நாடளாவிய ரீதியில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல்..... - !
நாடளாவிய ரீதியில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல்..... - !
நாடளாவிய ரீதியில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல்..... - !
TEACHER VACANCIES UPDATE
நாடளாவிய ரீதியில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல் தொடர்பான அறிவிப்பு!
දිවයින පුරා ගුරු පුරප්පාඩු පිරවීම පිළිබඳ දැනුම්දීමක්!
Notice on Filling Teacher Vacancies islandwide - Ministry of Education
Full Details :
வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதம் ஏற்படுவதற்குக் காரணமான உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நான்கு வழக்குகளின் நீதித்துறை நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
எனவே, நீதித்துறை நடவடிக்கைகள் முடிந்தவுடன் உடனடியாக வர்த்தமானி வெளியிடப்படும் என்றும், பட்டதாரிகள், ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.
வேலையற்ற பட்டதாரிகள் கூட்டு சங்கத்தின் பிரதிநிதிகளிடையே கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இவ்வாறு கூறினார்.
ஏற்கனவே அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளபடி, தேவைக்கேற்ப ஏனைய பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை திருத்துவதற்கும், வயது வரம்பை நீட்டிப்பதற்கும், தற்போதுள்ள அனைத்து ஆசிரியர் வெற்றிடங்களுக்கு உடனடியாக ஆட்சேர்ப்பு செய்வதற்கும் இதன்போது இணக்கம் ஏற்பட்டுள்ளது.
விரைவில் பேருந்துகளில் பணம் செலுத்தும் டிஜிட்டல் அட்டை
பேருந்துகளில் பணம் செலுத்துவதற்குத் தேவையான டிஜிட்டல் அட்டையை ஒரு வருடத்திற்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ( Prasanna Gunasena) தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஏற்கனவே கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், இது தொடர்பாக பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்தகைய டிஜிட்டல் அட்டை இல்லாததால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் வருமான இழப்பு ஏற்படும்.
இதனால் இலங்கை போக்குவரத்து சபையால் தினசரி இழக்கப்படும் வருமானம் ஒரு கோடி ரூபாயை நெருங்கும் என்றும் அவர் கூறினார்.
கிராமங்களுக்குப் போக்குவரத்தைக் கொண்டு வரும் நோக்கில் மாவட்ட அளவில் 15 பல்நோக்கு போக்குவரத்து முனையங்கள் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கண்டி பல்நோக்கு போக்குவரத்து மையமும் 2027 செப்டம்பரில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இதன்போது தெரிவித்திருந்தார்.
அனைத்து அரச நிறுவனங்களிலும், கைரேகை ஸ்கேனர்களை நிறுவ நடவடிக்கை...
தற்போது கைரேகை ஸ்கேனர் இல்லாத அனைத்து அரச நிறுவனங்களிலும், கைரேகை ஸ்கேனர்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
பல அரச அலுவலகங்களில் ஏற்கனவே கைரேகை ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், இதுவரை இந்த முறையைப் சிலர் பின்பற்றுவதில்லையென அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன கூறியுள்ளார்.
கைரேயை ஸ்கேனர்களை அனைத்து நிறுவனங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும், அது ஊழியர்களுக்கும், நிர்வாகத்திற்கும் ஒரு வசதியான செயல்முறை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சமீபத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்தக் கொடுப்பனவுகள் துல்லியமாக வழங்கப்படுவதை உறுதி செய்வது மிக முக்கியமானது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரச ஊழியர்களுக்கு, அரச நிதியில் ஊதியம் வழங்கப்படுவதால், வேதனம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் முறையாகக் கணக்கிடப்பட வேண்டும் என அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன வலியுறுத்தியுள்ளார்
ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்...
அரச ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகை ஒக்டோபர் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை ஓய்வூதிய திணைக்களம் (Department of Pensions) தெரிவித்துள்ளது.
சைபர் தாக்குதலின் பின்னர் அரச ஊழியர்களின் தரவுக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாகவே ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சுமார் 04 மாதங்களாக சில அரச ஊழியர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவை முழுமையாக செலுத்த முடியாமல் போயுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சாமிந்த ஹெட்டியாராச்சி (Chaminda Hettiarachchi) தெரிவித்தார்.
அத்துடன் இந்த வருடம் ஓய்வு பெற்ற மிகச் சிலர் எவ்வித ஓய்வூதியக் கொடுப்பனவையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஓகஸ்ட் மாதத்திற்கான சிரேஷ்ட பிரஜைகள் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அண்மையில் தெரிவித்திருந்தது.
599,730 பயனாளர்களுக்கான கொடுப்பனவிற்காக அரசாங்கத்தினால் 2,900 மில்லியன் ரூபா வரையான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான தகவல்...
அரச ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகை ஒக்டோபர் மாத இறுதிக்குள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை ஓய்வூதிய திணைக்களம் (Department of Pensions) தெரிவித்துள்ளது.
சைபர் தாக்குதலின் பின்னர் அரச ஊழியர்களின் தரவுக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாகவே ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சுமார் 04 மாதங்களாக சில அரச ஊழியர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவை முழுமையாக செலுத்த முடியாமல் போயுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சாமிந்த ஹெட்டியாராச்சி (Chaminda Hettiarachchi) தெரிவித்தார்.
அத்துடன் இந்த வருடம் ஓய்வு பெற்ற மிகச் சிலர் எவ்வித ஓய்வூதியக் கொடுப்பனவையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஓகஸ்ட் மாதத்திற்கான சிரேஷ்ட பிரஜைகள் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அண்மையில் தெரிவித்திருந்தது.
599,730 பயனாளர்களுக்கான கொடுப்பனவிற்காக அரசாங்கத்தினால் 2,900 மில்லியன் ரூபா வரையான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
நாடளாவிய ரீதியில் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரல்..... - !
No comments