மூடப்படவுள்ள பாடசாலைகள்!

மூடப்படவுள்ள  பாடசாலைகள்!




மூடப்படவுள்ள  பாடசாலைகள்!






மூடப்படவுள்ள  பாடசாலைகள்!



மூடப்படவுள்ள  பாடசாலைகள்!



வட மாகாணத்தில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.


கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தலைமையில் நேற்று (03.08.2025) சனிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி சீர்திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வி மறுசீரமைப்பு ஏன் தேவை என்பது தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.


அதில் கல்வியின் நிலைமை, பாடசாலையின் நிலைமை, அவற்றின் மூலம் ஏற்படவுள்ள மாற்றம் என்ன என்பது தொடர்பாகவும் குறிப்பிட்டு கல்வி சீர்திருத்தம் முக்கிய தேவையனெ தெளிவாக வலியுறுத்தியிருந்தார்.


வட மாகாணமே இலங்கையில் அதிக வறுமைக்கு உட்பட்ட பிரதேசமாக இருக்கிறது.

இலங்கையில் வறுமையான மாவட்டமாக மொனராகலை மாவட்டம் இருந்த நிலையில் தற்போது அது முல்லைத்தீவு மாவட்டமாக மாறியிருக்கிறது.


இதனால் வறுமையுடன் இணைத்து கல்வி தொடர்பான பிரச்சினையையும் அணுக வேண்டியுள்ளது. வறுமையிருக்கும் இடங்களிலெல்லாம் கல்வி பிரச்சினையும் காணப்படுகிறது.


கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ள இடங்களில் வறுமை அதிகரித்துள்ளது. மேலும் சமூக சீரழிவுகள், குற்றசெயல்கள் அதிகரித்து காணப்படுகிறது. இன்று யாழ் மாவட்டத்திலும் இந்த சவால்கள் காணப்படுகிறது.


இந்த சவால்களில் இருந்து மீண்டு புதிய யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. இதனால் எமது அரசாங்கத்தில் கல்விக்கே அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்ற கொள்கை பின்பற்றப்படுகின்றது.


இதற்கமைவாகவே கல்வி புலத்தை வெளிப்படுத்தி ஹரிணி அமரசூரியவுக்கு கல்வி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 


10 பிள்ளைகள் கல்வி கற்கும் 35 பாடசாலைகள் காணப்படுவதாகவும் 11 – 20 பிள்ளைகள் கல்வி கற்கும் 64 பாடசாலைகளும் 20 – 50 பிள்ளைகள் கற்கும் 171 பாடசாலைகள் இருப்பதாகவும் 50 – 100 பிள்ளைகள் கற்கும் 174 பாடசாலைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


இதில் 40 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் எவ்வித கல்வி நடவடிக்கைகளும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் எமது கல்வியில் மறுசீரமைப்பு தேவை என்பது உணரப்படுகின்றது. இது தொடர்பில் அனைவரும் புரிதலுடன் செயற்பட்டால் சமூகத்துக்கு நல்ல செய்தியை கொண்டு செல்ல முடியுமென எதிர்பார்க்கிறேன்  என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.



 விமான நிலையத்தில் இன்று முதல் திறக்கப்படவுள்ள சாரதி அனுமதிப்பத்திர கருமபீடம்



நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். 


வேரஹெரவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் இதுவரை பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இந்தப் பணிகள் தொடங்கப்படும் என்று அவர் கூறினார். 


நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினர் பெரும்பாலும் கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது அருகிலுள்ள இடங்களில் இருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து தங்கள் பயணங்களின் போது தாங்களாகவே சாரதிகளாக செயல்படுவதாகவும், இதற்காக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மற்றும் இலகுரக வாகனங்கள் பயன்படுத்தப்படுவது கவனிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் கூறினார். 


இருப்பினும், புதிய முறையின் கீழ், வெளிநாட்டினருக்கு இலகுரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி அனுமதிப்பத்திரம் மட்டுமே வழங்கப்படும் என்றும், கனரக வாகனங்கள் அல்லது முச்சக்கர வண்டிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படாது என்றும் அவர் மேலும் கூறினார்.



சுற்றுலா சென்ற மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி 



உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பொலன்னறுவையில் இருந்து நுவரெலியாவிற்கு கல்வி சுற்றுலா வந்த மாணவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  செய்தியாளர் தெரிவித்தார்.


குறித்த மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, தலைசுற்று, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, அவர்கள் நுவரெலியா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


நேற்று, சுமார் 25 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிலர் சிகிச்சைகளுக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.


இன்னும் சில மாணவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.



வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா - உடப்புசல்லாவ வீதி



 நுவரெலியாவில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அனரத்தம் ஏற்பட்டுள்ளது .


இன்றைய தினம் (03) காலை முதல் பெய்து வரும் கடுமையான மழையினாலே இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறிப்பாக நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் வெள்ள நீர் வீதியினை கடந்து  செல்வதனால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது


இதனால் போக்குவரத்தை  மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


இதில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் செல்வோரும் கடுமையாக பாதித்து வருகின்றனர் .


இப்பகுதியில் கால்வாய்கள் முறையாக புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படாததன் காரணமாக அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர் .



 குறைவடைந்த மரக்கறி விலை 



நாட்டில் தற்போது மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளமையால் தாம் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


இதன்படி, பூசணிக்காய் ஒரு கிலோகிராம் 35 ரூபா முதல் 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.


அத்துடன் தற்போது சிறுபோக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லுக்கான உரிய விலை நிர்ணயிக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.


இதனால் தமக்கு இலாபம் பெற முடியவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 


இந்தநிலையில், விவசாயிகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் எனவும் அதற்காக கால அவகாசம் தருமாறும் விவசாய அமைச்சர் கே.டி லால் காந்த (K. D. Lalkantha) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



மூடப்படவுள்ள  பாடசாலைகள்!

No comments

Theme images by fpm. Powered by Blogger.