புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் மிக முக்கிய அறிவிப்பு..... - !

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் மிக முக்கிய அறிவிப்பு..... - !





புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் மிக முக்கிய அறிவிப்பு..... - !




 

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் மிக முக்கிய அறிவிப்பு..... - !



2025 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை (10) நடைபெறவுள்ளது. 


இது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் வகையில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தலைமையில் இன்று (09) காலை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. 


இதன்போது கருத்து வௌியிட்ட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், 


 பரீட்சை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. எனினும், அனைத்து மாணவர்களும் காலை 8.30 மணிக்குள் அந்தந்த பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும். மாணவர்கள் காலை 9 மணிக்குள் பரீட்சை மண்டபத்தில் அமர வேண்டும். 


 இரண்டாம் பகுதி வினாத்தாள் முதலில் மாணவர்களுக்கு வழங்கப்படும். இரண்டாம் பகுதி வினாத்தாள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி 10.45 மணிக்கு நிறைவடையும். 


 அதன் பிறகு அரை மணி நேரம் இடைவேளை வழங்கப்படும். 


 முதலாம் பகுதி வினாத்தாள் காலை 11.15 மணிக்கு வழங்கப்படும். இந்த வினாத்தாள் ஒரு மணி நேரம் கொண்டதாகும். குறித்த வினாத்தாள் மதியம் 12.15 மணிக்கு நிறைவடையும். 


பரீட்சை இடம்பெறும் சந்தர்ப்பங்களின் போது ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால், 117 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு அளிக்கலாம். இதற்காக விசேட திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.



பிரபல இந்திய நடிகை தமன்னா  --  இன்று இலங்கை வரவுள்ளார் 



பிரபல இந்திய நடிகை தமன்னா பாட்டியா இன்று மாலை (09) இலங்கைக்கு வருகைதர உள்ளார். 


இந்திய விளம்பரம் ஒன்றின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வருகிறார். 


இந்த விளம்பரத்தை இந்தியாவின் Big Momma தயாரிப்பு நிறுவனம் மற்றும் இலங்கையில் வெளிநாட்டு படங்கள் மற்றும் ஏனைய தயாரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமான ASIAN FILM CREW தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. 


'Mysore Sandal Soap' தொடர்பான விளம்பரத்தில் நடிகை தமன்னா பங்கேற்கவுள்ளதோடு, இந்த படப்பிடிப்பு அனுராதபுரத்தை மையமாகக் கொண்ட Palm Garden Village ஹோட்டலில் நடைபெறவுள்ளது. 


நடிகை தமன்னா இதற்கு முன்பு பல முறை இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 


தற்போது படப்பிடிப்பிற்காக இலங்கை வரும் நடிகை தமன்னா, சில நாட்கள் இங்கு தங்கியிருக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



மட்டக்களப்பில் சம்பவம்  -- 12 வயது சிறுவன்  தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு 



மட்டக்களப்பு - வவுணதீவு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


நேற்று (08) மாலை குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக வவுணதீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.


இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் சம்பவதினமான நேற்று மாலை 5.00 மணியளவில் தந்தாமலை கோவிலுக்கு போகப் போவதாக பெற்றோரிடம் கோரிய நிலையில் அதற்கு பெற்றோர் நாளை சனிக்கிழமை தீர்த்த உற்சவத்துக்கு போகலாம் என தெரிவித்திருந்தனர்.


இந்தநிலையில் மனமுடைந்த சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளான்.

சாளம்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த சிறுவனின் சடலத்தை மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



மனைவியின் கழுத்தை வெட்டிய கணவன்



பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் பேருந்தில், கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் வெட்டியதில், அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம், பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை (09) காலை இடம்பெற்றுள்ளது. 


காயமடைந்த மனைவி தியத்தலாவை ஆதார மருத்துவமனையிலும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டதாக பண்டாரவளை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 


இரண்டு குழந்தைகளின் தாயான மனைவிக்கு 32 வயது, அவர்கள் பண்டாரவளையில் உள்ள லியங்கஹவெல பலகல பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். 


குடும்ப தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது, மேலும் கணவர் பேருந்தின் பின் இருக்கையில் இருந்து தனது மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். சந்தேக நபரான கணவர் தற்போது பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டு சமீபத்தில் நாடு திரும்பியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பண்டாரவளை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இறக்குமதி வரிகளைக் குறைக்க யோசனை -- புதிய வாகனங்களுக்கான 



புதிய வாகனங்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைப்பதற்காக, பழைய வாகனங்களை நியாயமான விலையில் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று உலகளாவிய இலங்கை வணிக பேரவை கூட்டமைப்பு (GFSLBC) முன்மொழிந்துள்ளது.


இந்தப் பிரச்சினை குறித்துப் பேசிய அதன் பொதுச் செயலாளர் சஜீவ் க்ஷத்ரிய ராஜபுத்ர, தற்போதைய 300% இறக்குமதி வரி மற்றும் உள்ளூர் சந்தையில் உயர்த்தப்பட்ட மறுவிற்பனை விலைகளை எடுத்துரைத்தார்.


எதிர்கால இறக்குமதிகளில் வரிச் சலுகைகள் மூலம் இழப்புகளை ஈடுசெய்ய ஏற்றுமதியாளர்களுக்கு அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


இலங்கையில் பழைய வாகனங்கள் அதிக விலை கொண்டவை மற்றும் இறுதியில் பயன்படுத்த முடியாததாகிவிடும், என்று அவர் கூறினார். விலைகள் செயற்கை பணவீக்கத்தை அல்ல, உண்மையான மதிப்பைப் பிரதிபலிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


வெளிநாட்டு வணிக சமூகங்களுடன் கலந்தாலோசித்து அவர்களின் அனுபவம் மற்றும் நவீன வணிக நுண்ணறிவுகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.


அரச - தனியார் ஒத்துழைப்பை மேம்படுத்த அந்த கூட்டமைப்பு அரசாங்கத்திடமிருந்து தெளிவான ஆணையை, உலகளாவிய கிளையை உருவாக்குவதையும், ஜனாதிபதி செயலகத்தை நேரடியாக அணுகுவதையும் கோரியுள்ளது.


இலங்கை முன்னேற நாங்கள் உதவ விரும்புகிறோம்" என்றும் சஜீவ் க்ஷத்ரிய ராஜபுத்ர தெரிவித்தார்.



புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் மிக முக்கிய அறிவிப்பு..... - !



No comments

Theme images by fpm. Powered by Blogger.