தலைமை ஆசிரியரை மாற்ற --- விஷம் கலந்த சம்பவம்!

தலைமை ஆசிரியரை மாற்ற ---  விஷம் கலந்த சம்பவம்!





தலைமை ஆசிரியரை மாற்ற ---  விஷம் கலந்த சம்பவம்!





தலைமை ஆசிரியரை மாற்ற ---  விஷம் கலந்த சம்பவம்!



தலைமை ஆசிரியரை மாற்ற ---  விஷம் கலந்த சம்பவம்!



பெங்களூர்: கர்நாடகாவில் பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்து சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் சுலைமான் என்கிற இஸ்லாமியரை பணியிடம் மாற்றம் செய்வதற்காக, அங்குள்ள இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தண்ணீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்துள்ளனர். இதில் 11 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம், ஹூள்ளிக்கட்டி பகுதியில் அரசுப்பள்ளி இயங்கி வருகிறது. அங்கு சுலைமான் கொரிநாயக் என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். கிட்டத்தட்ட 13 வருடங்களாக அவர் அங்கு பணியாற்றி வருகிறார். உள்ளூர் கிராம மக்களிடம் அவர் மிகவும் நல்ல உறவில் இருக்கிறார்.


 முஸ்லிம் தலைமை ஆசிரியர் 


அதேநேரத்தில் அவர் முஸ்லிம் என்பதால், இந்து மற்றும் வலதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராக இருந்துள்ளனர். அதனால் தலைமை ஆசிரியர் சுலைமானை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று இந்து இயக்கங்கள் கூறி வந்துள்ளனர். ஆனால், அவரின் சிறப்பான சேவை காரணமாக பணியிடமாற்றம் செய்யவில்லை.


இதையடுத்து அவருக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்தி, பள்ளியில் இருந்து மாற்றி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதன்தொடர்ச்சியாக பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விஷத்தை கலந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சாகர் பாட்டீல், கிருஷ்ணா மதர், மகன்கௌடா பாட்டீல் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


 பூச்சி மருந்து கலப்பு  இது குறித்து பெலகாவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பீமாசங்கர் குலேத் கூறுகையில், "கடந்த ஜூலை 20 ஆம் தேதி அந்தப் பள்ளியைச் சேர்ந்த 11 மாணவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையின்போது தண்ணீர் தொட்டியில் ஒரு வித நாற்றம் வந்தது. அதற்குள்ளேயே ஒரு பூச்சி மருந்தின் பாட்டிலும் கண்டறியப்பட்டது.



 முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு...

   


தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம், சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


சங்கத்தின் பிரதான செயலாளர் எல். ரோஹண பெரேரா கூறுகையில், இவ்வாறு சுற்றுலாப் பயணிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது, சுற்றுலாத் துறையில் பணியாற்றும் உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.


மேலும், சில சுற்றுலாப் பயணிகளுக்கு முச்சக்கரவண்டி ஓட்டுவதற்கு போதிய அனுபவம் இல்லாததால், விபத்துகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


இதனிடையே, நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடவடிக்கை நேற்று (03) முதல் ஆரம்பிக்கப்பட்டது. இது, கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சிறப்பு சேவை மையம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.



டிஜிட்டல் பொருளாதார மாதமாக அறிவிக்கப்பு...

     


டிஜிட்டல் பொருளாதார அமைச்சு  செப்டம்பர் மாதத்தை டிஜிட்டல் பொருளாதார மாதமாக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.


இலங்கை டிஜிட்டல் ரீதியாக வலுவூட்டப்பட்ட பொருளாதாரமாக மாறுவதை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவுக்கு இணங்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு செப்டம்பர் மாதத்தை டிஜிட்டல் பொருளாதார மாதமாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


இந்த முயற்சி குறித்துப் பேசிய அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால, இந்த ஒரு மாத கால பிரசாரம், டிஜிட்டல் மாற்றத்தின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, தேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் செயற்பாட்டு கட்டமைப்புகளையும் உருவாக்குவதில் கவனம் செலுத்தும் என்று கூறினார்.



 AI இன் உதவியுடன் இசை



தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத். 

 

தற்போது தமிழில் கூலி, மதராஸி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2, ஜனநாயகன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். 

 

இந்த நிலையில் கூலி திரைப்படம் தொடர்பான ஒரு நேர்காணலில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தித் தான் இசையை உருவாக்குவதாக அனிருத் தெரிவித்துள்ளார். 

 

சமீபத்தில் ஒரு பாடலுக்கு இசையமைக்கும் போது இரண்டு வரிகளுக்கு இசையமைக்கச் சிக்கல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

 

இந்த நிலையில் அவர் சாட் ஜிபிடியிடம் (chatgpt) அந்த இரண்டு வரிகளையும் கொடுத்து உதவுமாறு கேட்டதாகவும், சாட் ஜிபிடி 10 தெரிவுகளை அனுப்பியதாகவும், அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தனது இசைப் பணியைத் தொடர்ந்ததாகவும் அனிருத் தெரிவித்துள்ளார். 

 

அத்தோடு சில சமயங்களில் சரியான இசைத் தொகுப்புகள் கிடைக்காமல் இருக்கும் போது, இதுபோன்று செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியை நாடுவதில் எந்த தயக்கமும் தனக்கு இல்லை என்றும் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.



மலசலகூட குழியில்  --  சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்



பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிருவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த சம்பவம் நேற்று (3) மாலை 05.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சிறுவனின் தந்தை வீடமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை சிறுவன் கை கழுவுவதற்காக வீட்டின் பின்புறத்திற்கு சென்ற போது, அங்கு நீர் நிரம்பி காணப்பட்ட குழியில் தவறிவிழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


தனது மகனை காணவில்லையென சிறுவனின் தந்தை இரண்டு முறைக்கு மேல் கூக்குரல் ஏழுப்பியும் மகன் வராததை தொடர்ந்து, தந்தை வீட்டின் பின்புறமாக சென்று பார்த்த போது சிறுவனின் பாதணிகள் இரண்டும் மிதந்து கொண்டு இருந்ததாகவும் அதன் பிறகு சிறுவனை மீட்டெடுத்து டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுவன் மரணித்திருந்ததாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 


இதேவேளை, கிவ் தமிழ் வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி கற்று வந்த லியோ பெற்ரீக் எலன் சசன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த சம்பவம் இந்த தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



தலைமை ஆசிரியரை மாற்ற ---  விஷம் கலந்த சம்பவம்!



No comments

Theme images by fpm. Powered by Blogger.