முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்......!

     முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்......!





முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்......!





 முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்......!


முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்......!



பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர் தொடர்பிலான காட்சிகள் கந்தானை நகரில் பதிலாகியுள்ளது.


சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவி வரும் இந்த காட்சியில், அந்த நபர் தனது மிதிவண்டியின் கைப்பிடியின் இருபுறமும் தனது ஆடைகளைப் பிடித்துக்கொண்டு அமைதியாக தனது மிதிவண்டியை மிதிப்பது காட்டப்பட்டுள்ளது.


பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம், குடியிருப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த நபரை அடையாளம் காணவும், ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கவும் பொலிஸார் தற்போது காட்சிகளை மதிப்பாய்வு செய்து வருகின்றனர்.



பலத்த மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை



பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து 10 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இன்று இரவு 11.00 மணி வரை இவ் எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. 


இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


அதன்படி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.


 மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை



மத்திய மாகாணத்தின் மேற்கு சரிவுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கொத்மலை மற்றும் லக்சபான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளில் திறக்கப்பட்டுள்ளன. 

 

இந்நிலையில், இந்த நீர்த்தேக்கங்களுக்கு அருகில் வசிப்பவர்களும், அதன் நீரைப் பயன்படுத்துபவர்களும் அவதானத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும், அப்பகுதிக்கு சுற்றுலா செல்பவர்கள் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீராடச் செல்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.



68 பேர் கடலில் மூழ்கினர்



ஏமன் அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 74 பேர் காணாமல் போயுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இடம்பெயர்வு நிறுவனம் (IOM) தெரிவித்துள்ளது.


ஷமொத்தம் 154 பேர் பயணித்த இந்த படகு, ஏமனின் தெற்கு அப்யான் மாகாணத்தில் உள்ள கான்ஃபார் மாவட்டத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) அதிகாலை கடலுக்கு புறப்பட்டு, அரபு வளைகுடா நாடுகளை அடைய முயன்றபோது விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.


உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் எத்தியோப்பியாவைச் சேர்ந்தவர்கள் எனவும், காயமடைந்தவர்கள் ஜிஞ்சிபார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 54 உடல்கள் கடற்கரையில் ஒதுங்கியுள்ளன.


மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வகை படகுகளில் பயணிக்கும்போது அதிக எண்ணிக்கையிலான குடியேறிகள் பாதுகாப்பின்றி கடத்தல்காரர்களால் அனுப்பப்படுவது சாதாரணமாகிவிட்டுள்ளது.


கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஏமன் வழியாக வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடி புறப்படும் குடியேறிகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். கடந்த மாதங்களிலும் ஏமன் கடற்பகுதியில் இத்தகைய படகு விபத்துகள் பல நிகழ்ந்துள்ளன. மார்ச் மாத இதேபோல்  நான்கு படகு விபத்தில் இருவர் உயிரிழந்தும், 186 பேர் காணாமல் போனதாகவும் IOM தெரிவித்துள்ளது. மனிதக் கடத்தலின் பயங்கரமான விளைவுகளை  இந்த சம்பவம், சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.



 சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்   --- மலசலகூட குழியில் இருந்து 


பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிருவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த சம்பவம் நேற்று (3) மாலை 05.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சிறுவனின் தந்தை வீடமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை சிறுவன் கை கழுவுவதற்காக வீட்டின் பின்புறத்திற்கு சென்ற போது, அங்கு நீர் நிரம்பி காணப்பட்ட குழியில் தவறிவிழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


தனது மகனை காணவில்லையென சிறுவனின் தந்தை இரண்டு முறைக்கு மேல் கூக்குரல் ஏழுப்பியும் மகன் வராததை தொடர்ந்து, தந்தை வீட்டின் பின்புறமாக சென்று பார்த்த போது சிறுவனின் பாதணிகள் இரண்டும் மிதந்து கொண்டு இருந்ததாகவும் அதன் பிறகு சிறுவனை மீட்டெடுத்து டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுவன் மரணித்திருந்ததாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 


இதேவேளை, கிவ் தமிழ் வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி கற்று வந்த லியோ பெற்ரீக் எலன் சசன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


இந்த சம்பவம் இந்த தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்......!

No comments

Theme images by fpm. Powered by Blogger.