பல மாகாணங்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!
பல மாகாணங்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!
பல மாகாணங்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இன்று இரவு 11 மணி வரை அமுலில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
45 வீதம் விபத்துக்களை குறைக்கலாம் --- ஆசனப்பட்டி அணிவதால்
ஆசனப்பட்டி அணிவதால் விபத்து, காயங்களை சுமார் 45 வீதம் குறைக்க முடியும் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
ஆசனப்பட்டி அணிவது பாதுகாப்பாக வாகனம் செலுத்துவதற்கும் பயணிகள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பிற்கும் பெரிதும் உதவுகிறது என அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.
பொதுமக்களைப் பாதுகாப்பான போக்குவரத்திற்குப் படிப்படியாகப் பழக்கப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று அவர் கூறினார்.
01/08/2025 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் பின்புற பயணிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
கடந்த மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து வீதிகளிலும் பயணிக்கும் பேருந்து ஓட்டுநர்கள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல், நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு பறந்த கடிதம்
தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு தலைவரின் பதவி நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பது குறித்து சபாநாயகருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நினைவூட்டலை அனுப்பியுள்ளது.
இந்த விடயத்தை தீவிரமாகக் கருத்தில் கொண்டு, தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவுக்கு முழுமையாக செயற்படத் தேவையான தலைவர் ஒருவரை பரிந்துரைக்குமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அரசியலமைப்பு பேரவையின்மீது, பொதுமக்களின் நம்பிக்கையை கவனத்தில் கொண்டு இந்த விடயம் கையாளப்படவேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன இவ்வருட ஆரம்பத்தில் பதவி விலகியதில் இருந்து இதுவரை அந்தப் பதவியை நிரப்ப எந்த நியமனமும் செய்யப்படவில்லை.
எனவே தலைவர் இல்லாத நிலையில், ஆணைக்குழுவின் செயற்பாடுகள் கடினமாகியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருள் தொடர்பாக -- விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ரஷ்யாவில் உள்ள எண்ணெய்யில் இருந்து சுத்திகரிக்கப்பட்டு பெறப்படும் டீசலுக்கு தடை விதிப்பது தொடர்பில் ஐரோப்பா பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக உலகளாவிய ரீதியில் டீசல் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் அது இலங்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை எட்டியுள்ளது.
அதேவேளை, உலக சந்தையில் வீடிஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.33 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
மேலும், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.67 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.08 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
தென்னை பயிரிட நடவடிக்கை...
வடக்கில் 16,000 ஏக்கர் நிலத்தில் தென்னை பயிரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளம், நீர்வளம் மற்றும் கடல்வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய நிலங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தேங்காய் சாகுபடி முறையாகப் பராமரிக்கப்பட்டால், எதிர்காலத்தில் அந்தப் பகுதியின் பொருளாதாரம் செழிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.
பல மாகாணங்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!
No comments