழிலை முன்னெடுக்கவும் இவர் முடிவு செய்தார். ஆனால், அந்த முடிவுக்கு அவரது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் விமர்சகர்கள் அவரைப் பொறுப்பற்றவர் என்றனர். தம்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக குறிப்பிட்ட அனுபம் மிட்டல், பணமல்ல தம்மால் மீண்டுவர முடியும் என்பதை நிரூபிக்கவே இம்முயற்சி என்றார்.
Shaadi.com பெரும் வெற்றியை எட்டியது. மில்லியன் கணக்கானோர் இதில் பயனர்களாகினர். இன்று அனுபம் மிட்டலின் சொத்து மதிப்பு ரூ 185 கோடி என்று தெரிவிக்கப்படுகிறது.
இணக்கப்பாடின்றி முடிவடைந்த அமைதிப் பேச்சுவார்த்தை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இடையில் இடம்பெற்ற அமைதி பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை நேரப்படி இன்று (16) அதிகாலை அலாஸ்காவில் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதன்போது இரு உலக வல்லரசுகளும் சுமார் 3 மணி நேரம் கலந்துரையாடி இருந்த நிலையில் எவ்வித உடன்படிக்கைகளும் எட்டப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இருப்பினும், பேச்சுவார்த்தைக்குப் பிறகு எந்த பொது அறிக்கையையும் இரண்டு நாடுகளும் வெளியிடப்படவில்லை.
இந்த முக்கியமான சந்திப்புக்குப் பிறகு ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை முன்னதாக அறிவித்திருந்த போதிலும், இரண்டு ஜனாதிபதிகளும் எவ்வித அறிவிப்புகளை வௌியிடாமல் வௌியேறியிருந்தனர்.
எவ்வாறாயினும் இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி அழைக்கப்பட்டிருக்கவில்லை.
எனினும் இந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், உக்ரைன் ஜனாதிபதியும், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ஐரோப்பிய தலைவர்களும் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு தமது வலுவான ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SLC இருபதுக்கு 20 லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நடத்தும் இருபதுக்கு 20 லீக் (SLC T20 League) தொடரின் இறுதிப் போட்டி இன்று (16) இடம்பெறவுள்ளது.
எஸ்.எல்.சி கிரீன்ஸ் மற்றும் எஸ்.எல்.சி கிறேஸ் ஆகிய அணிகள் இந்த இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
இந்தப் போட்டியானது கொழும்பு எஸ்.எஸ்.சி விளையாட்டரங்கில் பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
புளூஸ், கிரீன்ஸ் மற்றும் கிறேஸ் ஆகிய 3 அணிகளும் இந்த தொடரின் முதல் சுற்றில் விளையாடியிருந்தன.
இந்த அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில் அதில் கமிந்து மெண்டிஸ் தலைமையிலான கிரீன்ஸ் அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்றதுடன் ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்திருந்தது.
அதனடிப்படையில் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெற்றதுள்ளது.
இரண்டாம் இடத்தில் உள்ள சரித் அசலங்க தலைமையிலான கிறேஸ் அணி 2 போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தது.
இதன்படி குறித்த இரண்டு அணிகளும் இன்றைய இறுதிப் போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் விபத்து
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற MI-17 ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இரு விமானிகள் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
வடக்கு பாகிஸ்தானில் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போஷாக்கு நிறைந்த பாரம்பரிய உணவு உற்பத்திகளை அனைவரும் ஊக்கவிக்க வேண்டும்
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தினால் ஊக்கமளிக்கப்படும் சஞ்சீவி போஷாக்கு உணவு உற்பத்திகளை மக்களுக்கிடையே அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஏறாவூர்ப் பறறுப் பிரதேச செயலகப் பிரிவின் செங்கலடி நகரத்தில் இடம்பெற்றது
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் மாவட்ட நிருவாக அலுவலர் கே. நிர்மலா, தலைமையில் செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் பெண் தொழில் முயற்சியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட உள்ளுர் பாரம்பரிய போஷாக்கு உணவுப் பொருள்கள் விற்பனையும் இடம்பெற்றது.
நிகழ்வைத் துவக்கி வைத்து தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அருணாளினி,
நலிவுற்ற குடும்பங்களை முதன்மைத் தெரிவாகக் கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தையும் வாழ்வையும் செழிமையாக்கும் நோக்கில் விழுது நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.
அமரர் சாந்தி சஞ்சிதானத்தின் இந்தக் கனவு காலங்கள் கடந்தும் உயிர்ப்புடன் உள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். அவர் ஆரம்பித்து வைத்த நலிவுற்ற மக்களின் நலன் சார்ந்த திட்டங்களால் இன்றுவரை நன்மையடைந்து கொண்டிருப்போர் ஏராளம்.
நலிவுற்ற பெண்களிலிருந்து பெண் தொழில் முயற்றியாளர்கள் சஞ்சீவி இயற்கை போஷாக்கு உணவு உற்பத்திகளை மேற்கொண்டு ஆரோக்கியத்திற்கு வழிகோலுவதுடன் வருமானத்தையும் ஈட்டிக் கொள்ள முடியும்.
உள்ளுரில் கிடைக்கக் கூடிய போஷாக்கு நிறைந்த பாரம்பரிய உணவு வகைகள்தான் ஆரோக்கியமானவை.
அவற்றை மீண்டும் ஊக்குவிக்க வேண்டும். சிறந்த ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு முக்கியம். இதன் மூலம் எதிர்கால சந்ததிiயும் ஆரோக்கியமுள்ளதாக உருவாக்க முடியும். உள்ளுரில் இலாபமாகக் கிடைக்கக் கூடிய அத்தகைய உணவு உற்பத்திச் செயற்பாடுகளை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்.” என்றார்.
இந்நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே. தனபாலசிங்கம், முன்னாள் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தரும் பயிற்றுவிப்பாளருமான சட்டத்தரணி அன்பழகன் குரூஸ், சுகாதாரத் திணைக்கள அலுவலர்கள், விவசாயத்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அலுவலர்கள், பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவன சமூக ஒருங்கிணைப்பாளர் கே. லக்ஷானா, முன்னாள் திட்ட அலுவலர் புண்ணியமூர்த்தி ஜீவிதா, சமூக மட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்கள், பெண் தொழில் முயற்சியாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், இளந்தளிர் ஈகுவாலிற்றி கழக சிறார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
தன்னார்வத்; தொண்டு நிறுவனமான விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பின்தங்கிய, அடிமட்ட கிராம மக்களின் கல்வி, சுகாதாரம், போஷாக்கு, தொழில்வாய்ப்பு, பெண்கள் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், நல்லாட்சி, சகவாழ்வு போன்ற விடயங்களில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் செய்து வருவதாகவும், ஓரங்கட்டப்பட்ட சமூக மக்களுக்காக நீடித்து நிலைக்கும் வாழ்வாதார விவசாய செயல்திட்டங்களைத் துவங்கியுள்ளதாகவும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி இந்துமதி ஹரிஹரதாமோதரன் தெரிவித்தார்.
20 வயதில் பெரும் கோடிஸ்வரர் ---- ஒற்றை முடிவால் மொத்தமும் இழந்தவரின் இன்றைய நிலை.!
No comments