புதிய கல்வி சீர்திருத்ததில் --- ஆசிரியர் பயிற்சி ஆரம்பம்
புதிய கல்வி சீர்திருத்ததில் : ஆசிரியர் பயிற்சி ஆரம்பம்
கல்வி சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் நோக்கில், மூன்றாம் தவணை தொடங்குவதற்கு முன்பு ஆசிரியர் பயிற்சி திட்டத்தை முடிக்க கல்வி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
மாகாண மட்டத்தில் இந்தப் பயிற்சித் திட்டத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் தேவையான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
தற்போது, தேசிய கல்வி நிறுவனம் பயிற்சியாளர்களுக்கான பயிற்சியைத் தொடங்கியுள்ளது.
முதல் கட்டத்தில், முதல் தர ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்கான பயிற்சியாளர்கள் குழுவிற்கு பயிற்சி அளித்த பிறகு, பயிற்சித் திட்டம் மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும்.
அதன் பிறகு, ஆறாம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் இரண்டாம் கட்டத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சீர்திருத்தங்களுக்கு ஏற்ப, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான புதிய பாட அலகுகளை (தொகுதிகள்) அச்சிடுவதையும் தொடங்கியுள்ளது.
புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப, பாரம்பரிய பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக இந்தப் புதிய அலகுகள் அறிமுகப்படுத்தப்படும்.
தொழில்நுட்பக் கோளாறால் கரையோர ரயில் சேவை பாதிப்பு
களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ரயிலில் வாதுவ அருகே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடலோரப் பாதை சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுப்பு
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் இராணுவ முகாமுக்குள் நுழைந்த இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, முத்தையன்கட்டு குளத்தில் உயிரிழந்த இளைஞரின் மரணத்திற்கு இராணுவமே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனையடுத்து, இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருவதுடன், மூன்று இராணுவ சிப்பாய்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மரணத்திற்கு நீதி கோரி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் நடைபெறும் என தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ அடக்குமுறைகள், அதிகப்படியான இராணுவப் பிரசன்னம் ஆகியவற்றுக்கு எதிராக ஹர்த்தால் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், அது பலரின் நலனுக்காக காலை நேரத்தில் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பல விமான சேவைகள் ரத்து!
கனடா விமான நிலையத்தில் பணிப்பெண்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 600-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான எயார் கனடா நிறுவனத்தில் பணிபுரிகின்ற பணிப்பெண்கள் தங்களதுசம்பள உயர்வு, விமானத்தில் செலவழித்த நேரத்துக்கு ஏற்றாற்போல் இழப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!
2025 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் இன்று (18) ஆரம்பமாகியுள்ளது.
அதற்கமைய, மூன்றாம் தவணை கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஒக்டோபர் 17 ஆம் திகதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17 ஆம் திகதி முதல் டிசெம்பர் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக்குரிய கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் இம்மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி சீர்திருத்ததில் --- ஆசிரியர் பயிற்சி ஆரம்பம்
***
No comments