முக்கிய அறிவிப்பு..... - !

  முக்கிய அறிவிப்பு..... - !





முக்கிய அறிவிப்பு..... - !




 

  முக்கிய அறிவிப்பு..... - !



பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) உச்சநேரங்களில் பயணிகளின் வசதியை உறுதிப்படுத்தவும், நெரிசலை திறம்பட நிர்வகிக்கவும் புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. 


அதன்படி, ஒவ்வொரு வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, புறப்பாட்டு மண்டபத்திற்கு வருகையாளர்களுக்கான நுழைவு சீட்டுகள் வழங்கப்படாது என அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. 


இந்த நடவடிக்கை பயணிகள் மற்றும் விமான நிலைய பணியாளர்களின் வசதியை உறுதிப்படுத்துவதற்காக அமல்படுத்தப்படுகிறது என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் தெரிவித்துள்ளது.



கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை



கடுவெல, கொரதொட, துன்ஹதஹேன பகுதியில் வீதி ஒன்றில் இருந்து இன்று (18) மீட்கப்பட்ட துப்பாக்கிகள் போலியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  


இதன்போது மூன்று T-56 துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் T-56 மகசின் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.


பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது குறித்த துப்பாக்கிகள் போலியானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் T-56 மகசின் போலியானது அல்ல என தெரிவிக்கப்படுகிறது.


வீதியில் கிடந்த பொதி ஒன்றை சோதனையிட்ட போது இந்த போலித் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


இந்த போலித் துப்பாக்கிகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



விமான நிலையத்துக்கு செல்பவர்களுக்கான --   ஓர் முக்கிய அறிவிப்பு



பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமானசேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


அதன்படி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இரவு 10 மணிமுதல் நள்ளிரவு வரையான காலப்பகுதியினுள், பயணிகளுடன் வருபவர்கள், விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுவரை 3000 முறைப்பாடுகள்



புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரின் தவறான நடத்தைகள், குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்வதற்காக 0718598888 என்ற வட்ஸ் அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியிருந்தார்.


இந்நிலையில் நேற்று வரை பொதுமக்களிடமிருந்து குறித்த எண்ணுக்கு கிட்டத்தட்ட 3000 முறைப்பாடுகள் அனுப்பப்பட்டுள்ளன. 


இந்த வட்ஸ் அப் இலக்கம் கடந்த 13ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வளவு குறுகிய காலத்துக்குள் பொதுமக்களிடமிருந்து இத்தனை முறைப்பாடுகள் அனுப்பப்பட்டுள்ளன. 


பொலிஸார் தொடர்பான பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தகவல் தொடர்பான உண்மைத்தன்மையை அறிய ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான உதயகுமார வுட்லர் தெரிவித்தார். 



இளம் அரசியல் தலைவர்கள் - இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு



தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர்கள், அவர்களின் பணியாள் உறுப்பினர்கள் மற்றும் KAS (Konrad Adenauer Stiftung) மன்றத்தின் பிரதிநிதிகள் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் பிரதிநிதிகளைச் சந்தித்ததுடன், பாராளுமன்றத்தையும் பார்வையிட்டனர்.


மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியவைச் சேர்ந்த இளம் அரசியல் தலைவர்களுக்கும் இடையில் கடந்த 07ஆம் திகதி சந்திப்பு இடம்பெற்றது.


பல்வேறு அரசியல், இன, மதப் பின்னணியிலிருந்து வந்த பெண்களால் பத்தாவது பாராளுமன்றத்தில் அதிகளவான பெண் பிரதிநிதித்துவம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த ஒன்றியத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார். மேலும், பெண்களை வலுப்படுத்தல், அவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் தொந்தரவுகளை ஒழித்தல், பாலின சமத்துவத்தை முன்னிறுத்துதல், சட்டமியற்றல் மற்றும் கொள்கைத் தயாரிப்புக்கள் குறித்து ஒன்றியம் அதிக கவனம் செலுத்துவதாக அவர் எடுத்துக் கூறினார்.


அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான விடயங்களில் அவர்களுக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவது, பின்தங்கிய பெண்களுக்கு ஆதரவளிப்பது மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி தொழிற் பயிற்சிகளை வழங்குவதில் ஒன்றியத்தின் முக்கியத்துவத்தையும் தலைவர் மேலும் விளக்கினார்.


ஒன்றியத்தின் ஏனைய உறுப்பினர்களும் தமது கருத்துக்களைப் பரிமாறினர். நட்பு ரீதியில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இளம் அரசியல் தலைவர்கள் பாராளுமன்றத்தைப் பார்வையிட்டதுடன், சபை அமர்வுகளையும் அவதானித்தனர்.


இச்சந்திப்பில் ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் சமன்மலி குணசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களான (கலாநிதி) கௌஷல்யா ஆரியரத்ன, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, சதுரி கங்கானி, சட்டத்தரணி நிலூஷா லக்மாலி கமகே, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சட்டத்தரணி அனுஷ்கா திலகரத்ன, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, கிருஷ்ணன் கலைச்செல்வி, தீப்தி வாசலகே, ஒஷானி உமங்கா, அம்பிகா சாமிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்



காஸா யுத்தத்தை நிறுத்த திரண்ட இஸ்ரேல் மக்கள்



காஸா யுத்தத்தை நிறுத்துமாறு கோரி, ஆயிரக்கணக்கான இஸ்ரேல் மக்கள் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள், உடனடி போர் நிறுத்தத்தையும், காஸாவில் நடைபெறும் மனிதாபிமான சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டுமெனவும் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்ப்பாட்டக்காரர்கள் “இனி போர் வேண்டாம்” எனும் வாசகங்களைக் கொண்ட பதாகைகள் ஏந்தியவாறு வீதிகளில் பேரணியாக திரண்டனர்.


இஸ்ரேல் அரசு மீது கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூகக்குழுக்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, காஸாவிற்கு செல்லும் உதவிகளை இஸ்ரேல் நிறுத்தி வைத்துள்ளதால், அங்கு பட்டினி மற்றும் போசணைக் குறைபாடுகள் காரணமாக நூற்றுக் கணக்கானோர் மரணிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




  முக்கிய அறிவிப்பு..... - !

No comments

Theme images by fpm. Powered by Blogger.