பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு! ( க.பொ.த.உயர்தரப் )
பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு! ( க.பொ.த.உயர்தரப் )
பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு! ( க.பொ.த.உயர்தரப் )
2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி ஓகஸ்ட் 12ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி ஓகஸ்ட் 7 ஆம் திகதி ஒன்லைனில் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான மறுமதிப்பீட்டு முடிவுகளால் பாதிக்கப்பட்ட விண்ணப்ப தாரர்களுக்கு இந்த நீடிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேலும் நீடிப்புகள் வழங்கப்படாது என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
பலாங்கொடையில் காட்டுத் தீ - ஹெலிகொப்டர் களத்தில்....
பலாங்கொடை, ஹால்பே ரத்தனகொல்ல மலையில் இன்று (08) திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவலுக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், தீயை அணைக்க இராணுவத்தினரும் உள்ளூர்வாசிகளும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
தீயை அணைக்க பெல் 412 விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வரி தொடர்பில் -- இறைவரித்திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு....
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட வரி செலுத்த வேண்டிய அறிக்கையை வரி செலுத்துவோர் ஓகஸ்ட் 15 அன்று அல்லது அதற்கு முன்னர் மின்னணுமுறையில் சமர்ப்பிக்குமாறு இறைவரித்திணைக்களம் நினைவூட்டலொன்றை வழங்கியுள்ளது.
இதன்படி 2024/2025 ஆம் ஆண்டுக்கான Y/A வருமான அறிக்கையை தாக்கல் செய்வதற்கு இலத்திரனியல் சேவைகளை தற்போது அணுகமுடியும் என்றும், அவை நவம்பர் 30, 2025 அன்று அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எளிமைப்படுத்தப்பட்ட வருமானம் உட்பட நிறுவன வருமான வரி, கூட்டாண்மை வருமான வரி மற்றும் தனிநபர் வருமான வரி ஆகியவற்றிற்கு காலக்கெடு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமதமாக பணம் செலுத்தினால் வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும் பணம் செலுத்தும் போது சரியான வரி வகை மற்றும் கட்டண காலக் குறியீடுகளைப் பயன்படுத்துமாறும் திணைக்களம் தெரவித்துள்ளது.
இதேவேளை புதுப்பிக்கப்பட்ட தகவலுக்கு இறைவரித்திணைக்களத்தின் வலைதளத்தைப் பார்வையிடுமாறு வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம்...
சுகாதார அமைச்சின் சில உயர் அதிகாரிகளின் தீர்மானத்தால் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள சுமார் 135 வைத்தியசாலைகள் மூடப்படக் கூடிய அபாயம் காணப்படுகிறது.
ராஜித, கெஹெலிய காலங்களில் அதிகாரிகள் செய்ததையே தற்போதும் செய்கின்றனர். சுகாதார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அமைச்சரிடமிருந்து தகுந்த பதில் கிடைக்காவிட்டால் திங்கட்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் சுகாதார கட்டமைப்பில் நெருக்கடி ஏற்படும். எது எவ்வாறிருப்பினும் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியாலங்கள் தடையற்ற மருத்துவ சேவையை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
நாட்டில் 23,000 சிரேஷ்ட வைத்தியர்கள் காணப்படுகின்றனர். வருடாந்தம் 2,000 வைத்தியர்கள் இந்த கட்டமைப்பில் இணைகின்றனர். எனவே இவர்களுக்கான நியமனங்களை முறையாக வழங்க வேண்டியதும் அவசியமானதாகும்.
அத்தோடு இடமாற்றங்களும் முறையாக இடம்பெற வேண்டும். அவ்வாறு இடம்பெற்றால் மாத்திரமே சுகாதார கட்டமைப்பின் இருப்பினை தீர்மானிக்க முடியும். சுகாதார அமைச்சின் சுகாதார சேவைப்பிரிவின் பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டவர்களின் செயற்பாடுகளால் 23,000 சிரேஷ்ட வைத்தியர்களின் இடமாற்றங்கள் முற்றாக சீர்குலைந்துள்ளன. இது சுகாதார அமைச்சினால் உருவாக்கப்பட்ட ஒரு குழப்பமாகும்.
ஆனால் சுகாதார அமைச்சரிடமிருந்து இதற்கான ஸ்திரமான தீர்வு கிடைக்கவில்லை. இந்த பிரச்சினை தீவிரமடைந்தமைக்கான காரணமும் இதுவேயாகும். 2025ஆம் ஆண்டுக்கான இடமாற்ற பட்டியல் 9 மாதங்கள் தாமதமாகவே வெளியானது.
அதில் சுமார் 5,000 வைத்தியர்கள் உள்ளடங்குகின்றனர். அந்த பட்டியலில் காணப்பட்ட 78 வெற்றிடங்கள் சட்டத்துக்கு முரணாக தன்னிச்சையாக புறக்கப்பட்டுள்ளன. இதனால் குறித்த 78 வைத்தியர்கள் மாத்திரமின்றி, பட்டியலுள்ள அனைவரும் பாதிக்கப்படுவர்.
அது மாத்திரமின்றி பின்தங்கிய பிரதேசங்களுக்கான வைத்தியர் நியமனங்களும் இவ்வாறு தன்னிச்சையாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இதனால் எதிர்வரும் ஓரிரு மாதங்களில் பிரதான வைத்தியசாலைகள் உட்பட சுமார் 135 பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலைமை ஏற்படவுள்ளது.
ராஜித, கெஹெலிய காலங்களில் அதிகாரிகள் செய்ததையே தற்போதும் செய்கின்றனர். அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவையும் அவர்கள் இந்த யுகத்துக்கே அழைத்துச் செல்லவே முற்படுகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு அமைச்சரிடமிருந்து தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்குள் பிரச்சினைகளுக்கான முறையான தீர்வு வழங்கப்படாவிட்டால் எமது தீர்மானத்திலும் எவ்வித மாற்றமும் இல்லை என்றார்.
இரு வாகனங்களை வழங்கிய அமெரிக்கா..
அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இரண்டு உயர் மதிப்புள்ள விமான எரிபொருள் நிரப்பும் வாகனங்களை இலங்கை விமானப்படை (SLAF) பெற்றுள்ளது.
இவ்விடயம் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பதாக உள்ளது .
இலவசமாக வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் வாகனங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
ஒரு அறிக்கையில், அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்க தூதரகத்தின் பங்களிப்புக்காக இலங்கை விமானப்படை தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.
பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீடிப்பு! ( க.பொ.த.உயர்தரப் )
No comments