பாடசாலையில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை........ - !

பாடசாலையில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை........ - !





பாடசாலையில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை........ - !




 


பாடசாலையில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை........ - !


தென்கொரியாவில் பாடசாலை மாணவ - மாணவியரிடையே கையடக்கத் தொலைபேசி பாவனை அதிகரித்து வருவதால், போதைப்பொருள் பயன்பாடு, குற்றச்சம்பவங்கள், ஒன்லைன் விளையாட்டுகள் போன்ற பல்வேறு வலைகளில் மாணவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.


இப் பிரச்சினையை நிவர்த்தி செய்ய மாணவர்களிடையே கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்நிலையில் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இங் பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை செய்யும் மசோதாவை நேற்று (27) பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தார். 


இம் மசோதாவுக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் ஆதரவு தெரிவித்ததையடுத்து, தென்கொரியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் (மார்ச் 2026) பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆண்களுக்கு மட்டுமே என்ற வர்த்தமானி திருத்தம்...

      


இலங்கையில் தொடருந்து நிலைய அதிபர்கள் பதவிக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பில் ஆண்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ள வர்த்தமானி, திருத்தத்துக்காக அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


இந்த வர்த்தமானியை எதிர்த்து அயேஷானி ஜயவர்தன மற்றும் சுரேஷ் விதுஷா ஆகிய இரு பெண்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.


உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு 

மனுதாரர்கள், இதனால் தகுதியான பெண்கள் அந்த பதவிக்கு விண்ணப்பிக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் வாய்ப்பு இழந்ததாக குற்றம் சாட்டினர்.


அதேநேரம், இந்த வர்த்தமானியினால் தங்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதெனவும், பெண்களும் விண்ணப்பிக்கக்கூடிய விதமாக அறிவிப்பை திருத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரியுள்ளனர். 


இந்தநிலையில், குறித்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையிலிருந்த அரச சட்டத்தரணி நயனதாரா பாலபட்டபெந்தி, வர்த்தமானி அறிவித்தலை திருத்தம் செய்ய பரிந்துரைத்து அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


நீதிமன்றம் இந்த மனுவை எதிர்வரும் அக்டோபர் 30 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.



 பிரிக்கப்படவுள்ள இலங்கை மின்சார சபை....

    


இலங்கை மின்சார சபையை நான்கு நிறுவனங்களாக பிரித்து நிர்வகிக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


தேசிய மக்கள் சக்தி கட்சியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் இலங்கை மின்சார சபை எந்தக் கட்டத்திலும் பகுதி பகுதியாகப் பிரிக்கப்படவோ, தனியார் மயப்படுத்தப்படமாட்டாது என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.


எனினும் தற்போதைய நிலையில் மின்சார சபையின் நிர்வாகம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை இலகுபடுத்தும் பொருட்டு மின்சார சபை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, நான்கு நிறுவனங்களாக செயற்படவுள்ளது.


குறித்த நான்கு நிறுவனங்களும் ஒட்டுமொத்தப் பங்குகளும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நான்கு தனியார் நிறுவனங்களாக தற்போதைக்கு இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



மாணவர், பத்திரிகையாளர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு....

     


வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான விசாவழங்கலில் அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


அதன்படி, மாணவர்கள் விசாவின் மூலம் வெளிநாட்டவர்கள் 4 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் தங்க முடியாது. அதேபோல, வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் 240 நாட்கள் மட்டுமே அமெரிக்காவில் தங்க முடியும்.


மேலும் விண்ணப்பித்தால் 240 நாட்கள் கூடுதலாக தங்கலாம். அதேவேளையில், சீன பத்திரிகையாளர்களுக்கு 90 நாட்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


மிக நீண்ட காலமாக, கடந்த ஆட்சியாளர்கள் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பிற விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் கிட்டத்தட்ட காலவரையின்றி தங்க அனுமதித்துள்ளன.


இது பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது. வரி செலுத்தும் மக்களின் பணத்தை கணக்கிட முடியாத அளவிற்கு வீணாக்குகிறது. இது அமெரிக்க குடிமக்களுக்கு பாதகமாக உள்ளது, இவ்வாறு குறிப்பிட்டுள்ளது


பொதுவாக, மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான விசா வழங்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. 



சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை ...

    


நான் விளையாட ஆரம்பித்தால் சீனா அழிந்துபோகும் என சீனாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இது தொடர்பாக ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் உரையாற்றியபோது தெரிவித்துள்ளதாவது,


“அவர்களிடம் சில அட்டைகள் இருக்கலாம். ஆனால் எங்களிடம் மிகச் சிறந்த அட்டைகள் உள்ளன. நான் அவற்றைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் அவற்றை வைத்து விளையாடினால், சீனா அழிந்துபோகும். அதனால்தான் இப்போது அதைச் செய்யவில்லை.


அமெரிக்காவுக்கு அரிய மண் தாதுக்களின் விநியோகத்தை நிறுத்தும் வகையில் சீனா நடவடிக்கை எடுக்குமானால், அதற்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். “அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் சீனாவுக்கு 200 சதவீதம் வரி விதிக்கத் தயங்கமாட்டேன்,” என்றார்.


எனினும் இரண்டு நாடுகளுக்கும் இடையே உறவு மாறாத வகையில் எதிர்காலத்தில் சீனாவுக்குச் செல்வதற்கான திட்டத்தையும் ட்ரம்ப் வெளிப்படுத்தினார்.


“இந்த ஆண்டு இறுதியில் அல்லது அதற்குப் பிறகு சீனாவுக்குச் செல்வேன். இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த உறவுகள் உருவாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




பாடசாலையில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்த தடை........ - !


No comments

Theme images by fpm. Powered by Blogger.